தொழிலாளர் சேமநல நிதியம் (இ.பி.எப்.ஓ.,), 5 கோடிக்கும் அதிகமான
சந்தாதாரர்களுக்கு,நிரந்தர கணக்கு எண் வழங்க திட்டமிட்டுள்ளது. இதன்
மூலம், ஒருவர், வேறுநிறுவனத்திற்கு மாறினாலும், இ.பி.எப்., நிரந்தர
கணக்கு எண்ணை, தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
தற்போது, ஒரு நிறுவனத்தில் இருந்து, வேறு நிறுவனத்திற்கு மாறுபவர், தன்,
பழைய நிறுவனத்தின் இ.பி.எப்., கணக்கை, புதிய நிறுவனத்திற்கு, இணையதளம்
வாயிலாகவே மாற்றிக் கொள்ளலாம். இந்த வசதி, கடந்த 2013ம் ஆண்டு,
அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இருந்த போதிலும், பெரும்பாலான நிறுவனங்கள், அவற்றின் டிஜிட்டல்
கையொப்பங்களை, இ.பி.எப்.ஓ.,விடம் இன்னும் பதிவு செய்யாமல் உள்ளன. இதனால்,
அந்நிறுவனங்களில் இருந்து, வேறு நிறுவனங்களுக்கு மாறுவோர், இ.பி.எப்.,
கணக்கை மாற்ற, உரிய ஆவணங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டி உள்ளது.
இப்பிரச்னையை தீர்க்கும் நோக்கில் தான், இ.பி.எப்.ஓ., நிரந்தர கணக்கு எண்
திட்டம் அறிமுகமாக உள்ளது. இதனால், ஒருவர் எங்கு பணியாற்றினாலும்,
அவரிடம் பிடித்தம் செய்யப்படும், தொகை, இ.பி.எப்.ஓ., நிரந்தர கணக்கு
எண்ணின் கீழ்,
இணையதளம் வாயிலாகவே வரவு வைக்கப்படும்
No comments:
Post a Comment