வெய்டேஜ் பிரச்சனை1. தற்பொழுது உள்ள சூழலிலும்,எதிர்காலத்திலும் இடை நிலை ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.2. முக்கியமாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பை திடீரென நீக்கியது. இதனால் 15 மற்றும் 20 ஆண்டுகள் வேலைவாய்ப்புஅலுவலகத்தில் தொடர்ந்து பதிந்துவந்து ஆசிரியர் பணி கிடைக்கும் என்ற ஏமாற்றமும் மன வலியுமே மிச்சம்.வெய்டேஜ் பிரச்சனை1. தற்பொழுது உள்ள வெய்டேஜ் முறையால் +2 மற்றும் ஆசிரிய பட்டய மதிப்பெண்ணை அதிகப்படுத்த வாய்ப்பில்லை2. வெய்டேஜ் முறையில் தற்பொழுது ஆசிரியர் பணி கிடைக்கவில்லையெனில் அடுத்து வரும் தகுதித்தேர்வில்வெற்றி பெறுபவர்களுடன் போட்டி போடவேண்டிய சூழல் ஏற்படும்.அப்பொழுதும் இதே நிலமைதான்.ஆக எந்த காலத்திலும் ஆசிரியர் பணிகிடைக்க வாய்ப்பே இல்லை.3. இப்பொழுது உள்ள பாட முறைக்கும் 15 மற்றும் 20 வருடங்களுக்கு முன்பு உள்ள பாட முறைக்கும் உள்ள வேறுபாடு, பாட பிரிவுகளின் வேறுபாடு மற்றும் செய்முறை தேர்வு மதிப்பெண்களின் வேறுபாடு இவற்றால் தகுதியான வெய்டேஜ் மதிப்பெண்ணை கண்க்கிடுவது சரியானதாக இருக்க முடியாது.4. அப்பொழுது உள்ள சூழ் நிலைவேறு. இப்பொழுது கம்யூட்டர்,இன்டர்னெட் வசதிகள் அதிகம்.வாய்ப்புகளும் வசதிகளும் தற்பொழுது அதிகமாக உள்ளது.5. 2010 கல்விக்கொள்கையின்படி நடப்பு ஆண்டின் அறிவை சோதிக்கவேண்டுமே தவிர பழைய மதிப்பெண்களை வெய்டேஜ் முறைக்கு எடுப்பது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல.6. தேர்விற்கு முன்பாக அறிவிக்கவேண்டியGO க்களை நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் தமிழக அரசு அறிவித்ததது.7. தமிழக அரசு 5 சதவீத தளர்வை 2013 தேர்வர்க்கு மட்டும் கொடுத்து 2012 தேர்வர்களை ஏமாற்றியது. 2012 தேர்வர்களுக்கும் கொடுத்தால் 2012 இல் தேர்வாகி பணியில் உள்ள ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற காரணம். அப்படி கொடுத்தால் டி.ஆர்.பிக்கு வேலை பளு அதிகமாகும்.8. தமிழக அரசின் இது போன்ற முறையற்ற அறிவிப்புகளால் என்னைப்போன்றோர் பலர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எங்களது வாழ்வாதாரமும், உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளது9. ஆசிரியர் பணி வழங்க இவ்வளவு கால தாமதம் ஆனதற்கு காரணம் வெய்டேஜ் முறையாகும். இதற்கு 2012 ஆம் ஆண்டின் முறையில் (TET Pass + SENIORITY) ஆசிரியர் பணி வழங்கியிருந்தால் இப்படிப்பட்ட எந்த ஒரு பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது10. இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்குநிரந்தர தீர்வு காண தகுதித்தேர்வுஅறிவித்த ஆண்டிற்கு (2010)முன்பாக உள்ளவர்களுக்கு தகுதித்தேர்வு மதிப்பெண்+ வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்,(அல்லது)தகுதித்தேர்வு மதிப்பெண்+ வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி 50 சதவீதம் , வெய்டேஜ் முறையில் 50 சதவீதம் என்ற முறையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்.இந்த முறை அனைத்து தேர்வர்களுக்கும் பொதுவானதாகும்.யாரையும் பாதிக்காத முறையாகும்.
No comments:
Post a Comment