பள்ளி கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் உடற்கல்வி இயக்குநர்களுக்கு ஒரு அறிக்கையை அனுப்பி உள்ளார். அந்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப போட்டிகளை நடத்த வேண்டும். வரும் அக்டோபர் 28ம் தேதி விளையாட்டு தினவிழாவைநடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்க வேண்டும். சர்வதேச அளவில் விளையாட்டில் பதக்கம் பெறும் திறமை வாய்ந்தவர்களை கண்டறியும் நோக்கத்துடன் இளம்வயது சிறுவர்,சிறுமியர் உடல்திறனை கண்டறிந்திட அவர்களை உரிய முறையில் தேர்வு செய்ய வேண்டும். ஆகஸ்ட் 2ம் வாரத்திற்குள் உடல் திறன் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். 6 முதல் 12ம் வகுப்பு வரை வாரத்திற்கு 2 உடற்கல்வி பாட வேளைகள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். விளையாட்டிற்கான இட ஒதுக்கீட்டில் 9, 10, 11, 12ம் வகுப்புகளில் பெறக்கூடிய விளையாட்டு சான்றிதழ்கள் அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எனவே, பொதுத்தேர்வுகளை காரணம் காட்டி மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தடை செய்யக்கூடாது. ஒவ்வொரு நிலையிலும் வெற்றிபெறும் அணிகள் அடுத்த போட்டிகளில் கண்டிப்பாக பங்கேற்க செய்ய வேண்டும். அவ்வாறு பங்கேற்க செய்ய தவறும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளத
No comments:
Post a Comment