Wednesday, February 12, 2014

"டெட்' தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரமாக அதிகரித்துள்ளது, 15ஆயிரம் பேருக்கு மட்டுமே பணி: மீதமுள்ள60 ஆயிரம் ஆசிரியர்களின் நிலை என்ன?

அரசுஅறிவித்த மதிப்பெண் சலுகைக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில்
தேர்ச்சிபெற்றவர்களின் எண்ணிக்கை 75ஆயிரமாக அதிகரித்துள்ளது.இந்த ஆண்டு
15 ஆயிரம் பட்டதாரி,
இடைநிலைஆசிரியர்களின் பணியிடங்களேஉள்ளதால் மீதமுள்ள60ஆயிரம்
ஆசிரியர்களின் நிலைஎன்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த75 ஆயிரம் பேரும் ஆசிரியர்களாகும் தகுதியைமட்டுமே பெற்றுள்ளனர்.
இப்போதுபணி நியமனம் செய்யப்படுபவர்கள் போக மீதமுள்ளவர்களுக்கு அரசுஉதவி
பெறும் பள்ளிகள்,தனியார் பள்ளிகளில்பணி நியமனங்களில் முன்னுரிமை
கிடைக்கும். மேலும் அடுத்தஆண்டுக்கான பணி நியமனத்திலும்இவர்கள்
பரிசீலிக்கப்படுவார்கள் எனஆசிரியர் தேர்வுவாரிய அதிகாரிகள்
தெரிவித்தனர்.இப்போதுதேர்ச்சி பெற்ற 75 ஆயிரம் பேருக்கு முதலில் தகுதிச்
சான்றிதழ் வழங்கப்படும். அதன்பிறகே, பட்டதாரிமற்றும் இடைநிலைஆசிரியர் பணி
நியமனத்துக்குதனியாக அறிவிப்புவெளியிடப்படும் எனவும்அதிகாரிகள்
தெரிவித்தனர்.
2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை
அறிவிக்கப்பட்டதை அடுத்துதேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 75ஆயிரமாக
உயர்ந்துள்ளது.இந்த ஆண்டு நியமிக்கப்படும் 15 ஆயிரம் ஆசிரியர்களைத் தவிர
மீதமுள்ளவர்களின் நிலைஎன்ன என்றுதேர்வர்கள் சந்தேகம் எழுப்பினர்.இது
தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோதுஅவர்கள் கூறியது:
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதுஎன்பது1 முதல் 8ஆம் வகுப்பு
வரைஆசிரியராவதற்கான அடிப்படைத்தகுதி மட்டுமே. அந்த வகையில்இந்த
75ஆயிரம்பேரும் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும்
தகுதியைப்பெற்றுள்ளனர்.முதலில் இவர்களுக்குஆசிரியர் தகுதிச் சான்றிதழ்
வழங்கப்படும். பிறகு, பட்டதாரிஆசிரியர் மற்றும் இடைநிலைஆசிரியர் பணி
நியமனத்துக்கான அறிவிப்புதனியாக வெளியிடப்படும்.அறிவிப்பு
வெளியிடப்பட்டவுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும்
பணி நியமனம் கோரி ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். பட்டதாரிமற்றும்
இடைநிலைஆசிரியர்கள் இந்த ஆண்டு "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை அடிப்படையில்
தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.ஆசிரியர் தகுதித் தேர்வுமதிப்பெண், பிளஸ் 2,
பட்டப் படிப்புமற்றும் பி.எட்.மதிப்பெண் அடிப்படையில்"வெயிட்டேஜ்'
மதிப்பெண் வழங்கப்பட்டுபட்டதாரிஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுவர்.
இடைநிலைஆசிரியர்கள்:
ஆசிரியர் தகுதித் தேர்வுமதிப்பெண், பிளஸ் 2, பட்டயப் படிப்புஅடிப்படையில்
"வெயிட்டேஜ்' மதிப்பெண் இடைநிலைஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுவர்.தகுதியான
விண்ணப்பதாரர்களில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையில்
தேர்வுசெய்யப்பட்டவர்கள் போக, எஞ்சியவர்கள் தேர்வுசெய்யப்படாதவர்களாகக்
கருதப்படுவர்.இவர்கள் அனைவரும் அடுத்துநடைபெறும்ஆசிரியர் தகுதித்
தேர்வில் தங்களதுமதிப்பெண்ணை அதிகரிப்பதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வை
எழுதலாம்.அதேநேரத்தில், ஒருதேர்வில் பெற்ற தேர்ச்சி ஏழரை ஆண்டுகளுக்குச்
செல்லும்என்பதால், அடுத்துவரும் ஆசிரியர் பணி நியமனங்களுக்கும்இவர்கள்
விண்ணப்பிக்கலாம். அதோடு, அரசுஉதவிப் பெறும் பள்ளிகள், தனியார்
பள்ளிகளில்பணி நியமனம் பெறுவதற்கானதகுதியையும் இவர்கள்பெறுவார்கள்.
அரசுப்பள்ளிகளில்ஆசிரியர் நியமனம் என்பதுஅப்போதுநடைமுறையில் உள்ள
அரசாணையின் அடிப்படையில்இருக்கும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி
பெறுவதுஎன்பதுபணி நியமனத்துக்காக விண்ணப்பிக்கும் தகுதியைமட்டுமே
வழங்கும். பணி நியமனத்தைவழங்காது.ஆசிரியர் தகுதித் தேர்வுதொடர்பான
வழக்குகள் நீதிமன்றத்தில்இன்னமும் நிலுவையில்உள்ளன.இந்த வழக்குகள்முடிந்த
பிறகு, இதுகுறித்துதெளிவான அறிவிப்புவெளியிடப்படும் எனவும்அவர்கள்
தெரிவித்தனர்.கடந்த 2012 ஆம் ஆண்டு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை விட
தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
எனவே, இதில்ஆசிரியர் தேர்வு, தேர்ச்சி பெற்றவர்களின் நிலைபோன்ற
பிரச்னைகள் எழவில்லை.இப்போது 2013 ஆம் ஆண்டு நடைபெற்றஆசிரியர் தகுதித்
தேர்வில் 29ஆயிரம்பேர் தேர்ச்சி பெற்றனர். தகுதித் தேர்வில் 5சதவீத
மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டதையடுத்து46 ஆயிரம் பேர் கூடுதலாகத் தேர்ச்சி
பெற்றுள்ளனர்.இவர்களில் இப்போது15ஆயிரம் பேருக்கு மட்டுமே பணி
வழங்கப்படும் என்றுதெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment