Saturday, February 8, 2014

"ஆசிரியர்கள் ஆன்-லைன் பதிவைபள்ளிகளிடம் ஒப்படைக்கக் கூடாது"

"ஒன்றிய அளவிலான, தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின்
விபரங்களைஆன்-லைனில் பதிவேற்றம்செய்வதைஅந்தந்த பள்ளிகளிடம் ஒப்படைக்கக்
கூடாதுஎனதொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
"ஒன்றிய அளவில்தொடக்கமற்றும் நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும்
ஆசிரியர்களின், 25 வகையான விபரம், உதவிதொடக்க கல்வி
அலுவலகத்தில்செயல்படும் கல்வி தகவல் மேலாண்மை முறை(இ.எம்.ஐ.எஸ்.,) மூலம்
ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுவருகிறது. இதை உள்ளீடு
செய்யும்அதிகாரம், அந்தந்த உதவிதொடக்க கல்வி அலுவலகத்துக்கு, மட்டுமே
உள்ளது.
ஆசிரியர்களால் அளிக்கப்படும் விபரங்கள், உதவி கல்விஅலுவலகத்தில்
பராமரிக்கப்படும்,ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டுடன்,சரிபார்த்த பின்னரே,
இணையதளத்தில் உள்ளீடு செய்யவேண்டும். ஆனால், சில ஒன்றியங்களில், துவக்க
மற்றும் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, நேரடியாக உதவி
கல்விஅலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள,"யூசர்ஐ.டி.,
பாஸ்வேர்டு"வழங்கப்பட்டு, அப்பள்ளியில் பணிபுரியும், ஆசிரியர்களின்
விபரங்கள், இணையதளத்தில் உள்ளீடு செய்யப்படுகிறது .
இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குனரகத்துக்கு, பல்வேறு
தரப்பில்புகார்சென்றது. இதையடுத்து, தொடக்க கல்வி இயக்குனரகம்சார்பில்,
மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்குஅனுப்பியுள்ள உத்தரவில்,"தேசிய தகவல்
மையத்தால்,உதவி தொடக்க கல்வி அலுவலகங்கள்மட்டுமே, பயன்படுத்தும்வகையில்,
மென்பொருள் கட்டமைப்புவடிவமைக்கப்பட்ட
ுள்ளது. பள்ளி தலைமைஆசிரியர்கள், நேரடியாக அப்பள்ளிகளில் பணிபுரியும்
ஆசிரியர்களின் விபரங்களைஇணையதளத்தில் உள்ளீடு செய்தல்கூடாது.ஒன்றிய
அளவில் செயல்படும் "இ.எம்.ஐ.எஸ்" குழுக்கள் மூலம், மட்டுமே மேற்கொள்ள
வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment