Sunday, February 9, 2014

பொதுத் தேர்வு பதிவெண் ஒதுக்கீட்டில் மாற்றம் : தொடருதுதேர்வுத் துறையின்"புதுமை

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், மாணவர்களுக்கு
பதிவெண் ஒதுக்கீடு செய்வது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசு பொதுத்
தேர்வுகளில், அடுத்தடுத்து பல மாற்றங்கள் செய்யப்பட்டுவருகின்றன.
தற்போது, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வுக்கான
விடைத்தாள்,சம்பந்தப்பட்ட மாணவரின் "போட்டோ' இருக்கும் வகையில் மாற்றி
அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுஎழுதியவுடன், தேர்வுமையத்திலேயே, மாணவர்
பெயர்,பள்ளிபெயர், பதிவெண் பகுதியை,அறைகண்காணிப்பாளர்
கிழித்துவைத்துக்கொள்ளும் வகையிலும், மாணவர் எழுதிய
விடைத்தாளை"பார்கோடிங்' முறையில்மட்டுமே,அடையாளம் காணும் வகையிலும்
மாற்றப்பட்டுள்ளது.மேலும், மாணவர்களுக்கு பதிவெண்கள் வழங்கும்முறையிலும்
புதுமைசெய்யப்பட்டுள்ளது.
இதன்படி, தேர்வுத் துறையால் ஒதுக்கப்பட்டமையங்களில், வேறுபள்ளிகளைசேர்ந்த
மாணவர்கள் சேர்க்கப்பட்டால், அந்த மையத்தில்தேர்வுஎழுதும்
அனைத்துமாணவர்களுக்கும் "ரேண்டம்' முறையில், பதிவெண் ஒதுக்க
உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், ஒரே பள்ளிமாணவர்களுக்கு, அடுத்தடுத்த
தேர்வுஎண்கள், இனிமேல் கிடைக்காது.
இதுகுறித்துகல்விஅதிகாரி ஒருவர் கூறியதாவது: நூறு சதவீதம் தேர்ச்சிக்காக,
சுமாராக படிக்கும் மாணவர், நன்றாக படிக்கும் மாணவரை பார்த்து, ஒரு
மதிப்பெண் பகுதி கேள்விகளை எழுத, சில பள்ளிகளில் ஏற்பாடு
செய்துவிடுகின்றனர். மேலும்,"அறை கண்காணிப்பாளர்களே ஒரு மதிப்பெண்
கேள்விக்கான பதிலை, மாணவர்களுக்கு கூறி விடுகின்றனர்' என்ற குற்றச்சாட்டு
உள்ளது. இதை தவிர்க்கும் வகையில் தான், இந்த புதிய முறையை, இயக்குனர்
தேவராஜன், இந்த ஆண்டு அறிமுகப்படுத்தி உள்ளார். பதிவெண்களை அவரே
ஒதுக்கீடும் செய்கிறார். வேறு வேறு பள்ளி மாணவர்களை கலந்து உட்கார
வைப்பதால், விதிமீறல்கள் தடுக்கப்படும், என்றார்.

No comments:

Post a Comment