டி.என்.பி.எஸ்.சி மூலம் நடத்தப்படும் குரூப் 2- ஏ தேர்வு மே மாதம் 18ஆம்
தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான விண்ணப்பம் இன்று முதல்
அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளப்படும். டி.என்.பி.எஸ்.சி
இணையதளத்தில் சென்று இதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணத்தை அஞ்சலகம் அல்லது வங்கி மூலம் செலுத்தலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுத்துறையிலுள்ள,2 ஆயிரத்து 269
காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது.எழுத்தர்,
உதவியாளர் பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படவுள்ளது. நேர்காணல் இல்லாமல்
எழுத்துத் தேர்வு மூலம் தேர்வாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த
தேர்வினை எழுத பட்டப்படிப்பு தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
No comments:
Post a Comment