Wednesday, February 5, 2014

இரட்டைப்பட்ட வழக்கு இறுதி தீர்ப்பு: இரட்டைப்பட்டம் செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவு

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கின் இறுதிதீர்ப்பு இன்றுகாலை சற்று முன்
வெளியாகியுள்ளது. இன்றுசென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள்
மாண்புமிகு தலைமை நீதிபதி மற்றும் சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய
அமர்வு தீர்ப்புவழங்கியது. அதில் இரட்டைப்பட்டம் செல்லாதுஎனவும், பணி
நியமனம் மற்றும் பதவிஉயர்விற்கு இனி மூன்று வருட
பட்டப்படிப்புமட்டுமேதகுதியானது எனவும் இதை எதிர்த்துதொடரப்பட்ட மனு
தள்ளுபடிசெய்யப்படுகிறது என நீதியரசர்கள்தங்களதுதீர்ப்பில் தெரிவித்தனர்.
ஒருவருட பட்டம் சார்பான அனைத்துவழக்குகளும் தள்ளுபடிசெய்யப்பட்டது.
தீர்ப்புநகல் நாளைமறுநாள் வெளியாகும்என தகவல் வெளியாகியுள்ளது.மேலும்
இத்தீர்ப்புசார்பான முழு விவரம் விரைவில் வெளியிடப்படும்
என்றுதெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment