Friday, December 27, 2013

"வாக்கிங்" செல்பவர்களை அனுமதிப்பது அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் விருப்பத்துக்கு உட்பட்டது"

மாணவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் தலைமையாசிரியர்களே பொறுப்பு: பள்ளி கல்வித்துறை"பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியமானது; அதற்கேற்ப தலைமை ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும்; குறைபாடு ஏதேனும் காணப்பட்டால், அதற்கு முழு பொறுப்பு தலைமை ஆசிரியர் ஏற்க நேரிடும்" என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும், பள்ளி கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடித விவரம், பள்ளி வளாகத்தில் பிளக்ஸ் பேனராக வைக்கப்பட்டுள்ளது.கடிதத்தில் கூறியிருப்பதாவது: சில பள்ளி வளாகத்துக்குள் அத்துமீறி வெளியாட்கள் நூழைகின்றனர்; பள்ளிக்கு சொந்தமான பொருட்களை சேதப்படுத்துகின்றனர் என சில இடங்களில் இருந்து புகார்கள் நேரடியாக வந்தன. தலைமை ஆசிரியர்கள் பொறுப்புடன் பணியாற்றி இத்தகைய செயல்களை தவிர்க்க வேண்டும்.பொதுத்தேர்வு வர உள்ளது. மாணவர்களின் கல்வி மற்றும் கற்பித்தல் பணி பாதிக்கப்படக் கூடாது. தேர்வு பணிகளுக்கு எவ்வித இடையூறும் வரக்கூடாது. லேப்-டாப், சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்குகிறது. இப்பொருட்களை பாதுகாக்கும் பொருட்டு, பள்ளி வளாகத்துக்குள் பள்ளியை சாராத வெளிநபர்கள் வந்து செல்லும் நிலையை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.பள்ளிக்குரிய பொருட்கள் பாதுகாப்பு குறைவு ஏற்படாத வண்ணம் கவனமாக வைத்திருக்க வேண்டும். இதில், ஏதேனும் குறைபாடுகள் காணப்படும் பட்சத்தில், சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரே முழு பொறுப்பு ஏற்க வேண்டி வரும். இவ்வாறு, அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூரில், கே.எஸ்.சி., அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் "வாக்கிங்&' செல்லும் வழக்கம் உள்ளது.இதுதொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தியிடம் கேட்ட போது, "பள்ளியை சாராத வெளிநபர்கள் வந்து செல்லும் நிலையை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் கூறியுள்ளார். முகம்தெரியாதவர்களை அனுமதிக்கக்கூடாது என்பதே அந்த உத்தரவு. "வாக்கிங்" செல்பவர்களை அனுமதிப்பது அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் விருப்பத்துக்கு உட்பட்டது" என்றார்.

Tuesday, November 26, 2013

அரசு அறிவிப்புகளில் தமிழ் தேதி அவசியம் போட வேண்டும் - அரசு அறிவிப்பு அரசு உத்தரவு மற்றும் அரசு அறிவிப்புகளில் தமிழ் தேதி அவசியம் போட வேண்டும் என்ற ஆணையை பின்பற்றவில்லையென்றால் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு அறிவிப்பு

Wednesday, October 16, 2013

Tuesday, October 15, 2013

DA

அகவிலைப்படி - பழைய ஊதியத்தின் (5வது ஊதியக் குழு) அடிப்படையில் பெறும் ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஆணை வெளியீடு

Saturday, October 12, 2013

School

தமிழ்வழியில் தரமான இலவச கல்விக்கூடம்-tamilhindu ராதாகிருஷ்ணன் ஒன்றிரண்டு வருடங்கள் மெட்ரிக் பள்ளிகளுக்கு பக்கத்தில் குடியிருப்பவர்களே அதன் வருமானத்தை பார்த்துவிட்டு, தாங்களே மெட்ரிக் பள்ளிகளை திறந்து கல்லாக்கட்ட நினைக்கும் இந்தக் காலத்தில் காமராஜ் - காமாட்சி தம்பதியர், தமிழ்வழிக் கல்விக்காக இலவச பள்ளிக்கூடத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கரூரில்தான் கேட்கக் கிடைக்காத இந்த அபூர்வம்! கரூர் தொழிற்பேட்டையில் உள்ள சக்தி தமிழ்ப்பள்ளிக் கூடம் இப்போது மாவட்ட அளவில் பிரபலம். இங்கு படிக்கும் குழந்தைகள் எந்தப் போட்டிக்கு போனாலும் பரிசுகளை ஒட்டுமொத்தமாக அள்ளிக்கொண்டு வந்துவிடுகிறார்களாம். இதனால் இப்போது, இவர்களை மற்ற பள்ளிகள் போட்டிக்கு அழைப்பதற்கே தயங்குகின்றனவ ். இப்படிப் பொறாமைப்படும் அளவுக்கு சக்தி தமிழ் பள்ளிக்கூடத்தை உருவாக்கிய பெருமை காமராஜ்- காமாட்சி தம்பதிக்கே சேரும். இன்று நேற்றல்ல.. கடந்த 19 வருடங்களாக சக்தி தமிழ் பள்ளிக் கூடத்தில் தமிழால் படிக்க வைக்கிறார்கள்- அதுவும் எவ்வித கட்டணமும் இல்லாமல். இது எப்படி சாத்தியமானது? “எங்கப்பா வெங்கடாசலம், சுதந்திர போராட்ட தியாகி. இந்த தேசத்தின் மீதும் குடிசைவாழ் மக்கள் மீதும் எனக்கும் அக்கறை வந்ததற்கு அதுதான் காரணமா இருக்கணும். நாங்களும் ஏழைக் குடும்பம்தான். அப்பாவுக்கு பெருசா வருமானம் இல்லை. சாயப்பட்டறையில் பங்குதாரர். பத்தாம் வகுப்பு வரை படிச்சுட்டு, அப்பாவோட சாயப்பட்டறையிலே யே பகுதிநேரமா வேலை செஞ்சுக்கிட்டே 2 படிச்சேன். வேலையில கிடைச்ச வருமானத்தை வைச்சு என் செலவுகளை சமாளிச்சிக்கிட்டேன். ஆனாலும், பளஸ் 2-க்கு மேல படிக்க எங்க குடும்ப வறுமை அனுமதிக்கல. அதனால, படிப்புக்கு டாட்டா காட்டிட்டு கேமரா வாடகைக்கு கேமராவை எடுத்து விழாக்க படம் எடுத்துக் குடுத்தேன். அதுலயும் ரொம்பநாள் நீடிக்கமுடியல. நானும் நண்பர்களும் சேர்ந்து டியூஷன் சென்டர் ஆரம்பிச்சோம். குறைவான கட்டணத்துல பிள்ளைங்களுக்கு பாடம் போதிச்சுக்கிட்டே தபாலில் முதுகலைப் பட்டம் வரைக்கும் வந்துட்டேன். நண்பர்கள் சிலபேரு டியூஷன் சென்டரை விட்டு கழண்டுட்டதால தொடர்ந்து சென்டரை நடத்த முடியல. அதனால, இங்கே இருக்கிற தனியார் மெட்ரிக் பள்ளிக்கூடத்துல ஆசிரியரா வேலைக்குச் சேர்ந்துட்டேன். நான் இந்த சக்தி தமிழ் பள்ளிக்கூடத்தை ஆரம்பிக்கிறதுக்கு அங்க கிடைச்ச அனுபவம்தான் மூலதனம். பிள்ளைங்கள பெத்தவங்க தங்களோட புள்ளைங்களும் இங்கிலீஷ் மீடியத்துலதான் படிக்கணும்னு நினைக்கிறாங்களே தவிர, எந்தப் பள்ளியில சேர்த்தா நல்லபடியா அறிவை வளர்த்துக்க ்கன்னு நினைக்கிறதில்ல. ஆங்கிலம்கிறது ஒரு மொழிதான். நம்மாளுங்க அதுதான் வாழ்க்கைன்னு நினைக்கிறாங்க. அதனால, சொத்துக்களை அடமானம் வைச்சாவது பிள்ளைங்கள ஆங்கில வழிப் பள்ளியில கொண்டாந்து தள்ளுறாங்க. பெத்தவங்களோட கட்டாயத்தால அந்தப் பள்ளிகள்ல சேர்ந்துட்டு குழந்தைகள் படுற கஷ்டத்தை கண்ணால பார்த்தேன். அதனாலதான் தமிழ்வழிப் பள்ளியை தொடங்குற எண்ணத்துக்கே வந்தேன். யாரா இருந்தாலும் தாய்மொழியில தான் சிறப்பா சிந்திக்க முடியும். அரிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும். இதைச் சொன்னா கிறுக்கன்னு கிண்டல் பேசுவாங்க. இருந்தாலும் பரவாயில்லைன்னு அசட்டுத் துணிச்சலோட இந்தப் பள்ளிக்கூடத்தை தொடங்குனேன். 45 சென்ட் இடத்தை குத்தகைக்கு எடுத்து, சாதாரண கூரைக் கட்டிடத்துல தொடங்குனேன். ’காசு, பணம் கட்டவேண்டாம்; இலவசமாவே தமிழ்வழிக் கல்வி சொல்லித் தர்றோம்’னு நாங்க சொன்னதை நம்பி, முதல் வருசம் மூணு பிள் ளைங்கள கொண்டாந்து சேர்த்தாங்க. இப்ப எங்க பள்ளிக்கூடத்துல 120 பிள்ளைங்க தமிழில் படிக்கிறாங்க’’ தனது சாதனையை சொல்லிமுடித்தார் காமராஜ் மற்ற பள்ளிகளைப் போல இங்கே சாதி, மதம் கேட்பதில்லை. பில் போட வசதியாக அப்பாவின் வருமானத்தைக் கேட்பதில்லை. படிப்போடு சேர்த்து, தமிழர் பண்பாடு, மொழி, கலாச்சாரம் இவற்றையும் குழந்தைகளுக்கு பக்குவமாய் புகட்டுகிறார்கள். இப்போது இந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே இருந்தாலும் தனித் தேர்வர்களாக பரீட்சை எழுதும் எட்டு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் இங்கே பாடம் நடத்துகிறார்கள். இதில்லாமல், ஆதரவற்ற மாணவ, மாணவியர் 25 பேரை இங்கே தங்கவைத்து அறிவை வளர்க்கு அசத்தலான காரியத்தையும் செய்கிறார் இந்த நவீன கர்மவீரர். மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான சிறப்பு வகுப்புகளையும் இங்கே பார்க்கமுடிகிறத ு புளிமூட்டை கணக்காய் அடைத்துத் திணித்து வைக்காமல், வகுப்புக்கு 15 பேர் மட்டுமே இங்கே அனுமதிக்கப்படுவ து இயல்பில் இல்லாத சிறப்பு. “பிள்ளைங்கட்ட ஃபீஸ் எதுவும் வாங்குறதில்லை. நண்பர்கள், நன்கொடையாளர்கள் குடுக்குற நிதியை வைச்சுத்தான் பள்ளிக்கூடம் நடக்குது. இங்கிருக்கிற ஆசிரியர்களுக்கு, கம்மி சம்பளம்தான். ஆனாலும், அர்ப்பணிப்பு உணர்வோட பணிக்கு வர்றாங்க. அவங்களோட குழந்தைகளையும் எங்க பள்ளிக்கூடத்துல ேயே படிக்க வைச்சிருக்காங்க. இங்கிருக்கிற ஒரு ஆசிரியர் சம்பளம் வாங்காமலேயே பணி செய்கிறார். எங்க மகள் கணினி காந்தியும் இங்கேதான் படிக்கிறா’’ என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியரும் காமராஜின் மனைவியுமான எம்.ஃபில்., பி.எட்., படித்த காமாட்சி தொடர்ந்து பேசிய காமராஜ், “கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்கு அப்புறம், கூரைக்கட்டிடத்துல பள்ளியை நடத்த முடியல. ஒருவருஷம் பக்கத்துல வாடகை கட்டிடத்துல நடத்திக்கிட்டே, பழைய ஓடுகளை நன்கொடையா கேட்டு வாங்கி கூர கட்டிடமா மாத்திட்டோம். எங்க பள்ளிக்கூடம் சிறப்பா செயல்படுறத பாத்துட்டு, பள்ளிக்கல்வித் துறையிலிருந்து, விலையில்லா பாடப்புத்தகங்கள ை வழங்கிட்டு வர்றாங்க. இன்னும் ஒரே ஒரு காரியம் செய்யவேண்டி இருக்கு. இங்க வர்ற குழந்தைகளுக்கு சத்துணவு குடுக்கணும் அரசாங்கத்துலருந்து அதை மட்டும் செஞ்சு குடுத்தாங்கன்னா கோடி புண்ணியமா போகும்’’ என்று கைகூப்பினார். சக்தி தமிழ்ப் பள்ளி குழந்தைகளுடன் காமராஜ் - காமாட்சி தம்பதி

Wednesday, September 25, 2013

annamalai university

அண்ணாமலை பல்கலை. அரசு பல்கலை.யாக மாறியது: அரசிதழில் உத்தரவு வெளியீடு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசு பல்கலைக்கழகமாக மாறியுள்ளது. இதற்கான சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து, அது தமிழக அரசிதழில் செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ளது.

இதையடுத்து, பல்கலைக்கழகத்தின் இணை வேந்தராக இனி உயர் கல்வித் துறை அமைச்சர் செயல்படுவார். இதுவரை இணைவேந்தராக அந்தப் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் எம்.ஏ.எம்.ராமசாமி செயல்பட்டு வந்தார். புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரையில் தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவதாஸ் மீனா நிர்வாகியாகச் செயல்படுவார்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், சம்பளத்தை குறைக்கவும் முடிவு செய்திருப்பதாக வெளியான தகவலையடுத்து, கடந்த 2012-ஆம் ஆண்டு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டது.

நிர்வாக குளறுபடி மற்றும் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதும் கண்டறியப்பட்டதால் பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டன. இதை பரிசீலனை செய்த தமிழக அரசு, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்துவதற்கான சட்ட மசோதாவை தயாரித்தது. அந்த மசோதா கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, மே 16-ஆம் தேதி சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இப்போது ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

7 th pay

7வது ஊதியக் குழு அமைக்க ஒப்புதல் : சிதம்பரம் தகவல்
மத்திய அரசின் 7வது ஊதியக் குழுவை அமைக்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மத்திய நிதியமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 7வது மத்திய ஊதியக் குழுவை அமைக்க பிரதமர் மன்மோகன் சிங் தனது ஒப்புதலை அளித்துள்ளார். இக்குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு தனது பரிந்துரைகள் அளிக்க சராசரியாக 2 ஆண்டுகள் வழங்கப்படும். ஊதியக் குழு அறிவிக்கும் பரிந்துரைகள் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டு வரப்படும்.

ஊதியக் குழுவின் தலைவர், உறுப்பினர்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

6வது ஊதியக் குழு அளித்த பரிந்துரைகள் 2006ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tuesday, September 24, 2013

pg trb

முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, வரும், 30ம் தேதிக்குள்ளாகவோ அல்லது அக்டோபர் முதல் வாரத்திலோ வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டு உள்ளது.

Thursday, September 19, 2013

2 nd term book

அக்டோபர் 3-ந்தேதி மாணவர்களுக்கு 2-ம் பருவ பாடபுத்தகம் வழங்க இயக்குநர் உத்தரவு
            காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளான அக்டோபர் 3-ந்தேதி மாணவர்களுக்கு 2-ம் பருவ பாடபுத்தகம் வழங்க இயக்குநர் உத்தரவு
          காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் அக்டோபர் மாதம் 3ந் தேதி திறக்கப்படுகின்றன. அன்று மாணவர்கள் அனைவருக்கும் 2ம் பருவத்திற்கான பாட புத்தகங்கள், நோட்டுகள் அனைத்தும் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.

காலாண்டு தேர்வுகள்
 
          தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் அனைத்திலும் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகம் வழங்கப்பட்டு வருகின்றன. அதுபோல விலை இல்லா நோட்டு புத்தகங்களும் கொடுக்கப்படுகின்றன.
 
               தற்போது அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் காலாண்டுதேர்வு நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொது வினாத்தாள் வழங்கப்பட்டு வருகிறது. தேர்வுகள் அனைத்தும் வருகிற 21-ந்தேதிக்குள் முடிக்கப்பட்டு விடுமுறை விடப்படுகிறது.
அக்டோபர் 2-ந்தேதி விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் அனைத்தும் அக்டோபர் மாதம் 3-ந்தேதி திறக்கப்படுகின்றன.
 
               தற்போது மாணவர்களின் புத்தகச்சுமையை குறைக்க பாடப்புத்தகங்கள் காலாண்டுவரை ஒரு பருவமாகவும், அரையாண்டுவரை 2-வது பருவமாகவும் முழு ஆண்டுக்கு 3-வது பருவமாகவும் வழங்கப்படுகிறது. இது 9-ம் வகுப்புவரை இந்த பருவமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
 
              அதன்படி முதல் பருவம் முடிந்து அக்டோபர் 3-ந்தேதி 2-வது பருவம் தொடங்குகிறது. அன்று அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் விலை இல்லா பாடப்புத்தகம், நோட்டு புத்தகம் வழங்கப்பட உள்ளது. அதற்காக ஏற்கனவே அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு விட்டன.
 
              எனவே தலைமை ஆசிரியர் கண்காணிப்பில் அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உரிய பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்களை வழங்குவார்கள்.
 
                இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார். இளங்கோவன் தொடக்க கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன் கூறுகையில் அனைத்து தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளிலும் விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளது. பள்ளிக்கூடம் திறந்த அன்று எல்லா மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்றார்.

hall ticket

நுழைவுச்சீட்டுகள் இணையதளம் மூலமாக தேர்வர்களுக்கு வழங்கப்படவுள்ளன.
 

             23.09.2013 அன்று துவங்கவுள்ள மேல்நிலை (12-ம் வகுப்பு) / இடைநிலைக் கல்வி (பத்தாம் வகுப்பு) துணைத் தேர்வினை எழுதவுள்ள தனித் தேர்வர்கள், தங்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை (Admission Slip) இன்று (19.09.2013) காலை முதல் தேர்வு துவங்கும் நாள் (23.09.2013) வரை, www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 
               இவ்விணையதளத்தில், “HIGHER SECONDARY /SSLC SUPPLEMENTARY EXAMINATION, SEPTEMBER/OCTOBER 2013 HALL TICKET PRINT OUT ” என்ற வாசகத்தினை கிளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில், தங்களது விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of birth) பதிவு செய்தால், அவர்களுடைய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 
             தேர்வுக் கூட அனுமதிச் சீட்டில் புகைப்படம் முற்றிலும் பதிவாகாத / மிகவும் சிறிதாகப் பதிவாகியுள்ள தனித்தேர்வர்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பத்தையும் எடுத்துக் கொண்டு, உடனடியாக அருகில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 
               எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்குக் குறைவாகப் பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வினை மீண்டும் செய்வதோடு, எழுத்துத் தேர்விற்கும் வருகை புரிய வேண்டும்.
 
              அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறைத் தேர்விற்கு வருகை தர வேண்டும்.
முதன்முறையாக மேல்நிலைத் தேர்வெழுத விண்ணப்பித்துள்ள நேரடித் தனித் தேர்வர்கள்(HP வகை ) பகுதி I, பகுதி II மொழிப்பாடத்தின் தாள் இரண்டு மற்றும் பகுதி III-ல் சிறப்பு மொழி (தமிழ்) எழுதும் தேர்வர்கள் கேட்டல் / பேசுதல் (aural/oral skill test) திறன் தேர்வுகளைக் கண்டிப்பாக செய்ய வேண்டும்.
 
              மொழிப் பாடங்களில் கேட்டல் / பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழிப் ( தமிழ்) பாடத்தில் கேட்டல் / பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விபரத்தைத் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும்.
 
              உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
 
                சிறப்பு அனுமதித் திட்டத்தின்கீழ் (தக்கல்) ஆன்லைனில் விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், 21.09.2013 மற்றும் 22.09.2013 தேதிகளில் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 
 தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு அஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்பட மாட்டாது.

Tuesday, September 17, 2013

இயக்குனர் உத்தரவு

இயக்குனர் உத்தரவு
             அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவர்கள் 02.10.2013 முதல் 08.10.2013 வரை "Joy of Giving Week" அறிவுறை வழங்கி தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

RTI

தகவல் பெறும் உரிமை சட்டம் விண்ணப்பிக்க ரூ.10 ஆர்டிஐ ஸ்டாம்ப் அஞ்சல் துறை விரைவில் விற்பனை.
மத்திய தகவல் ஆணையம் அஞ்சல் துறைக்கு அனுப்பியுள்ள உத்தரவில்,தகவல் பெற விரும்புவோர் தாங்கள் அனுப்பும் விண்ணப்பத்தில்,அஞ்சல் துறை புதிதாக வெளியிடும் ரூ.10 ஆர்டிஐ ஸ்டாம்ப் ஓட்டி அந்த விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தபாலில் அனுப்ப சிறப்பு ஏற்பாடுகள் செய்யும் படி குறிப்பிட்டுள்ளது.நாடு முழுவதும் உள்ள சுமார்1.50லட்சம் அஞ்சல் துறை அலுவலகங்களில் இதற்காக சிறப்பு கவுன்டர்கள் விரைவில் திறக்கப்படும் என்று அஞ்சல் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆர்டிஐ விண்ணப்பங்களை தபால் நிலையங்களே பெற்று சம்பந்தப்பட்ட துறைகளு க்கு விரைவாக அனுப்ப ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவி த்தார்.

Friday, September 6, 2013

ஆசிரியர் இடமாறுதல் வழக்கு

ஆசிரியர் இடமாறுதல் வழக்கு: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
ஆசிரியர் பணியிடை மாறுதல் தொடர்பாக இடைநிலை ஆசிரியர் பதிவு மூப்பு இயக்கம் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடக்கிறது. இதில் 2008-ம் ஆண்டு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் குறிப்பிட்ட மாவட்டங்களில் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவால், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது, இந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில், 2009-ம் ஆண்டிற்கு பின்னர் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியிட மாறுதல் தரலாம் என தீர்ப்பளித்தது.

தண்ணீர்

தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் 15 அறிகுறிகள்!!!
சரியான அளவில் தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் இதனால் உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்பட்டு, நீண்ட நாட்கள் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.
எப்படியெனில், தண்ணீர் அதிகம் பருகினால், உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்கள் எடுத்துச் செல்வதோடு, மெட்டபாலிசம் அதிகரிக்கப்பட்டு, உறுப்புகள் பாதுகாப்பட்டு, நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, உடலின் வெப்பமும் சீராக இருக்கும். மேலும் உடலின் பெரும்பாலான உறுப்புகள் நீராக உருவானது. அதில் 70 சதவீத தண்ணீரால் தசைகளும், 90 சதவீத தண்ணீரால் மூளையும் மற்றும் 83 சதவீத தண்ணீரால் இரத்தமும் உருவாகியுள்ளது. எனவே தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் தண்ணீர் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. ஆகவே தான், உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அனைத்து மருத்துவர்களும் தண்ணீரை அதிகம் பருக வேண்டும் என்று சொல்கின்றனர். அதுமட்டுமின்றி, பல ஆய்வுகளும், உடலின் செயல்பாடுகள் தங்கு தடையின்றி நடைபெற வேண்டுமெனில், ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண்ணீரை பருக வேண்டும் என்றும் சொல்கிறது.
புதிய ஓய்வூதிய திட்ட மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்
புதிய ஓய்வூதியத் திட்ட மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 115 வாக்குகளும், எதிராக 25 வாக்குகளும் பதிவாகின. மாநிலங்களவையில் இந்த மசோதா மீது பேசிய, நிதி அமைச்சர் ப. சிதம்பரம், அனைத்து உறுப்பினர்களும், மசோதாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இத்திட்டம் முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் கொள்கையாக இருந்தது என்றும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முதல் முறையாக ஆட்சிக்கு வந்தபோதும், தற்போதும் தீவிர பரிசீலனைக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
மசோதாவை இரண்டு நிலைக்குழுக்கள் ஆய்வு செய்துள்ளதாகவும், மக்களவையில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த சிதம்பரம், பெரும்பான்மையுடன் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறினார். மசோதா மீது அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் பேசிய பின், வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, மசோதா நிறைவேற்றப்பட்டது.

நல்லாசிரியர் விருது

போலீஸ் ஸ்டேஷன் போனால் தான் நல்லாசிரியர் விருது கிடைக்குமா: ஆசிரியர்கள் ஆதங்கம்

             மாநில நல்லாசிரியர் விருது பெற, போலீஸ் சான்றிதழ் பெற வேண்டும் என்ற கல்வித் துறையின் புதிய முடிவு, வேதனையாக உள்ளது என, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

          ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியப் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு, செப்.,5ம் தேதி நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு, மாநிலத்தில் 370 ஆசிரியர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. விருது பெற குறைந்தது 20 ஆண்டுகள் வரை எவ்வித புகாருக்கும் ஆளாகாமல் பணியாற்றியிருக்க வேண்டும்.

             மாணவர் மற்றும் சமுதாய மேம்பாட்டிற்கான செல்பாடுகளில் ஆசிரியர்கள் பங்கு வகித்திருக்க வேண்டும். இதையெல்லாம் விட, அரசியல் பின்னணி இருக்க கூடாது போன்ற தகுதிகள் விருது பெற பரிசீலிக்கப்படும். இந்தாண்டு, இந்த விருது பெற விண்ணப்பித்த ஆசிரியர்கள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில், ஐவர் கமிட்டி, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கே சென்று அந்த ஆசிரியர்கள் குறித்து விசாரித்து, விருதுக்கு தகுதியானவர்களை சிபாரிசு செய்தது.

              இதன்பின் பலகட்ட நடவடிக்கைக்கு பின் தான் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், இந்தாண்டு புதிய முடிவாக, விருதுக்கு தேர்வான ஆசிரியர், சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில், "தங்கள் மீது குற்ற வழக்குகள் எதுவும் இல்லை" என்று சான்றிதழ் பெற்று வரவேண்டும் என, வாய்மொழி உத்தரவு போடப்பட்டது.
இதனால், விருது கிடைத்த மகிழ்ச்சியை கொண்டாட முடியாமல், ஆசிரியர்கள் போலீஸ் ஸ்டேஷன் அலையவேண்டியிருந்தது. பலர் அதுபோன்ற சான்றிதழ் பெற முடியாமல் தவித்து, ஒரு வழியாக அந்த சான்றிதழை பெற்ற பின்னர் தான் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

                ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: இருபது ஆண்டுகளுக்குமேல் கல்வி கற்பித்து அனுபவம் உள்ள ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் தான் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. விருது அறிவிக்கப்பட்ட பின் அவர்களை போலீஸ் ஸ்டேஷன் சென்று சான்றிதழ் வாங்கி வர வேண்டும் என்று கூறுவது கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்த உத்தரவை கல்வித் துறை அதிகாரிகள் உடனடியாக வாபஸ் பெறவேண்டும், என்றனர்.

               இந்தாண்டு, நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்வதில் அரசியல் தலையீடு அதிகம் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. சிபாரிசு செய்யப்பட்ட பல ஆசிரியர்கள் மீது குற்ற வழக்குகள், பாலியல் வழக்குகள் இருந்துள்ளன. இதனால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், தாங்கள் தப்பிக்கவே, போலீஸ் சான்றிதழ் பெற்று வரவேண்டும் என்று கடைசி நேரத்தில் வாய்மொழியாக உத்தரவிட்டனர் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Wednesday, September 4, 2013

 


முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகள் 10 நாளில் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இப்போது சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் ஒரு வாரத்துக்குள் முடிவடைந்துவிடும். அதன்பிறகு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மொத்தம் 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கான முக்கிய விடைகள் வெளியிடப்பட்டு, தேர்வர்களிடமிருந்து ஆட்சேபங்கள் பெறப்பட்டன. முக்கிய விடைகள் தொடர்பாக 1,500 பேர் ஆட்சேபம் தெரிவித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் மனு அளித்திருந்தனர். இந்த ஆட்சேபங்களைப் பரிசீலித்த நிபுணர் குழுக்கள் தங்களது பரிந்துரைகளையும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சமர்ப்பித்தனர்.
 நன்றி : தினமணி

மாணவ, மாணவியர் நலனுக்காக, குறை தீர்ப்பு மையம்

தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில், மாணவ, மாணவியர் நலனுக்காக, குறை தீர்ப்பு மையம் அமைக்க, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் திட்டமிட்டுள்ளார்.


தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில், மாணவ, மாணவியர் நலனுக்காக, குறை தீர்ப்பு மையம் அமைக்க, இயக்குனர், தேவராஜன் திட்டமிட்டுள்ளார். நேரில் வர இயலாத வெளி மாவட்ட மாணவ, மாணவியர், கட்டணமில்லா தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, விவரங்களை தெரிவித்தால், உடனடியாக பதிலளிக்கவும், ஏற்பாடு நடந்து வருகிறது. இது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Tuesday, September 3, 2013

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

370 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

                தமிழகம் முழுவதும் 370 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது சென்னையில் வியாழக்கிழமை (செப்.5) நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது.

               தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 196 பேரும், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 135 பேரும், மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்கள் 25 பேரும், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் மற்றும் சமூக நலத் துறை பள்ளிகளைச் சேர்ந்த தலா 2 ஆசிரியர்களுக்கும், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் 10 பேரும் இந்த விருதைப் பெற உள்ளனர்.மாவட்டங்களில் இருந்து இந்த விருதுக்கு 860 பேர் கொண்ட பட்டியல் அனுப்பப்பட்டது. அவர்களிலிருந்து விருதுக்கான 370 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

                 இந்த விருதுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர்களுக்குக் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுடன் ரூ.5 ஆயிரம் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ், வெள்ளிப் பதக்கம் ஆகியவை வழங்கப்படும்.சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. விழா நடைபெறும் அரங்கில் ஆசிரியர் மற்றும் அவருடன் ஒருவரும் அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.பள்ளிக் கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்குகிறார். பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபிதா இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகிக்கிறார்.

Arrested

RAJMOHAN arrested. In thiruvannamalai

மறியல் போராட்டம்

வாழ்த்துக்கள்

TET விடைகள் தொடர்பாக 1800 பேர் ஆட்சேபம்

ஆசிரியர் தகுதித் தேர்வு: 

முக்கிய விடைகள் தொடர்பாக 1800 பேர் ஆட்சேபம்


ஆசிரியர் தகுதித் தேர்வின் முக்கிய விடைகள் தொடர்பாக திங்கள்கிழமை (செப்.2) வரை 1800 பேர் ஆட்சேபம் தெரிவித்து மனு அளித்துள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த மாதம் 17,18-ஆம் தேதிகளில் மாநிலம் முழுவதும் நடைபெற்றது. சுமார் 6.5 லட்சம் பேர் இந்தத் தேர்வினை எழுதினர். தற்போது விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் கேட்பட்ட வினாக்களுக்கான முக்கிய விடைகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. விடைகள் குறித்த ஆட்சபனைகளை ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியத்துக்கு தெரிவிக்க திங்கள்கிழமை (செப்.2) வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.


அதன்படி, 1800 பேர் விடைகள் குறித்த ஆட்சபனை மனுக்களை தேர்வு வாரியத்தில் அளித்துள்ளனர். தமிழ் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளின் விடைகள் தொடர்பாக அதிக எண்ணிக்கையிலான ஆட்சேபனை மனுக்கள் வந்துள்ளதாக தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட நிபுணர் குழுவுக்கு ஆட்சேபனைகள் அனுப்பப்பட்டு, அது குறித்து பரிசீலிக்கப்படும் என்று ஆசிரியர் தகுதித் தேர்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நன்றி : தினமணி

Monday, September 2, 2013

PROFESSIONAL TAX- 2013 | தொழில் வரி

PROFESSIONAL TAX- 2013 | தொழில் வரி


அரையாண்டு வருமானம்  :   
21 ,000   வரை                               :  இல்லை 
21,000  முதல் 30,000 வரை      :   ரூ. 94 
30,001 முதல்  45,000  வரை     :   ரூ.238  
45,001  முதல் 60,000 வரை      :   ரூ.469
60,001 முதல்  75,000 வரை      :  ரூ.706
75,001 முதல்                                :  ரூ. 
938          

மேற்கூறிய தொழில் வரி அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தாது. ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மற்றும் செப்டெம்பர் ஊதியம் கோரும் பட்டியலுடன் தொழில் வரி செலுத்திய ரசீதினை இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் வருமான வரி செலுத்தும் போது, இத்தொகைக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.


தொழில் வரியை குறிப்பிட்ட பகுதியின் ஊராட்சி/ பேரூராட்சி/ நகராட்சி / மாநகராட்சி முடிவு செய்கிறது. எனவே தொழில் வரி ஊருக்கு ஊர் மாறுபடும். பேரூராட்சி, ஊராட்சி என செலுத்த வேண்டிய தொழில் வரியும் தொகை மாறலாம். எனவே உரிய பகுதியில் உள்ள நிர்வாகத்திடம் அனுகி தகவல் பெறுவதே சிறந்தது.

tnptf logo


தற்போது தாக்கல் செய்யப்பட இருக்கும் CPS மசோதா (PFRDA Bill) - ஒரு பார்வை

தற்போது தாக்கல் செய்யப்பட இருக்கும் CPS மசோதா (PFRDA Bill) - ஒரு பார்வை


ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணையம் புதிய பென்சன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதுதான் ஓய்வூதிய நிதியை கையாளுவதற்கான அறக்கட்டளை வங்கியையும், பதிவேடுகள் காப்பக நிறுவனத்தையும், அமலாக்க அறக்கட்டளையையும், ஓய்வூதிய நிதி நிர்வாக அமைப்புகளையும் , பென்சன் வழங்கும் கம்பெனிகளையும் நியமித்து செயல்படுத்துகிறது.

நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்து அந்த ஆணையத்தையும் புதிய பென்சன் திட்டத்தையும் சட்டப்பூர்மாக்கிவிடலாம் என்று காங்கிரஸ் ஐ.மு.கூட்டணி அரசு திட்டமிட்டிருந்தது. 

ஆனால், அவசரச் சட்டம் காலாவதியாகும் முன் ஒரு மசோதா கொண்டுவர முடியவில்லை. 2005 மார்ச்சில் நாடாளுமன்றத்தில் “ஓய்வூதிய நிதி ஒழுங்கு படுத்தும் மற்றும் வளர்ச்சி ஆணைய மசோதா 2005” என்பதை அறிமுகப்படுத்தியது. இடது சாரிகளின் எதிர்ப்பால் அந்த மசோதா 14வது நாடாளுமன்றம் முடியும்வரை சட்டமாக நிறை வேற்ற முடியவில்லை. அந்த மசோதாவும் காலாவதியாகிவிட்டது.

நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு 3 திருத்தங்க முன்வைத்தது.
1. ஓய்வூதிய நிதியிலிருந்து முக்கிய தே வைகளுக்கு பணம் எடுக்க வழிவகை செய்ய வேண்டும்
2. ஓய்வூதிய நிதி நிர்வாக நிறுவனங்கள் குறைந்தபட்ச லாபத்தை உத்தரவாதம் செய்ய வேண்டும்.
3. மசோதாவில் ஓய்வூதிய நிதி கம்பெனி களுக்கு அந்நிய மூலதனம்
வரலாம் என்றும் அது எந்த அளவு வரலாம் என்பது இன்சூர ன்ஸ் திருத்த மசோதாவில் இருக்கும் உச்ச வரம்பைப் பொருத்திருக்கும் என்று கூறப் பட்டுள்ளது.இதன்படிஉடனடியாக26சதவீதம் வரலாம். அதற்கு ஏற்கனவே சட்டம் உள்ளது. திருத்த மசோதா 49 சதவீதத்தை இப்போது பிறப் பித்துள்ளது. சட்டம் நிறைவேறினால் ஓய் வூதிய நிதிக் கம்பெனிகளிலும் அந்நிய மூல தனம் 49 சதவீதம் வரலாம். நாளைக்கு 74 சத வீதம், 100 சதவீதம் என்று அந்த சட்டம் திருத் தப்பட்டால் அதுவும் இதற்குப் பொருந்தும்.

1. ஊழியரின் பங்கிலிருந்து 25 சதவீதம் வரை கடன் பெறலாம். அரசின் பங்கில் கடன் கோர முடியாது. எதற்காக, எத்தனைமுறை, எவ்வ ளவு வரை கடன் பெறலாம் என்பதை ஆணை யம் முடிவு செய்யும்.2. மசோதாவுக்குள்ளேயே ஓய்வூதிய நிதி கம்பெனிகளில் அந்நிய மூலதனம் 26 சதம் வரை வரலாம் என்று சேர்க்கப்படும்.
இன்சூரன்ஸ் திருத்த மசோதா அந்த உச்ச வரம்பை 49 சதவீதமாக்க ஆகஸ்ட் 14 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்காக என்று முன்வைக்கப்பட்டது. பட்டியலில் இருந்தது.ஆனால், அரசியல் மற்றும் இன்சூரன்ஸ் ஊழியர் எதிர்ப்பால் அது பின் வாங்கப்பட்டது. சிதம்பரம் கருத்தொற்றுமை இல்லாததால் பின்வாங்கப்பட்டதாகவும் கருத்தொற்றுமை ஏற்பட்டால் நாளையே நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.

PFRDAமசோதா 19.8.2013 அன்று முதல் தினந்தோறும் பட்டியலில் வைக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றம் பல காரணங் களால் முடங்கி நேரமின்றி நிறைவேற்றப் படாமல் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.30.8.2013 வரைதான் நாடாளுமன்றக் கூட் டத்தொடர். இரு கட்சிகளும் விவாதத்தைத் தவிர்க்க நாடாளுமன்றத்தை முடக்கி சதி செய்துவிட்டு கடைசியில் குரல் வாக்கெடுப் பில் நிறைவேற்ற சதி செய்கிறார்களா என்பது பரிசீலனைக்குரியது.பாஜகவின் திருத்தங்களை ஏற்றாலும் மசோதா சட்டமானால் புதிய பென்சன் திட்டம் ஒழியாது. திருத்தங்கள் புதிய பென்சன் திட் டத்தை ஒழித்து பழைய பென்சனை கொண்டு வரும் நோக்கில் இல்லை என்பதை புரிந்து கொண்டால் பாஜகவும் காங்கிரசும் ஒண்ணு உழைப்பவன் வாயில் மண்ணு என்பதை புரிந்துகொள்ளலாம்.

ஓய்வூதிய நிதி நிர்வாக நிறுவனங்களும் அறக்கட்டளை வங்கியும் தனியாரானால், பின் அந்நிய மூலதனமும் வந்தால் வெனிசுலாவில் ஓய்வூதிய நிதியை எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளையடித்தது போல போய்விடும்.

பங்குச்சந்தையில் மூல தனமிடவே பணமிருக்காது.மேற்கு வங்கம், திரிபுரா தவிர அனைத்து மாநிலங்களிலும் புதிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டுவிட்டது. இடதுசாரிகள் மேற்குவங்கம் கேரளா, திரிபுரா அரசில் இருந்த போது தடுத்துவைத்தனர். கேரளாவில் 1.4.2013 முதல் புதிய பென்சன் திட்டம் அமலாகிறது. அந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் கூட செய்துவிட்டனர்.ஆணைய தலைவரின் கூற்றுப்படி இந்தி யாவில் இதுவரை 53 லட்சம் பேர் இந்த திட் டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

. நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிதி அமைச்சர் கொடுத்த ஒருபதிலில் 2012-13ல் 47,70,503 பேர் சேர்ந்திருப்பதாகவும் அவர் களின் மொத்த ஓய்வூதிய நிதி ரூ.29852 கோடி என்றும் கூறியுள்ளார்.17.8.2012ல் ரூ.17,623 கோடி இந்த நிதியாக இருந்தது என்றும் அதில் மத்திய அரசு ஊழியர்களின் பங்கு ரூ.11,315 கோடி என் றும் மாநில அரசு ஊழியர்களின் பங்கு ரூ.5500 கோடி என்றும் மற்ற தனியார் கம்பெனிகளிடம் இருந்து வந்தது வெறும் ரூ. 801 கோடி என்றும் தெரிகிறது.

வெளியே போராட்டம் தீவிர மானால் மசோதா இந்த 15வது மக்களவை யிலும் நிறைவேறாது. மத்திய அரசு ஊழியர்கள் வாக்கெடுப்பு வரும் தினத்தில் 2 மணி நேர வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். ரயில்வேயும் சேர்ந்தால் பலன் அதிகம் இருக்கும்.

அனைவருக்கும் 1.1.2004 முதல் புதிய பென்சன் திட்டம் அமலானால் தமிழகத்தில் மட்டும் 1.4.2003 முதலே அமல்படுத்தப்பட்டு விட்டது. அமல்படுத்தியது அண்ணாதிமுக அரசு. அதன் பின் வந்த திமுக அது நல்லது என்று கண்டது. அதைத்தொடர்ந்தது.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கடைசி தினத்தில் ஜெயலலிதா அவர்கள் புதிய பென்சன் திட்டத்தை வாபஸ் வாங்குவேன் என்று அறிவித்தார். அதற்கேற்றாற்போல மசோதா 2011 மார்ச்சில் அறிமுகப்படுத்தப் பட்டபோது இடதுசாரிகளோடு சேர்ந்து அதிமுக எதிர்த்து வாக்களித்தது.

ஆனால், தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியப் பணம் அறக்கட்டளை வங்கிக்கு இப்போது அனுப்பப்பட்டு எல்லா ஊழியர்களிடமும் நிரந்தர ஓய்வுக் கணக்கு எண் வழங்க கையெழுத்து வாங்கப்படுகிறது.

அருமை தோழர்களே ! போராடிப் பெற்ற ஓய்வூதிய உரிமையை ஒழித்துக் கட்டும் PFRDA மசோதாவை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்வதை கைவிடக் கோரி மாவட்ட/ வட்டாரத் தலை நகரில் உ நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம் .

10% D.A

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உயர்வு ஜூலை மாதம் முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சம்பள உயர்வு தொடர்பாகவும் அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு காரணமாக 50 லட்சம் அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது.

இதுகுறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 10 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது. இது, ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். தொழிற்சாலை ஊழியர்களுக்கான, இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண், அடிப்படையில் அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது.இதன்படி, ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட தொழிலாளர்களுக்கான சில்லரை பணவீக்க அடிப்படையில், மத்திய நிதி அமைச்சகம் திட்ட முன் வடிவை தயாரித்து, இம்மாதம் அனுப்புகிறது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததும், முறையான அறிவிப்பு வெளியாகும்.இரட்டை இலக்க அகவிலைப்படி உயர்வு, மூன்று ஆண்டுக்கு பின் இப்போதுதான் அறிவிக்கப்படுகிறது. இதற்கு முன், 2010ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.

கடந்த, ஜனவரி முதல் அமலுக்கு வந்த, 8 சதவீத அகவிலைப்படி உயர்வால், 72 சதவீதத்தில், இருந்து, 80 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போது, 10 சதவீதமானால், 90 சதவீதத்தை எட்டும். இதனால், 50 லட்சம் அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவர். பண்டிகை காலம் துவங்க உள்ள நிலையில், இந்த அறிவிப்பிற்காக, அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.