புதிய ஓய்வூதிய திட்ட மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்
புதிய ஓய்வூதியத் திட்ட மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 115 வாக்குகளும், எதிராக 25 வாக்குகளும் பதிவாகின. மாநிலங்களவையில் இந்த மசோதா மீது பேசிய, நிதி அமைச்சர் ப. சிதம்பரம், அனைத்து உறுப்பினர்களும், மசோதாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இத்திட்டம் முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் கொள்கையாக இருந்தது என்றும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முதல் முறையாக ஆட்சிக்கு வந்தபோதும், தற்போதும் தீவிர பரிசீலனைக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
மசோதாவை இரண்டு நிலைக்குழுக்கள் ஆய்வு செய்துள்ளதாகவும், மக்களவையில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த சிதம்பரம், பெரும்பான்மையுடன் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறினார். மசோதா மீது அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் பேசிய பின், வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, மசோதா நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment