Tuesday, August 12, 2014

வெய்டேஜ் பிரச்சனை

வெய்டேஜ் பிரச்சனை1. தற்பொழுது உள்ள சூழலிலும்,எதிர்காலத்திலும் இடை நிலை ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.2. முக்கியமாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பை திடீரென நீக்கியது. இதனால் 15 மற்றும் 20 ஆண்டுகள் வேலைவாய்ப்புஅலுவலகத்தில் தொடர்ந்து பதிந்துவந்து ஆசிரியர் பணி கிடைக்கும் என்ற ஏமாற்றமும் மன வலியுமே மிச்சம்.வெய்டேஜ் பிரச்சனை1. தற்பொழுது உள்ள வெய்டேஜ் முறையால் +2 மற்றும் ஆசிரிய பட்டய மதிப்பெண்ணை அதிகப்படுத்த வாய்ப்பில்லை2. வெய்டேஜ் முறையில் தற்பொழுது ஆசிரியர் பணி கிடைக்கவில்லையெனில் அடுத்து வரும் தகுதித்தேர்வில்வெற்றி பெறுபவர்களுடன் போட்டி போடவேண்டிய சூழல் ஏற்படும்.அப்பொழுதும் இதே நிலமைதான்.ஆக எந்த காலத்திலும் ஆசிரியர் பணிகிடைக்க வாய்ப்பே இல்லை.3. இப்பொழுது உள்ள பாட முறைக்கும் 15 மற்றும் 20 வருடங்களுக்கு முன்பு உள்ள பாட முறைக்கும் உள்ள வேறுபாடு, பாட பிரிவுகளின் வேறுபாடு மற்றும் செய்முறை தேர்வு மதிப்பெண்களின் வேறுபாடு இவற்றால் தகுதியான வெய்டேஜ் மதிப்பெண்ணை கண்க்கிடுவது சரியானதாக இருக்க முடியாது.4. அப்பொழுது உள்ள சூழ் நிலைவேறு. இப்பொழுது கம்யூட்டர்,இன்டர்னெட் வசதிகள் அதிகம்.வாய்ப்புகளும் வசதிகளும் தற்பொழுது அதிகமாக உள்ளது.5. 2010 கல்விக்கொள்கையின்படி நடப்பு ஆண்டின் அறிவை சோதிக்கவேண்டுமே தவிர பழைய மதிப்பெண்களை வெய்டேஜ் முறைக்கு எடுப்பது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல.6. தேர்விற்கு முன்பாக அறிவிக்கவேண்டியGO க்களை நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் தமிழக அரசு அறிவித்ததது.7. தமிழக அரசு 5 சதவீத தளர்வை 2013 தேர்வர்க்கு மட்டும் கொடுத்து 2012 தேர்வர்களை ஏமாற்றியது. 2012 தேர்வர்களுக்கும் கொடுத்தால் 2012 இல் தேர்வாகி பணியில் உள்ள ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற காரணம். அப்படி கொடுத்தால் டி.ஆர்.பிக்கு வேலை பளு அதிகமாகும்.8. தமிழக அரசின் இது போன்ற முறையற்ற அறிவிப்புகளால் என்னைப்போன்றோர் பலர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எங்களது வாழ்வாதாரமும், உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளது9. ஆசிரியர் பணி வழங்க இவ்வளவு கால தாமதம் ஆனதற்கு காரணம் வெய்டேஜ் முறையாகும். இதற்கு 2012 ஆம் ஆண்டின் முறையில் (TET Pass + SENIORITY) ஆசிரியர் பணி வழங்கியிருந்தால் இப்படிப்பட்ட எந்த ஒரு பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது10. இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்குநிரந்தர தீர்வு காண தகுதித்தேர்வுஅறிவித்த ஆண்டிற்கு (2010)முன்பாக உள்ளவர்களுக்கு தகுதித்தேர்வு மதிப்பெண்+ வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்,(அல்லது)தகுதித்தேர்வு மதிப்பெண்+ வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி 50 சதவீதம் , வெய்டேஜ் முறையில் 50 சதவீதம் என்ற முறையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்.இந்த முறை அனைத்து தேர்வர்களுக்கும் பொதுவானதாகும்.யாரையும் பாதிக்காத முறையாகும்.

பொதுத்தேர்வுகளை காரணம் காட்டி மாணவர்களின் விளையாட்டு வாய்ப்புகளை தடுக்ககூடாது

பள்ளி கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களுக்கு ஒரு அறிக்கையை அனுப்பி உள்ளார். அந்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப போட்டிகளை நடத்த வேண்டும். வரும் அக்டோபர் 28ம் தேதி விளையாட்டு தினவிழாவைநடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்க வேண்டும். சர்வதேச அளவில் விளையாட்டில் பதக்கம் பெறும் திறமை வாய்ந்தவர்களை கண்டறியும் நோக்கத்துடன் இளம்வயது சிறுவர்,சிறுமியர் உடல்திறனை கண்டறிந்திட அவர்களை உரிய முறையில் தேர்வு செய்ய வேண்டும். ஆகஸ்ட் 2ம் வாரத்திற்குள் உடல் திறன் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். 6 முதல் 12ம் வகுப்பு வரை வாரத்திற்கு 2 உடற்கல்வி பாட வேளைகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். விளையாட்டிற்கான இட ஒதுக்கீட்டில் 9, 10, 11, 12ம் வகுப்புகளில் பெறக்கூடிய விளையாட்டு சான்றிதழ்கள் அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எனவே, பொதுத்தேர்வுகளை காரணம் காட்டி மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தடை செய்யக்கூடாது. ஒவ்வொரு நிலையிலும் வெற்றிபெறும் அணிகள் அடுத்த போட்டிகளில் கண்டிப்பாக பங்கேற்க செய்ய வேண்டும். அவ்வாறு பங்கேற்க செய்ய தவறும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளத


Monday, August 11, 2014

Tnptf kallakurichi secretary function


பணி நியமணம் பெறும் பட்டதாரி ஆசிரியர் பெறும் சம்பளம் எவ்வளவு?

PAY BAND PB2: 9300-34800+4600-PAY:9300+GRADEPAY 4600+DA+MA+HRAPAY :9300+4600=13900+100%DA=27800+880+100=28780M.A OR M.SC முடித்துள்ள ஆசிரியர்களின் ஊதியம் விபரம்PAY = 9300GRADE PAY = 4600TOTAL = 13900INCENTIVE 6% = 834 ROUNDUP 10RS 840TOTAL PAY = 14740-100%DA = 14740TOTAL = 29480HRA = 880MA = 100NET TOTAL = 30460

பி.எட். படிப்பு இரண்டாண்டாக அதிகரிப்பா?

பி.எட். படிப்புக்காக காலத்தை இரண்டு ஆண்டுகளாக அதிகரிக்கும் விஷயத்தில் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை எனவும், அது ஆய்வில் இருப்பதாகவும் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவை குழு துணைத் தலைவர் பாலபாரதி துணைக் கேள்வி எழுப்பினார். அப்போது, பேசிய அவர், தனியார் பி.எட்., கல்லூரிகளில் நியாயமற்ற வகையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவற்றைமுறைப்படுத்த வேண்டும். மேலும், பி.எட். படிப்புக்கான காலத்தை இரண்டு ஆண்டுகளாக நீட்டிப்படுவதாகக் கூறப்படுகிறது. அது குறித்தும் விளக்க வேண்டும்என்றார்.இதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் அளித்தபதில்:பி.எட். படிப்புக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படாமல் இருந்தது. இப்போது, ஓய்வு பெற்ற நீதிபதி என்.வி. பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. அதன்படி, அரசு பி.எட். கல்லூரிகளில் ரூ.2,250-ம், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ரூ.10 ஆயிரமும், தனியார் கல்லூரிகளில் ரூ.41,500-ம், தரச்சான்று பெற்ற தனியார் கல்லூரிகளில் ரூ.46 ஆயிரமும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மேலும், பி.எட். படிப்பின் காலத்தை இரண்டு ஆண்டுகளாக அதிகரிப்பது தொடர்பாக, தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் ஆய்வு செய்து வருகிறது. அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார் அமைச்சர் பழனியப்பன்.

உரிய முன் அனுமதி பெறாமல் படித்த உயர் கல்விக்கு ஊக்க ஊதியம்இல்லை.

உரிய முன் அனுமதி பெறாமல் படித்த உயர் கல்விக்கு ஊக்க ஊதியம்இல்லை.தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும்ஆசிரியர்கள் முன் அனுமதி பெறாமல் படித்த உயர் கல்வித் தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்க தொடக்க கல்வி இயக்குநர் தடை விதித்துள்ளார்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதியைக் காட்டிலும் கூடுதல் கல்வித் தகுதி பெற்றிருந் தால் அவர்களுக்கு ஊக்க ஊதியம் (இன்சென்டிவ்) வழங்கப்படுகிறது. ஓர் ஆசிரியர் தனது பணிக்காலத் தில் 2 ஊக்க ஊதியங்கள் பெற தகுதியுடைவர் ஆவார். ஓர் ஊக்க ஊதியம் என்பது இரண்டு வருடாந்திர ஊதிய உயர்வை (இன்கிரிமென்ட்) குறிக்கும்.அடிப்படைச் சம்பளம் மற்றும்தர ஊதியத்தில் 3 சதவீதமும், அதற்குரிய அகவிலைப்படியையும் உள்ளடக்கியது ஓர் இன்கிரிமென்ட். உதாரணத்துக்கு, பட்டதாரி ஆசிரியர் ஒருவர், தனது பதவிக்கான கல்வித் தகுதியானஇளங்கலை பட்டம் மற்றும் பி.எட் படிப்புடன் கூடுதலாக முதுகலைப் பட்டம் பெற்றிருந்தால் ஓர் ஊக்க ஊதியமும், எம்.எட். முடித்திருந்தால் இன்னொரு ஊக்க ஊதியமும் ஆக 2 ஊக்க ஊதியங்கள் பெறுவார். இன்றைய நிலவரப்படி, அரசு பணியில் சேரும் ஒருபட்டதாரி ஆசிரியர் 2 ஊக்க ஊதியங்கள் பெற தகுதியாக இருந்தால் அவருக்கு கூடுதல் சம்பளமாக ரூ.1,668 கிடைக்கும். பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மேற்படிப்பு படிக்க வேண்டுமானால் தங்கள்மேல் அதிகாரியின் முன் அனுமதி பெற வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் உதவி தொடக்கக் கல்வி அதிகாரியிடமும், பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரி யர்கள் தலைமை ஆசிரியர்களிடமும் முன்அனுமதி வாங்க வேண்டும்.முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பெற்றுவந்த ஆசிரியர்களுக் கும் உரிய விளக்கம் பெற்று அவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங் கப்பட்டு வந்தது. தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் முன்அனுமதியின்றி படித்த உயர்கல்வித் தகுதிக்கு ஊக்கஊதியம் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்அனுமதி இல்லாமல் படித்தபடிப்புக்கு ஊக்க ஊதியம் வழங்கக்கூடாது என்று மாநில தொடக்கக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி களுக்கும், உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.விதிகளை மீறி ஊக்க ஊதியம் வழங்கினால் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிரடி உத்தரவினால், ஆரம்பப் பள்ளி,நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள்அதிர்ச்சி அடைந் துள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், “முன்அனுமதி பெறாமல் ஏற்கெனவே படிப்பில் சேர்ந்துவிட்ட ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவில் இருந்து விதி விலக்கு அளிக்க வேண்டும். புதிய உத்தரவை இனிவரும் நாட்களில் நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று வேண்டுகோள்விடுத்தனர்.


Sunday, August 10, 2014

234-எம் எல் ஏக்களும் இனிமே ஒரே கிளிக்கில்.

234-எம் எல் ஏக்களும்
இனிமே ஒரே கிளிக்கில்.!!!
234 -எம் எல் ஏக்களும்
இனிமே ஒரு கிளிக்கில் !!!
ஒவ்வொரு தொகுதி எம் எல்
ஏக்கும் ஒரு ஈமெயில்
ஐடி கொடுக்கப்பட்டுள்ளது.
இனிமேல் உங்கள் "
நியாமான " கோரிக்கைகளை நீங்கள்
அனுப்பலாம். பதில்
வருமா வராதான்னு தெரியாது,
எல்லா எம் எல் ஏக்கும் லேப் டாப்
கொடுக்கப்பட்டுள்ளது அதனால்
கண்டிப்பாக பதில் கிடைக்கும் என
நம்புவோம்.
234 தொகுதி எம் எல்
ஏக்கு தனி தனியே ஈ மெயில்
ஐடி கொடுக்கபட்டுள்ளது...
1 Acharapakkam -
mlaacharapakkam@tn.gov.in
2 Alandur - mlaalandur@tn.gov.in
3 Alangudi -
mlaalangudi@tn.gov.in
4 Alangulam -
mlaalangulam@tn.gov.in
5 Ambasamudram --
mlaambasamudram@
tn.gov.in
6 Anaicut -- mlaanaicut@tn.gov.in
7 Andhiyur --
mlaandhiyur@tn.gov.in
8 Andimadam ---
mlaandimadam@tn.gov.in
9 Andipatti----
mlaandipatti@tn.gov.in
10 AnnaNagar---
mlaannanagar@tn.gov.in
11 Arakkonam ----
mlaarakkonam@tn.gov.in
12 Arantangi--
mlaarantangi@tn.gov.in
13 Aravakurichi ---
mlaaravakurichi@tn.gov.in
14 Arcot --- mlaarcot@tn.gov.in
15 Ariyalur --mlaariyalur@tn.gov.in
16 Arni -- mlaarni@tn.gov.in
17 Aruppukottai ---
mlaaruppukottai@tn.gov.in
18 Athoor--- mlaathoor@tn.gov.in
19 Attur ---mlaattur@tn.gov.in
20 Avanashi ---
mlaavanashi@tn.gov.in
21 Bargur ---mlabargur@tn.gov.in
22 Bhavani---mlabhavani@tn.gov.in
23 Bhavanisagar---
mlabhavanisagar@tn.gov.in
24 Bhuvanagiri-----
mlabhuvanagiri@tn.gov.in
25 Bodinayakkanur----
mlabodinayakkanur@
tn.gov.in
26 Chengalpattu-----
mlachengalpattu@tn.gov.in
27 Chengam---
mlachengam@tn.gov.in
28 Chepauk---
mlachepauk@tn.gov.in
29 Cheranmahadevi---
mlacheranmahadevi@
tn.gov.in
30 Cheyyar---mlacheyyar@tn.gov.in
31 Chidambaram---
mlachidambaram@tn.gov.in
32 Chinnasalem---
mlachinnasalem@tn.gov.in
33 CoimbatoreEast----
mlacoimbatoreeast@
tn.gov.in
34 CoimbatoreWest----
mlacoimbatorewest@
tn.gov.in
35 Colachel---
mlacolachel@tn.gov.in
36 Coonoor----
mlacoonoor@tn.gov.in
37 Cuddalore---
mlacuddalore@tn.gov.in
38 Cumbum---
mlacumbum@tn.gov.in
39 Dharapuram---
mladharapuram@tn.gov.in
40 Dharmapuri---
mladharmapuri@tn.gov.in
41 Dindigul---
mladindigul@tn.gov.in
42 Edapadi---mlaedapadi@tn.gov.in
43 Egmore---mlaegmore@tn.gov.in
44 Erode----mlaerode@tn.gov.in
45 Gingee---mlagingee@tn.gov.in
46 Gobichettipalayam---
mlagobichettipalayam@
tn.gov.in
47 Gudalur----
mlagudalur@tn.gov.in
48 Gudiyatham----
mlagudiyatham@tn.gov.in
49 Gummidipundi----
mlagummidipundi@tn.gov.in
50 Harbour-----
mlaharbour@tn.gov.in
51 Harur----mlaharur@tn.gov.in
52 Hosur---mlahosur@tn.gov.in
53 Ilayangudi---
mlailayangudi@tn.gov.in
54 Jayankondam---
mlajayankondam@tn.gov.in
55 Kadaladi---
mlakadaladi@tn.gov.in
56 Kadayanallur---
mlakadayanallur@tn.gov.in
57 Kalasapakkam----
mlakalasapakkam@tn.gov.in
58 Kancheepuram---
mlakancheepuram@tn.gov.in
59 Kandamangalam----
mlakandamangalam@
tn.gov.in
60 Kangayam---
mlakangayam@tn.gov.in
61 Kanniyakumari----
mlakanniyakumari@tn.gov.in
62 Kapilamalai----
mlakapilamalai@tn.gov.in
63 Karaikudi----
mlakaraikudi@tn.gov.in
64 Karur----mlakarur@tn.gov.in
65 Katpadi----mlakatpadi@tn.gov.in
66 Kattumannarkoil---
mlakattumannarkoil@
tn.gov.in
67 Kaveripattinam---
mlakaveripattinam@tn.gov.in
68 Killiyoor----
mlakilliyoor@tn.gov.in
69 Kinathukadavu---
mlakinathukadavu@tn.gov.in
70 Kolathur---
mlakolathur@tn.gov.in
71 Kovilpatti---
mlakovilpatti@tn.gov.in
72 Krishnagiri----
mlakrishnagiri@tn.gov.in
73 Krishnarayapuram---
mlakrishnarayapuram@
tn.gov.in
74 Kulithalai----
mlakulithalai@tn.gov.in
75 Kumbakonam---
mlakumbakonam@tn.gov.in
76 Kurinjipadi---
mlakurinjipadi@tn.gov.in
77 Kuttalam---
mlakuttalam@tn.gov.in
78 Lalgudi---mlalalgudi@tn.gov.in
79 MaduraiCentral---
mlamaduraicentral@tn.gov.in
80 MaduraiEast---
mlamaduraieast@tn.gov.in
81 MaduraiWest----
mlamaduraiwest@tn.gov.in
82 Maduranthakam----
mlamaduranthakam@
tn.gov.in
83 Manamadurai----
mlamanamadurai@tn.gov.in
84 Mangalore----
mlamangalore@tn.gov.in
85 Mannargudi----
mlamannargudi@tn.gov.in
86 Marungapuri-----
mlamarungapuri@tn.gov.in
87 Mayiladuturai----
mlamayiladuturai@tn.gov.in
88 Melmalaiyanur---
mlamelmalaiyanur@tn.gov.in
89 Melur---mlamelur@tn.gov.in
90 Mettupalayam---
mlamettupalayam@tn.gov.in
91 Mettur---mlamettur@tn.gov.in
92 Modakkurichi---
mlamodakkurichi@tn.gov.in
93 Morappur---
mlamorappur@tn.gov.in
94 Mudukulathur---
mlamudukulathur@tn.gov.in
95 Mugaiyur----
mlamugaiyur@tn.gov.in
96 Musiri---mlamusiri@tn.gov.in
97 Mylapore---
mlamylapore@tn.gov.in
98 Nagapattinam----
mlanagapattinam@tn.gov.in
99 Nagercoil---
mlanagercoil@tn.gov.in
100 Namakkal---
mlanamakkal@tn.gov.in
101 Nanguneri---
mlananguneri@tn.gov.in
102 Nannilam----
mlanannilam@tn.gov.in
103 Natham-----
mlanatham@tn.gov.in
104 Natrampalli----
mlanatrampalli@tn.gov.in
105 Nellikkuppam----
mlanellikkuppam@tn.gov.in
106 Nilakottai---
mlanilakottai@tn.gov.in
107 Oddanchatram---
mlaoddanchatram@tn.gov.in
108 Omalur---mlaomalur@tn.gov.in
109 Orathanad---
mlaorathanad@tn.gov.in
110 Ottapidaram---
mlaottapidaram@tn.gov.in
111 Padmanabhapuram----
mlapadmanab
hapuram@tn.gov.in
112 Palacode---
mlapalacode@tn.gov.in
113 Palani----mlapalani@tn.gov.in
114 Palayamkottai---
mlapalayamkottai@tn.gov.in
115 Palladam---
mlapalladam@tn.gov.in
116 Pallipattu---
mlapallipattu@tn.gov.in
117 Panamarathupatti---
mlapanamarathupatti@
tn.gov.in
118 Panruti---mlapanruti@tn.gov.in
119 Papanasam---
mlapapanasam@tn.gov.in
120 Paramakudi---
mlaparamakudi@tn.gov.in
121 ParkTown----
mlaparktown@tn.gov.in
122 Pattukkottai----
mlapattukkottai@tn.gov.in
123 Pennagaram-----
mlapennagaram@tn.gov.in
124 Perambalur----
mlaperambalur@tn.gov.in
125 Perambur---
mlaperambur@tn.gov.in
126 Peranamallur---
mlaperanamallur@tn.gov.in
127 Peravurani---
mlaperavurani@tn.gov.in
128 Periyakulam---
mlaperiyakulam@tn.gov.in
129 Pernambut---
mlapernambut@tn.gov.in
130 Perundurai---
mlaperundurai@tn.gov.in
131 Perur---mlaperur@tn.gov.in
132 Pollachi---
mlapollachi@tn.gov.in
133 Polur---mlapolur@tn.gov.in
134 Pongalur---
mlapongalur@tn.gov.in
135 Ponneri---
mlaponneri@tn.gov.in
136 Poompuhar---
mlapoompuhar@tn.gov.in
137 Poonamallee----
mlapoonamallee@tn.gov.in
138 Pudukkottai----
mlapudukkottai@tn.gov.in
139 Purasawalkam----
mlapurasawalkam@
tn.gov.in
140 Radhapuram---
mlaradhapuram@tn.gov.in
141 Rajapalayam---
mlarajapalayam@tn.gov.in
142 Ramanathapuram---
mlaramanathapuram@
tn.gov.in
143 Ranipet---mlaranipet@tn.gov.in
144 Rasipuram----
mlarasipuram@tn.gov.in
145 Rishivandiyam----
mlarishivandiyam@tn.gov.in
146 Dr.RadhakrishnanNagar----
mlarknagar@
tn.gov.in
147 Royapuram---
mlaroyapuram@tn.gov.in
148 Saidapet---
mlasaidapet@tn.gov.in
149 Salem -I---
mlasalem1@tn.gov.in
150 Salem-II---
mlasalem2@tn.gov.in
151 Samayanallur---
mlasamayanallur@tn.gov.in
152 Sankaranayanarkoi---
mlasankaranayanarkoil@
tn.gov.in
153 Sankarapuram---
mlasankarapuram@tn.gov.in
154 Sankari---mlasankari@tn.gov.in
155 Sathyamangalam---
mlasathyamangalam@
tn.gov.in
156 Sattangulam----
mlasattangulam@tn.gov.in
157 Sattur---mlasattur@tn.gov.in
158 Sedapatti----
mlasedapatti@tn.gov.in
159 Sendamangalam----
mlasendamangalam@
tn.gov.in
160 Sholavandan---
mlasholavandan@tn.gov.in
161 Sholinghur----
mlasholinghur@tn.gov.in
162 Singanallur---
mlasinganallur@tn.gov.in
163Sirkazhi----
mlasirkazhi@tn.gov.in
164 Sivaganga----
mlasivaganga@tn.gov.in
165 Sivakasi---
mlasivakasi@tn.gov.in
166 Sriperumbudur---
mlasriperumbudur@tn.gov.in
167 Srirangam---
mlasrirangam@tn.gov.in
168 Srivaikuntam---
mlasrivaikuntam@tn.gov.in
169 Srivilliputhur---
mlasrivilliputhur@tn.gov.in
170 Talavasal---
mlatalavasal@tn.gov.in
171 Tambaram---
mlatambaram@tn.gov.in
172 Taramangalam---
mlataramangalam@tn.gov.in
173 Tenkasi----
mlatenkasi@tn.gov.in
174 Thalli---mlathalli@tn.gov.in
175 Thandarambattu---
mlathandarambattu@
tn.gov.in
176 Thanjavur---
mlathanjavur@tn.gov.in
177 Theni---mlatheni@tn.gov.in
178 Thirumangalam---
mlathirumangalam@
tn.gov.in
179 Thirumayam---
mlathirumayam@tn.gov.in
180 Thirupparankundram---
mlathirup
parankundram@tn.gov.in
181 Thiruvattar---
mlathiruvattar@tn.gov.in
182 Thiruverambur---
mlathiruverambur@tn.gov.in
183 Thiruvidamarudur---
mlathiruvidamarudur@
tn.gov.in
184 Thiruvonam---
mlathiruvonam@tn.gov.in
185 Thiruvottiyur---
mlathiruvottiyur@tn.gov.in
186 Thondamuthur---
mlathondamuthur@tn.gov.in
187 Thottiam---
mlathottiam@tn.gov.in
188 Tindivanam---
mlatindivanam@tn.gov.in
189 Tiruchendur---
mlatiruchendur@tn.gov.in
190 Tiruchengode----
mlatiruchengode@tn.gov.in
191 Tirunavalur----
mlatirunavalur@tn.gov.in
192 Tirunelveli---
mlatirunelveli@tn.gov.in
193 Tiruppattur-194----
mlatiruppattur194@
tn.gov.in
194 Tiruppattur-41---
mlatiruppattur41@tn.gov.in
195 Tirupporur----
mlatirupporur@tn.gov.in
196 Tiruppur----
mlatiruppur@tn.gov.in
197 Tiruthuraipundi----
mlatiruthuraipundi@tn.gov.
in
198 Tiruttani----
mlatiruttani@tn.gov.in
199 Tiruvadanai---
mlatiruvadanai@tn.gov.in
200 Tiruvaiyaru----
mlatiruvaiyaru@tn.gov.in
201 Tiruvallur---
mlatiruvallur@tn.gov.in
202 Tiruvannamalai----
mlatiruvannamalai@
tn.gov.in
203 Tiruvarur----
mlatiruvarur@tn.gov.in
204 TheagarayaNagar----
mlatnagar@tn.gov.in
205 Tiruchirapalli-I---
mlatrichy1@tn.gov.in
206 Tiruchirapalli-II---
mlatrichy2@tn.gov.in
207 Triplicane----
mlatriplicane@tn.gov.in
208 Tuticorin---
mlatuticorin@tn.gov.in
209 Udagamandalam---
mlaudagamandalam@
tn.gov.in
210 Udumalpet---
mlaudumalpet@tn.gov.in
211 Ulundurpet---
mlaulundurpet@tn.gov.in
212 Uppiliyapuram---
mlauppiliyapuram@tn.gov.in
213 Usilampatti---
mlausilampatti@tn.gov.in
214 Uthiramerur---
mlauthiramerur@tn.gov.in
215 Valangiman----
mlavalangiman@tn.gov.in
216 Valparai----
mlavalparai@tn.gov.in
217 Vandavasi----
mlavandavasi@tn.gov.in
218 Vaniyambadi----
mlavaniyambadi@tn.gov.in
219 Vanur----mlavanur@tn.gov.in
220 Varahur-----
mlavarahur@tn.gov.in
221 Vasudevanallur---
mlavasudevanallur@tn.gov.in
222 Vedaranyam---
mlavedaranyam@tn.gov.in
223 Vedasandur---
mlavedasandur@tn.gov.in
224 Veerapandi---
mlaveerapandi@tn.gov.in
225 Vellakoil---
mlavellakoil@tn.gov.in
226 Vellore---mlavellore@tn.gov.in
227 Vilathikulam---
mlavilathikulam@tn.gov.in
228 Vilavancode---
mlavilavancode@tn.gov.in
229 Villivakkam---
mlavillivakkam@tn.gov.in
230 Villupuram---
mlavillupuram@tn.gov.in
231 Virudhunagar----
mlavirudhunagar@tn.gov.in
232 Vridhachalam---
mlavridhachalam@tn.gov.in
233 Yercaud---
mlayercaud@tn.gov.in
234 ThousandLights---
mlathousandlights@
tn.gov.in


Monday, July 28, 2014

பி.எட்., படிப்புக்கு அனுமதி மறுப்பா?

மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், பி.எட்., படிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, 40 நாள் வகுப்பறை பயிற்சிக்கு செல்ல அனுமதியளிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் பிளஸ் 2 முடித்து, இரண்டாண்டு ஆசிரியர் கல்வி டிப்ளமோ முடித்த நிலையில், பணியில் நியமிக்கப்படுகின்றனர்.


இவர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற, பி.எட்., படிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக உள்ளவர்களுக்கு, பட்டப்படிப்பு முடித்த நிலையில், பி.எட்., படிப்பை தபால் வழியில் அண்ணாமலை பல்கலை உள்ளிட்ட பல்கலை வழங்குகின்றன. இதில், 40 நாள் வகுப்பறை பயிற்சியும் அவசியம். இதற்காக அரை நாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு, இடைநிலை ஆசிரியர் களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அனுமதி வழங்க வேண்டும். இக்கல்வியாண்டில், இதுவரை எந்த ஆசிரியருக்கும் அனுமதி வழங்காமல், மறுத்து வருவதாகவும், இதனால், தங்களது பதவி உயர்வுக்கான வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தொடக்கக்கல்வி அலுவலர் ஒருவர் கூறியதாவது: கல்வியாண்டு துவக்கத்தில் துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, மாணவர் சேர்க்கை உள்ளிட்ட முக்கிய பணி உள்ளன. அதுமட்டுமில்லாமல், ஈராசிரியர் பள்ளியில் உள்ள ஆசிரியர், 40 நாள் வரை விடுப்பில் செல்லும் பட்சத்தில், அங்கு கற்றல் பணி பாதிக்காமல் இருக்க மாற்றுப்பணி ஆசிரியர் நியமிக்க வேண்டும். கல்வியாண்டின் துவக்கத்தில் இதுபோன்ற சிக்கல் வரும் பட்சத்தில், மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க ஒரு சில அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் முதல், அனைத்து பி.எட்., படிக்கும் ஆசிரியர்களுக்கும் அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்

பி.எட்., படிப்புக்கு அனுமதி மறுப்பா?

பி.எட்., படிப்புக்கு அனுமதி மறுப்பா? : இடைநிலை ஆசி...: மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், பி.எட்., படிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, 40 நாள் வகுப்பறை பயிற்சிக்கு செல்ல அனுமதியளிக்க மறுப்பதாக குற்றச...

Saturday, July 26, 2014

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை: ஆகஸ்ட் 5,2014 வரை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க இடைக்கால தடை!

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை: ஆகஸ்ட் 5,2014 வரை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க இடைக்கால தடை!

திருச்சி பாரதிதாசன

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மையத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எம்.எட். விண்ணப்பங்களை அளிக்க ஆகஸ்ட் 14-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.எம். முத்துக்குமார் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மையத்தில் முதுகலை கல்வியியல் (எம்.எட்) படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் ஜூன் 30-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பி.எட். பாடத்தில் 50சதவிகித மதிப்பெண்கள் பெற்று, 2 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மட்டுமே இப்படிப்பில் சேர தகுதியுடையவர்கள்.பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி மையம், உறுப்புக் கல்லூரிகள், அனைத்துப் பயிற்சி மையங்கள், படிப்பு மையங்களில் ரூ.500-க்கான வங்கி வரைவோலையை அளித்து விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.விண்ணப்பங்களை பல்கலைக்கழக வலைதளத்தின் ஜ்ஜ்ஜ்.க்ஷக்ன்.ஹஸ்ரீ.ண்ய்ஸ்ரீக்ங் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்பவர்கள் ரூ.500-க்கான வங்கி வரைவோலையையும் சேர்த்து அனுப்ப வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 31-ம் தேதிக்குள் அளிக்கலாம் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், விண்ணப்பங்களை அளிக்கஆகஸ்ட் 14-ம் தேதி கடைசிநாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 31-ம் தேதி நடைபெறும்.மேலும் விவரங்களுக்கு 0431-2407027,28,54.

ஆகஸ்ட் 5,2014 வரை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க இட...

ஆகஸ்ட் 5,2014 வரை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க இட...:           வழக்கு 1. மதுரை நவநீதகிருஷ்ணன் - பணிமாறுதல் விதிமுறைகள் GO.137,Date.9.6.2014-ல் பக்கம் 1-ல் மூன்று ஆண்டு விதிமுறை ஆசிரியர்களுக...

"பென்ஷனில் 3.96 மடங்கு திருத்தம் செய்யுங்கள்"

"பென்ஷனில் 3.96 மடங்கு திருத்தம் செய்யுங்கள்" 7வது...:          மத்திய அரசின், ஏழாவது ஊதியக்குழுவுக்கு, அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் கூட்டமைப்பு சார்பில், பென்ஷ...

Friday, March 7, 2014

EMIS


https://docs.google.com/file/d/0B4DL_KRTl65FWkI5c2xYYmtncFE/edit?usp=docslist_api

Wednesday, February 26, 2014

காணவில்லை ஆவணம் திரும்ப பெற வழ

எவ்வளவுதான்கவனமாக இருந்தாலும் சிலநேரங்களில் ரேஷன் கார்டு,
டிரைவிங்லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசிஎன ஏதாவது ஒரு
முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டுபலரும் தவிப்பதைநாம் பார்க்கலாம்.
அப்படி தொலைந்துபோனால் அல்லதுமழையில் நனைந்து கிழிந்து அழிந்துபோனால்
அவற்றைதிரும்பப் பெறுவதுஎப்படிஎன்பதைஇங்கே தெரிந்துகொள்ளலா
ம்.
* இன்ஷூரன்ஸ் பாலிசி!
யாரை அணுகுவது..?
பாலிசியை விநியோகம் செய்த கிளையை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச்சான்றின் நகல்களில் நோட்டரி
பப்ளிக்சான்றொப்பம் இடப்பட்டவைமற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது
ஒரு ரசீது நகல்.
எவ்வளவுகட்டணம்?
ஆவணங்கள் தயாரிப்புக்கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இதுதவிர, கவரேஜ்
தொகையில் 1,000 ரூபாய்க்கு 20காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம்
செலுத்த வேண்டும்.
கால வரையறை: விண்ணப்பம் அளித்த15 நாட்களுக்குள்நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: நகல் பாலிசிகோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரியஇரண்டு
ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை80ரூபாய் பத்திரத்தில்
டைப்செய்துகொள்ள வேண்டும். இன்னொருஆவணத்தில் பாலிசிதொலைந்துபோன விவரங்கள்
கேள்வி பதில்வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்திசெய்து
நோட்டரிபப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்துதர வேண்டும்.
* மதிப்பெண் பட்டியல்!
யாரை அணுகுவது..?
பள்ளித்தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்விஅதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
மதிப்பெண் பட்டியல்நகல், பள்ளிமாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்தியரசீது.
எவ்வளவுகட்டணம்?
உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.
மேல்நிலை பொதுத்தேர்வு( 2) பட்டியல் ரூ.505.
கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து60 நாட்கள்.
நடைமுறை: காவல் துறையில்புகார் அளித்து'கண்டுபிடிக்க முடியவில்லை' என
சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/
நிறுவனத்தின்மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்திசெய்து தாசில்தாரிடம்
கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடுஒரு கடிதம் மற்றும்
இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும்.
இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டுஅதன் அடிப்படையில் அவர்பள்ளித்
தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக
தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்குஅனுப்ப வேண்டும். பட்டம் மற்றும்
அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக
வேண்டும்.
* ரேஷன் கார்டு!
யாரை அணுகுவது..?
கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்;
நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவிஆணையர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லதுஏதாவது ஒருஅடையாள அட்டை
எவ்வளவுகட்டணம்?
புதியரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.
கால வரையறை: விண்ணப்பம் அளித்த45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.
நடைமுறை: சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில்காணாமல் போன விவரத்தைக்
குறிப்பிட்டு கடிதம் தந்து,அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப்
பூர்த்திசெய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புதுகுடும்ப
அட்டை அனுப்பிவைக்கப்படும்.
* டிரைவிங்லைசென்ஸ்!
யாரை அணுகுவது?
மாவட்டப் போக்குவரத்துஅதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பழைய லைசென்ஸ் நகல் அல்லதுஎண்.
எவ்வளவுகட்டணம்?
கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).
கால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.
நடைமுறை: காவல் துறையில்புகார் தெரிவித்து, அவர்களிடம்சான்றிதழ்
வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.
* பான் கார்டு!
யாரை அணுகுவது?
பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லதுவருமான வரித்துறை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச்
சான்று நகல்கள்.
எவ்வளவுகட்டணம்?
அரசுக்குச் செலுத்தவேண்டிய ரூ.96 ரூபாய்.
கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.
நடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான
விவரங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
* பங்குச் சந்தைஆவணம்!
யாரை அணுகுவது?
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறைசான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லதுஃபோலியோ எண்.
எவ்வளவுகட்டணம்? தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின்
சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை: விண்ணப்பித்த45 நாட்களிலிருந்து90 நாட்களுக்குள்.
நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்குகடிதம் எழுதவும். இதன்
அடிப்படையில்காவல் துறையில் புகார் அளித்துசான்றிதழ் வாங்க வேண்டும்.
பங்குகள் மதிப்பிற்கு ஏற்பநிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு
முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில
நிறுவனங்கள்செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிடவலியுறுத்தும்.
* கிரயப் பத்திரம்!
யாரை அணுகுவது..?
பத்திரப்பதிவுதுறைதுணைப் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறைகடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்டவிளம்பரம், யாரிடமும்
இருந்து ஆட்சேபனை வரவில்லைஎன்பதற்கான நோட்டரி பப்ளிக்ஒருவரின் உறுதிமொழி,
சர்வே எண் விவரங்கள்.
எவ்வளவுகட்டணம்? ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இதுதவிர, கூடுதலாக ஒவ்வொரு
பக்கத்திற்கும் 20 ரூபாய்.
கால வரையறை: ஒரு சிலநாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில்உள்ள காவல் நிலையத்தில்புகார்
அளித்துஅவர்களிடமிருந்துசான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம்
குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்யவேண்டும். இதற்குபிறகு
சார்புபதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.
* டெபிட்கார்டு!
யாரை அணுகுவது..?
சம்பந்தப்பட்ட வங்கியின் கிளைமேலாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
கணக்குத் தொடர்பான விவரங்கள்.
எவ்வளவுகட்டணம்?
ரூ.100.
கால வரையறை: வங்கியைப் பொறுத்துஓரிரு நாட்கள் அல்லதுஅதிகபட்சம் 15நாட்கள்.
நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன்அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை
மையத்திற்குதகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள்
நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு
கடிதம் மூலம் தெரியப்படுத்திபுதுடெபிட் கார்டு வழங்குமாறுகோர வேண்டும்.
* மனைப் பட்டா!
யாரை அணுகுவது..?
வட்டாட்சியர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?
நகல் பட்டாகோரும் விண்ணப்பம்.
எவ்வளவுகட்டணம்?
ரூ.20.
கால வரையறை: ஒரு சிலநாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின்
பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல்
பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில்
விண்ணப்பித்தால் நகல் பட்டாகிடைத்துவிடும்.
* பாஸ்போர்ட்!
யாரை அணுகுவது..?
மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறைசான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.
எவ்வளவுகட்டணம்?
ரூ.4,000.
கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து40 நாட்கள்;
வெளிநாட்டில் தொலைத்திருந்தால்அதிககாலம் எடுக்கும்.
நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார்
அளித்துகண்டுபிடிக்கப்ப
டவில்லைஎன்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20ரூபாய் முத்திரைத்தாளில்
தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி
பப்ளிக்ஒருவரின் கையெழுத்துபெற்றுமண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில்
விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில்அவர்கள் விசாரணை மேற்கொண்ட
பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பிவைத்துவிடுவார்கள்.
* கிரெடிட் கார்டு!
யாரை அணுகுவது?
நிறுவனத்தின்வாடிக்கையாளர் சேவை மையம்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
தொலைந்துபோனகிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.
எவ்வளவுகட்டணம்?
ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).
கால வரையறை: 15வேலை நாட்கள்.
நடைமுறை: கிரெடிட் கார்டு தொலைந்ததும்உடனடியாக வாடிக்கையாளர் சேவை
மையத்துக்கு தகவல் அளித்துபரிவர்த்தனைகளைநிறுத்த வேண்டும். தொலைந்த
கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை
நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பிவைத்துவிடுவார்க
ள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க

Thursday, February 13, 2014

அரசுப் பள்ளிகளில் நிரப்பப்படவுள்ள ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும்ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகமாக இருப்பதால், குறைந்த கட் -ஆஃப் மார்க் உள்ளவர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகள்மீது தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர்.

அரசுப்பள்ளிகளில்நிரப்பப்படவுள்ள ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கையைக்
காட்டிலும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை
இரு மடங்கு அதிகமாக இருப்பதால், குறைந்த கட் -ஆஃப் மார்க் உள்ளவர்கள்
அரசு உதவி பெறும் பள்ளிகள் மீது தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர்.
அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்,
பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர, ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி
கட்டாயம் ஆகும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில்
இடைநிலை ஆசிரியர்கள் 12,596 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 14,496 பேரும்
தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அண்மையில்
இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குதேர்ச்சி மதிப்பெண்ணை 60 சதவீதத்தில்
இருந்து 55 சதவீதமாகக் குறைத்து அரசு உத்தரவிட்டது. இதன்படி, தேர்ச்சி
பெற 150-க்கு 82 மார்க் பெற்றால் போதும். இதன்மூலம் இடஒதுக்கீட்டுப்
பிரிவினரில் கூடுதலாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி
பெற்றிருப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 16 ஆயிரம்
காலியிடங்கள் ஆனால், தகுதித்தேர்வுமூலமாக 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்
பணியிடங்களையும், 14 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங் களையும் நிரப்ப
அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே, நிரப்பப்படவுள்ள ஆசிரியர்
பணியிடங்களுடன் ஒப்பிடும்போது, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின்
எண்ணிக்கை 2 மடங்கு அதிகம். எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் வேலை உறுதி கிடையாது. பட்டதாரி
ஆசிரியர் பணியிடங்களைப் பொறுத்தவரையில் 14 ஆயிரம் காலியிடங்கள்
என்றாலும், பாடவாரியான காலியிடங்கள் இன்னும் தெரியவில்லை. பாடவாரியான
காலியிடங் களும், ஒவ்வொரு பாடத்திலும் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
என்ற பட்டியல் தெரிந்த பின்னரே , வேலை உறுதியா? இல்லையா? என்பதை அறிய
முடியும். ஒருசில பாடங்களில் காலியிடங்கள் இருக்கக்கூடும், ஆனால்,
தேர்ச்சி பெற்றவர்கள் தேவையான அளவு இருக்க மாட்டார்கள். அதேபோல்,
ஒருசிலவற்றில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அதிகமாக
இருப்பார்கள். காலியிடங்கள் குறைவாக இருக்கலாம். இந்த நிலையில், கட்-
ஆஃப் மார்க் குறைவாக இருப்பவர்கள் தங்களுக்கு அரசுப் பள்ளிகளில் வேலை
உறுதி இல்லை என கருதுவதால், அரசு உதவி பெறும் பள்ளிகள் பக்கம் பார்வையைத்
திருப்பத் தொடங்கியுள்ளனர். இதற்காக உதவி பெறும் பள்ளிகளுக்குச் சென்று
காலியிடங்கள் குறித்த விவரங்களையும் அறிந்த வண்ணம் உள்ளனர்.

Wednesday, February 12, 2014

பள்ளிகளில்பாலியல் விழிப்புணர்வு கையேடு : புதிய சட்டப்படி தண்டனை விவரம் வெளியீடு

தமிழக பள்ளி, கல்லூரிகளில், பாலியல் தொடர்பான விழிப்புணர்வு கையேடு
வழங்கப்பட்டு வரும் நிலையில், புதியசட்டப்படி, குற்றங்களுக்கான தண்டனை
விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிராக நடக்கும், வன்முறை சம்பவங்களை தடுக்க, குடும்ப
வன்முறை பாதுகாப்பு, வரதட்சணை தடுப்பு, பலாத்காரம் தடுப்பு, வாரிசு
உரிமை, விதவை மறுமணம், ஈவ் டீசிங், வன்கொடுமை, சொத்து உரிமை, ஜீவனாம்சம்
பெறும் உரிமை என, சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.பெண்களுக்கான
பாதுகாப்பு சட்டம் இருந்தாலும், குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கான
பாதுகாப்பு சட்டங்களில், கடுமையான தண்டனை இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், 2012ம் ஆண்டு, டில்லியில், மருத்துவக் கல்லூரி மாணவி, ஒரு
கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்டதை அடுத்து, மத்திய, மாநில அரசு,
பாலியல் தொடர்பான சட்டங்களில், சில திருத்தங்களை கொண்டு வந்தன. அதன்படி,
நான்கு விதமான பாலியல் தாக்குதல் வகைகள், அந்த பாலியல் தாக்குதல், யாரால்
எல்லாம் ஏற்படுகிறது, ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்கள், புதிய
சட்டவிதிமுறைகள் மற்றும் தண்டனைகள் ஆகியவை வரையறுக்கப்பட்டன.
கடுமையான பாலியல் தாக்குதல் பிரிவில், போலீசார், ராணுவ வீரர், அரசு
ஊழியர், சிறைச்சாலை ஊழியர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ஊழியர்,
கல்வி நிறுவன ஊழியர் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, ஆறு
மாதம் முதல், ஆயுள் தண்டனை வரை, சிறை தண்டனை கிடைக்க, வழிவகை
செய்யப்பட்டுள்ளது. பாலியல் தொடர்பான புகாரை, போலீஸ், சிறப்பு சிறார்
போலீஸ் யூனிட், பஞ்சாயத்து தலைவர், வி.ஏ.ஓ., குழந்தைகள் நலக்குழு,
குழந்தைகள் பாதுகாப்புக் குழு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
ஆகியவற்றில் புகார் தெரிவிக்கலாம். அதற்காக, "சைடு லைன் தொலைபேசி எண்:
1098' என்பதை தொடர்பு கொள்ளலாம். இந்நிலையில், பாலியல்தொடர்பான
விழிப்புணர்வை பெற, பள்ளி மற்றும் கல்லூரிகளில், பாலியல் குற்றங்களில்
இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டம், 2012 மற்றும் குழந்தை
திருமணத்தை தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு கையேடு, தமிழகத்தில் பள்ளி,
கல்லூரிகளில் வழங்கப்பட்டுவருகிறது.
குழந்தைகள் பாதுகாப்பு குழு நிர்வாகி கூறியதாவது: பள்ளிகள் அளவில்,
எட்டாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலும், கல்லூரி அளவில், பட்டபடிப்பு
மாணவ, மாணவியருக்கும், விழிப்புணர்வு கையேடு, சம்பந்தப்பட்ட ஆசிரியர்
மூலம் வழங்கப்படும். அதில், பாலியல் தாக்குதலுக்கான தண்டனை, கடுமையான
பாலியல் தாக்குதலுக்கான தண்டனை, ஆபாச படம் எடுத்தல் தண்டனை, ஒரு முறைக்கு
மேல், அதே குற்றத்தை செய்தல், குற்றத்துக்கு உடந்தையாக இருத்தல்,
குற்றங்களை மறைத்தல் உள்ளிட்ட முறைகளில், ஆறு மாதம், ஐந்தாண்டு, ஏழாண்டு,
பத்தாண்டு, ஆயுள் தண்டனைகள் வழங்கப்படும். இவ்வாறு, அவர்கூறினார்.

பி.எப்., சந்தாதாரர்களுக்கு நிரந்தரகணக்கு எண

தொழிலாளர் சேமநல நிதியம் (இ.பி.எப்.ஓ.,), 5 கோடிக்கும் அதிகமான
சந்தாதாரர்களுக்கு,நிரந்தர கணக்கு எண் வழங்க திட்டமிட்டுள்ளது. இதன்
மூலம், ஒருவர், வேறுநிறுவனத்திற்கு மாறினாலும், இ.பி.எப்., நிரந்தர
கணக்கு எண்ணை, தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
தற்போது, ஒரு நிறுவனத்தில் இருந்து, வேறு நிறுவனத்திற்கு மாறுபவர், தன்,
பழைய நிறுவனத்தின் இ.பி.எப்., கணக்கை, புதிய நிறுவனத்திற்கு, இணையதளம்
வாயிலாகவே மாற்றிக் கொள்ளலாம். இந்த வசதி, கடந்த 2013ம் ஆண்டு,
அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இருந்த போதிலும், பெரும்பாலான நிறுவனங்கள், அவற்றின் டிஜிட்டல்
கையொப்பங்களை, இ.பி.எப்.ஓ.,விடம் இன்னும் பதிவு செய்யாமல் உள்ளன. இதனால்,
அந்நிறுவனங்களில் இருந்து, வேறு நிறுவனங்களுக்கு மாறுவோர், இ.பி.எப்.,
கணக்கை மாற்ற, உரிய ஆவணங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டி உள்ளது.
இப்பிரச்னையை தீர்க்கும் நோக்கில் தான், இ.பி.எப்.ஓ., நிரந்தர கணக்கு எண்
திட்டம் அறிமுகமாக உள்ளது. இதனால், ஒருவர் எங்கு பணியாற்றினாலும்,
அவரிடம் பிடித்தம் செய்யப்படும், தொகை, இ.பி.எப்.ஓ., நிரந்தர கணக்கு
எண்ணின் கீழ்,
இணையதளம் வாயிலாகவே வரவு வைக்கப்படும்

ஆசிரியர் தகுதி தேர்வுஹால் டிக்கெட் தொலைத்தவர்கள் ரோல் நம்பர் அறிய ஏற்பாடு.

டிஇடிதேர்வு எழுதியவர்கள்ஹால் டிக்கெட்டைதொலைத்துவிட்டால், அவர்கள்தங்கள்
ரோல் நம்பரை தெரிந்துகொள்ள டிஆர்பி ஏற்பாடுசெய்துள்ளது.
தமிழகத்தில் இரண்டாவதுஆசிரியர் தகுதித் தேர்வு2013ல் நடந்தது.
அதில்சுமார் 6 லட்சம் பேர் எழுதினர். இதற்கான தேர்வுமுடிவுகள்
வெளியிடப்பட்டுஅதில் தேர்ச்சி பெற்றவர்களுக்குகடந்த மாதம் சான்று
சரிபார்ப்பு நடந்துமுடிந்தது.இதற்கிடையே, ஆசிரியர் தகுதித்
தேர்வுஎழுதும்பிசி, எம்பிசி, எஸ்டி, எஸ்சி உள்ளிட்ட இட ஒதுக்கீட்டின்
கீழ் வருவோர் டிஇடிதேர்வில் 55% மதிப்பெண் எடுத்தால்போதும் என்றுஅரசு
அறிவித்தது. அதற்கான உத்தரவில்150க்கு 82 மதிப்பெண்எடுத்தால் தேர்ச்சி
என்றும் அரசுஉத்தரவிட்டது.ஆசிரியர் தகுதித் தேர்வில் மேற்கண்ட 55
சதவீதமதிப்பெண் எடுத்தவர்களின் பட்டியலைடிஆர்பி தயாரித்து வருகிறது.
55சதவீதம்மதிப்பெண் போதும் என்றுஅரசு உத்தரவிட்டதால், டிஇடிதேர்வு
எழுதியவர்களில் பெரும்பாலானோர் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை அறிந்துகொள்ள
டிஆர்பிக்கு படைஎடுத்து வருகின்றனர். அவர்களில்சிலர் ஹால்
டிக்கெட்டைதொலைத்துவிட்டதாக அதன் நகல் கேட்டு டிஆர்பிக்கு நேரடியாக
வருகின்றனர்.
தினமும் இதுபோல வருவோரின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கிறது.இதை கருத்தில்
கொண்டுஹால் டிக்கெட் தொலைத்தவர்கள் தங்கள்மதிப்பெண்களைதெரிந்து கொள்ள
வசதியாக, டிஆர்டி இணைய தளத்தில் சிறப்புஏற்பாடுசெய்துள்ளது.
தேர்வுஎழுதியோர், ஹால் டிக்கெட்டைதொலைத்தவர்கள் தங்களின்விண்ணப்ப எண்ணை
இணைய தளத்தில் பதிவுசெய்தால், அவர்களின்ரோல் நம்பர்
அதில்தெரிந்துகொள்ளலாம். அதன் மூலம் பின்னர் மதிப்பெண்களை தெரிந்துகொள்ள
முடியும்.

"டெட்' தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரமாக அதிகரித்துள்ளது, 15ஆயிரம் பேருக்கு மட்டுமே பணி: மீதமுள்ள60 ஆயிரம் ஆசிரியர்களின் நிலை என்ன?

அரசுஅறிவித்த மதிப்பெண் சலுகைக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில்
தேர்ச்சிபெற்றவர்களின் எண்ணிக்கை 75ஆயிரமாக அதிகரித்துள்ளது.இந்த ஆண்டு
15 ஆயிரம் பட்டதாரி,
இடைநிலைஆசிரியர்களின் பணியிடங்களேஉள்ளதால் மீதமுள்ள60ஆயிரம்
ஆசிரியர்களின் நிலைஎன்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த75 ஆயிரம் பேரும் ஆசிரியர்களாகும் தகுதியைமட்டுமே பெற்றுள்ளனர்.
இப்போதுபணி நியமனம் செய்யப்படுபவர்கள் போக மீதமுள்ளவர்களுக்கு அரசுஉதவி
பெறும் பள்ளிகள்,தனியார் பள்ளிகளில்பணி நியமனங்களில் முன்னுரிமை
கிடைக்கும். மேலும் அடுத்தஆண்டுக்கான பணி நியமனத்திலும்இவர்கள்
பரிசீலிக்கப்படுவார்கள் எனஆசிரியர் தேர்வுவாரிய அதிகாரிகள்
தெரிவித்தனர்.இப்போதுதேர்ச்சி பெற்ற 75 ஆயிரம் பேருக்கு முதலில் தகுதிச்
சான்றிதழ் வழங்கப்படும். அதன்பிறகே, பட்டதாரிமற்றும் இடைநிலைஆசிரியர் பணி
நியமனத்துக்குதனியாக அறிவிப்புவெளியிடப்படும் எனவும்அதிகாரிகள்
தெரிவித்தனர்.
2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை
அறிவிக்கப்பட்டதை அடுத்துதேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 75ஆயிரமாக
உயர்ந்துள்ளது.இந்த ஆண்டு நியமிக்கப்படும் 15 ஆயிரம் ஆசிரியர்களைத் தவிர
மீதமுள்ளவர்களின் நிலைஎன்ன என்றுதேர்வர்கள் சந்தேகம் எழுப்பினர்.இது
தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோதுஅவர்கள் கூறியது:
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதுஎன்பது1 முதல் 8ஆம் வகுப்பு
வரைஆசிரியராவதற்கான அடிப்படைத்தகுதி மட்டுமே. அந்த வகையில்இந்த
75ஆயிரம்பேரும் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும்
தகுதியைப்பெற்றுள்ளனர்.முதலில் இவர்களுக்குஆசிரியர் தகுதிச் சான்றிதழ்
வழங்கப்படும். பிறகு, பட்டதாரிஆசிரியர் மற்றும் இடைநிலைஆசிரியர் பணி
நியமனத்துக்கான அறிவிப்புதனியாக வெளியிடப்படும்.அறிவிப்பு
வெளியிடப்பட்டவுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும்
பணி நியமனம் கோரி ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். பட்டதாரிமற்றும்
இடைநிலைஆசிரியர்கள் இந்த ஆண்டு "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை அடிப்படையில்
தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.ஆசிரியர் தகுதித் தேர்வுமதிப்பெண், பிளஸ் 2,
பட்டப் படிப்புமற்றும் பி.எட்.மதிப்பெண் அடிப்படையில்"வெயிட்டேஜ்'
மதிப்பெண் வழங்கப்பட்டுபட்டதாரிஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுவர்.
இடைநிலைஆசிரியர்கள்:
ஆசிரியர் தகுதித் தேர்வுமதிப்பெண், பிளஸ் 2, பட்டயப் படிப்புஅடிப்படையில்
"வெயிட்டேஜ்' மதிப்பெண் இடைநிலைஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுவர்.தகுதியான
விண்ணப்பதாரர்களில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையில்
தேர்வுசெய்யப்பட்டவர்கள் போக, எஞ்சியவர்கள் தேர்வுசெய்யப்படாதவர்களாகக்
கருதப்படுவர்.இவர்கள் அனைவரும் அடுத்துநடைபெறும்ஆசிரியர் தகுதித்
தேர்வில் தங்களதுமதிப்பெண்ணை அதிகரிப்பதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வை
எழுதலாம்.அதேநேரத்தில், ஒருதேர்வில் பெற்ற தேர்ச்சி ஏழரை ஆண்டுகளுக்குச்
செல்லும்என்பதால், அடுத்துவரும் ஆசிரியர் பணி நியமனங்களுக்கும்இவர்கள்
விண்ணப்பிக்கலாம். அதோடு, அரசுஉதவிப் பெறும் பள்ளிகள், தனியார்
பள்ளிகளில்பணி நியமனம் பெறுவதற்கானதகுதியையும் இவர்கள்பெறுவார்கள்.
அரசுப்பள்ளிகளில்ஆசிரியர் நியமனம் என்பதுஅப்போதுநடைமுறையில் உள்ள
அரசாணையின் அடிப்படையில்இருக்கும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி
பெறுவதுஎன்பதுபணி நியமனத்துக்காக விண்ணப்பிக்கும் தகுதியைமட்டுமே
வழங்கும். பணி நியமனத்தைவழங்காது.ஆசிரியர் தகுதித் தேர்வுதொடர்பான
வழக்குகள் நீதிமன்றத்தில்இன்னமும் நிலுவையில்உள்ளன.இந்த வழக்குகள்முடிந்த
பிறகு, இதுகுறித்துதெளிவான அறிவிப்புவெளியிடப்படும் எனவும்அவர்கள்
தெரிவித்தனர்.கடந்த 2012 ஆம் ஆண்டு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை விட
தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
எனவே, இதில்ஆசிரியர் தேர்வு, தேர்ச்சி பெற்றவர்களின் நிலைபோன்ற
பிரச்னைகள் எழவில்லை.இப்போது 2013 ஆம் ஆண்டு நடைபெற்றஆசிரியர் தகுதித்
தேர்வில் 29ஆயிரம்பேர் தேர்ச்சி பெற்றனர். தகுதித் தேர்வில் 5சதவீத
மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டதையடுத்து46 ஆயிரம் பேர் கூடுதலாகத் தேர்ச்சி
பெற்றுள்ளனர்.இவர்களில் இப்போது15ஆயிரம் பேருக்கு மட்டுமே பணி
வழங்கப்படும் என்றுதெரியவந்துள்ளது.

Sunday, February 9, 2014

தமிழக பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த பாடத்திட்டம் விரைவில் கொண்டுவரப்பட உள்ளது.

தமிழக பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த பாடத்திட்டம் விரைவில்
கொண்டுவரப்பட உள்ளது. இதற்காக, பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி
கல்லூரிகளில் உள்ள வெவ்வேறு பாடத்திட்டங் களைஆராய மூத்த பேராசிரியர்கள்
தலைமையில் 9 முதன்மைக் குழுக்கள்அமைக்கப்படுகின்றன.
மாணவர்களின் பிரச்சினை களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக
பல்கலைக்கழங்களில் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை கொண்டுவர தமிழ்நாடு மாநில
உயர்கல்வி கவுன்சில் முடிவுசெய்து அதற்கான பணியில் மும்முரமாக
ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து உயர்கல்வி கவுன்சில் உறுப்பினர்-செயலர்
பேராசிரியர் கரு.நாகராஜன் "தி இந்து" நிருபரிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் பல்கலைக் கழகங்களில் வழங்கப்படும்
பாடப்பிரிவுகளின் தரத்தை ஒருங் கிணைக்கவும், மாணவர்கள் மற்றும்
ஆசிரியர்கள் ஒரு பல்கலைக்கழகத்திலிருந்து மற்றொரு பல்கலைக்கழகத்துக்கு
சென்று படிக்கவும், பாடம் நடத்தவும் இந்த ஒருங்கிணைந்த பாடத்திட்டம்
(இன்டக்கிரேடட் சிலபஸ்) மிகவும் உதவிகரமாக இருக்கும்.
ஒவ்வொரு முறையும் ஆசிரியர் தேர்வுவாரியத் தேர்வில் சான்றிதழ்
சரிபார்ப்பின் போது மாணவர்கள் சமமான பாடத்திட்டம் என்பதை குறிப்பிடும்
ஈக்குவேலன்ஸ் என்ற சான்றுக்காக கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களும்,
மாநில உயர்கல்வி கவுன்சில் அலுவல கத்துக்கும் டி.ஆர்.பி.,
டி.என்.பி.எஸ்.சி., தேர்வாணையங் களுக்கும் அலைந்து கடைசியாக
நீதிமன்றத்துக்கு செல்லும் நிலை இருந்து வருகிறது. இதனால் பல மாணவர்கள்
வேலைவாய்ப்பைஇழந்துள்ளனர்.
உதாரணத்துக்கு, தன்னாட்சிக் கல்லூரி ஒன்று எம்.ஏ. வரலாறு என்ற
பாடத்திட்டத்தில் சர்வதேச வரலாறை முக்கியப் பாடமாக கொள்கிறார்கள் என்று
வைத்துக் கொள்வோம். இங்கு படித்துப் பட்டம் பெற்றவர்கள் இந்திய வரலாற்றை
அடிப்படையாகக் கொண்ட கல்லூரிகளில் உள்ள வரலாற்று மாணவர்களுக்கு பாடம்
எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை.
இந்த திட்டத்தை செயல் படுத்தப்படுவதற்காக கலை-அறிவியல் படிப்புகளுக்கு 8
முதன்மைக் குழுக்களும், கல்வியியல் படிப்புக்கு ஒரு குழுவும் விரைவில்
அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு பல்கலைக்கழகம் மற்றும் தன்னாட்சி கல்லூரியில்
உள்ள பாடத்திட்டத்தை ஆராய் வதற்காக அவற்றின் பாடத்
திட்டத்தைகேட்டிருந்தோம்.
இதுவரை 80 சதவீத கல்வி நிறுவனங்கள் எங்களுக்கு பாடத் திட்டத்தை
அனுப்பிவிட்டன. இந்த மாத இறுதிக்குள் பாடத்திட்டம் தொடர்பான
ஆய்வுக்கூட்டம் நடைபெறும். இதில் வெவ்வேறு பாடத்திட்டங்களைஆராய்ந்து,
பல்வேறு பாடப்பிரிவுகளுக்கான பாடத்திட்ட வங்கி ஒன்று உருவாக்கப்படும்
என்றார்.

பாரதிதாசன் பல்கலை: முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு.

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்புக்கான
தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த நவம்பர் மாதத்தில் எம்.எஸ்சி,
இயற்பியல், கம்ப்யூட்டர் எலக்ட்ரானிக்ஸ், எம்.எஸ்சி., பாடனி, எம்.எஸ்சி.,
விசுவல் கம்யூனிகேஷன் உள்ளிட்ட படிப்புகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன.
இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.தேர்வு முடிவுகளை
அறிய விரும்பும் மாணவர்கள்www.bdu.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

2,269 இடங்களை நிரப்ப மே 18ல் குரூப்-2 தேர்வு- வங்கி அல்லது அஞ்சலகங்களில், கட்டணம் செலுத்த, மார்ச், 7 கடைசி நாள்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில், உதவியாளர், "கிளர்க்" என்ற குமாஸ்தா
நிலையில், 2,269 பணியிடங்கள், காலியாக உள்ளன. 2012-13ல் ஏற்பட்ட இந்த
காலி இடங்களை நிரப்ப, மே 18ல் போட்டி தேர்வு நடக்கும் என
டி.என்.பி.எஸ்.சி., நேற்று அறிவித்தது. பட்டதாரிகள்,www.tnpsc.gov.in
என்ற இணையதளம் வழியாக, மார்ச் 5ம் தேதி வரைவிண்ணப்பிக்கலாம். வங்கி
அல்லது அஞ்சலகங்களில்,
கட்டணம் செலுத்த, மார்ச், 7
கடைசி நாள். கூடுதல் விவரங்களுக்கு, தேர்வாணைய இணையதளத்தைபார்வைஇடலாம்

பொதுத் தேர்வு பதிவெண் ஒதுக்கீட்டில் மாற்றம் : தொடருதுதேர்வுத் துறையின்"புதுமை

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், மாணவர்களுக்கு
பதிவெண் ஒதுக்கீடு செய்வது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசு பொதுத்
தேர்வுகளில், அடுத்தடுத்து பல மாற்றங்கள் செய்யப்பட்டுவருகின்றன.
தற்போது, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 தேர்வுக்கான
விடைத்தாள்,சம்பந்தப்பட்ட மாணவரின் "போட்டோ' இருக்கும் வகையில் மாற்றி
அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுஎழுதியவுடன், தேர்வுமையத்திலேயே, மாணவர்
பெயர்,பள்ளிபெயர், பதிவெண் பகுதியை,அறைகண்காணிப்பாளர்
கிழித்துவைத்துக்கொள்ளும் வகையிலும், மாணவர் எழுதிய
விடைத்தாளை"பார்கோடிங்' முறையில்மட்டுமே,அடையாளம் காணும் வகையிலும்
மாற்றப்பட்டுள்ளது.மேலும், மாணவர்களுக்கு பதிவெண்கள் வழங்கும்முறையிலும்
புதுமைசெய்யப்பட்டுள்ளது.
இதன்படி, தேர்வுத் துறையால் ஒதுக்கப்பட்டமையங்களில், வேறுபள்ளிகளைசேர்ந்த
மாணவர்கள் சேர்க்கப்பட்டால், அந்த மையத்தில்தேர்வுஎழுதும்
அனைத்துமாணவர்களுக்கும் "ரேண்டம்' முறையில், பதிவெண் ஒதுக்க
உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், ஒரே பள்ளிமாணவர்களுக்கு, அடுத்தடுத்த
தேர்வுஎண்கள், இனிமேல் கிடைக்காது.
இதுகுறித்துகல்விஅதிகாரி ஒருவர் கூறியதாவது: நூறு சதவீதம் தேர்ச்சிக்காக,
சுமாராக படிக்கும் மாணவர், நன்றாக படிக்கும் மாணவரை பார்த்து, ஒரு
மதிப்பெண் பகுதி கேள்விகளை எழுத, சில பள்ளிகளில் ஏற்பாடு
செய்துவிடுகின்றனர். மேலும்,"அறை கண்காணிப்பாளர்களே ஒரு மதிப்பெண்
கேள்விக்கான பதிலை, மாணவர்களுக்கு கூறி விடுகின்றனர்' என்ற குற்றச்சாட்டு
உள்ளது. இதை தவிர்க்கும் வகையில் தான், இந்த புதிய முறையை, இயக்குனர்
தேவராஜன், இந்த ஆண்டு அறிமுகப்படுத்தி உள்ளார். பதிவெண்களை அவரே
ஒதுக்கீடும் செய்கிறார். வேறு வேறு பள்ளி மாணவர்களை கலந்து உட்கார
வைப்பதால், விதிமீறல்கள் தடுக்கப்படும், என்றார்.

தகுதி தேர்வில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தேர்ச்சி: பணியில் சேர மே மாத இறுதியில்நியமன ஆணை வழங்க வேண்டும் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை

ஆசிரியர் தகுதி தேர்வில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அதிக அளவில் தேர்ச்சி
பெற்று உள்ளதால், பணியில் சேருவதற்கான நியமன ஆணை மற்றும் பணியில் சேரும்
காலத்தை மே மாத இறுதியில் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று முதல்-அமைச்சருக்குகோரிக்கைவிடுக்கப் பட்டுஉள்ளது.
கோரிக்கை மனு
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சட்ட பாதுகாப்பு பேரவை தலைவர் அபூபக்கர்
சித்திக், தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள ஒரு கோரிக்கை மனுவில்
கூறி இருப்பதாவது:-
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்களில் தளர்வு செய்திருப்பதை
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சட்ட பாதுகாப்புபேரவை வரவேற்கிறது. தனியார்
பள்ளிகளில் பணியாற்றி வரும் பெரும்பான்மையான ஆசிரியர்கள் தான் இந்த தகுதி
தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் தான் அரசு பள்ளி ஆசிரியர்களாக
பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
முழு ஆண்டு தேர்வுகள்
தற்போது தனியார் பள்ளிகளில் பாடத்திட்டத்தை முழுமையாக நடத்தி முடித்து,
திருப்புதல் தேர்வுகள், முழு ஆண்டு தேர்வுகள் நடத்த வேண்டிய நிலையில்
பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் இருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து
விடைத்தாள் திருத்தம், தேர்வு முடிவுகள் அறிவித்தல், மாணவர்கள்
இடமாற்றம், புதிய மாணவர்கள் சேர்க்கை என்று அனைத்து பள்ளி சார்
நிகழ்வுகளும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில்தான் நடைபெற வேண்டி உள்ளது.
தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி அனைத்து
ஆசிரியர்களும் பள்ளிகளில் பணியில் இருக்க வேண்டியதும் அவசியமாகிறது. அரசு
அறிவிப்பு மற்றும் பணி நியமனத்தின் காரணமாக ஆசிரியர்கள் தனியார்
பள்ளிகளில் இருந்து இடையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் மாண வர்கள்
மற்றும் பள்ளிநிர்வாகங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.
மே மாத இறுதியில் எனவே புதிய ஆசிரியர்கள் நியமன ஆணைகள் மற்றும் பணியில்
சேரும் காலம் ஆகியவை மே மாத இறுதியில் உள்ளவாறு அமைந்தால் தனியார் பள்ளி
மாணவர்களின் நலன் பாதுகாக்கப்படும். அத்துடன் தனியார் பள்ளி
நிர்வாகங்களின் சிரமங்களும் தவிர்க்கப்படும். தமிழக முதல்-அமைச்சர்
இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அபூபக்கர் சித்திக்தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு பட்ஜெட்: பள்ளிக் கல்விக்கென 19 ஆயிரம் கோடி ஒதுக்க அரசு முடிவு, மாணவர்களுக்கு இலவச சயின்டிபிக் கால்குலேட்டர்

மாணவர்களுக்கு இலவச சயின்டிபிக் கால்கு லேட்டர் வழங்கும் திட்டத்தை
முதல்வர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசுப்
பள்ளியின் தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல் படுத்தி
வருகிறது.
கூடுதல்கட்டிடங்கள், கழிவறை
, குடிநீர் வசதி, சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படைகட்டமைப்பு பணிகளுக்காக
நிதியை ஒதுக்கி வருகிறது. மேலும்,
பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு பயன்படும் வகையில்
14 வகையான இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சுமார் 92
லட்சம் பேர் பயன்பெறுகின்றனர்.
அந்த வகையில், கடந்த ஆண்டு பட்ஜெட்டில், பள்ளிக் கல்விக்கென ரூ.16 ஆயிரம்
கோடியை அரசு ஒதுக்கியது. இந்தாண்டு19 ஆயிரம் கோடி ஒதுக்க அரசு முடிவு
செய்துள்ளதாக தெரிகிறது. அதற்காக கூடுதலாக இலவச லேப்டாப், நோட்டுகள்,
காலணிகள், ஜியாமென்டரி பாக்ஸ்,
கலர் பென்சில்கள் வழங்கப்படுகிறது. அத்துடன் கூடுதலாக மேலும் சில
பொருட்களை வழங்க அரசுஆலோசித்துவருகிறது.
அதில் அறிவியல் மற்றும் கணக்கு பாடப்பிரிவுகளை எடுத்து படித்து வரும்
மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில், இலவச சயின்ட்டிபிக் கால்குலேட்டர்
குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல்
நிதி மற்றும் இலவச சலுகைகள்குறித்தஅறிவிப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில்
வெளியாகும் என்றும்தெரிகிறது.

புதிய வடிவமைப்பில் பிளஸ் 2 விடைத்தாள் அச்சடிப்பு பணி தீவிரம்

பிளஸ் 2 தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஆண்டு சுமார் 8
லட்சம் மாணவ மாணவியர் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவர்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் புதிய வடிவமைப்பில் விடைத்தாள்
அச்சிடப்படுகிறது. ஒவ்வொரு பாடத்துக்கும் தனித் தனியாக விடைத்தாள்
அச்சிடப்படுகிறது. இந்த விடைத்தாளில் முகப்புத் தாள் 3
பிரிவுகளாகபிரிக்கப்பட்டுள்ளது. மேல் பகுதியில் மாணவர்கள் பெயர்,
பதிவு எண், தேர்வு எழுத வேண்டிய பாடம், பள்ளி, தேர்வு நடக்கும் தேதி
ஆகியவை அச்சிட்டே வழங்கப்படும்.
மாணவர்கள் எதுவும் நிரப்பத் தேவையில்லை. மேலும்,
மாணவர்களுக்கான பகுதியில் 3 கட்டங்கள் இடம் பெறுகிறது. அதில் தேர்வு எழுத
வந்தாரா, இல்லையா,
முறைகேடு செய்தாரா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதைதேர்வு அறை
மேற்பார்வையாளர் பூர்த்தி செய்வார். இது தவிர தலைமை கண்காணிப்பாளர்,
அறை மேற்பார்வையாளர் ஆகியோர் கையெழுத்திட வேண்டும். அடுத்த இடத்தில்
மாணவர் கையொப்பம் மட்டும் போட வேண்டும். மேலும்,
மாணவரின் போட்டோ அதில் இடம் பெற்று இருக்கும். அடுத்துள்ள கீழ் பகுதியில்
விடைத்தாள் திருத்திய பிறகு மதிப்பெண் போட்டது குறித்து குறிப்பிட
வேண்டிய கட்டங்கள் இடம் பெறுகின்றன.
விடைத்தாளின் முகப்பில் அச்சிடப்பட்டுள்ள மேல்பகுதி,
கீழ்ப்பகுதி ஆகியவை தேர்வுத் துறையால் கிழிக்கப்பட்டு, பின்னர் டம்மி
எண்கள் போட்டு விடைத் தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்புவார்கள். இதன்
மூலம் விடைத்தாளில் எந்த குழப்பமும் வராது. மாணவர்களும் நினைவு மறதியாக
எதை மாற்றி எழுதிவிட முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த விடைத்தாளில்
முகப்பில் 3 இடங்களிலும் ரகசிய குறியீடுகள் இடம் பெறுகின்றன.