Saturday, October 12, 2013
School
தமிழ்வழியில் தரமான இலவச
கல்விக்கூடம்-tamilhindu
ராதாகிருஷ்ணன்
ஒன்றிரண்டு வருடங்கள் மெட்ரிக்
பள்ளிகளுக்கு பக்கத்தில்
குடியிருப்பவர்களே அதன்
வருமானத்தை பார்த்துவிட்டு,
தாங்களே மெட்ரிக்
பள்ளிகளை திறந்து கல்லாக்கட்ட
நினைக்கும் இந்தக் காலத்தில் காமராஜ் -
காமாட்சி தம்பதியர், தமிழ்வழிக்
கல்விக்காக இலவச
பள்ளிக்கூடத்தை நடத்திக்
கொண்டிருக்கிறார்கள். கரூரில்தான்
கேட்கக் கிடைக்காத இந்த அபூர்வம்!
கரூர் தொழிற்பேட்டையில் உள்ள
சக்தி தமிழ்ப்பள்ளிக் கூடம்
இப்போது மாவட்ட அளவில் பிரபலம்.
இங்கு படிக்கும் குழந்தைகள் எந்தப்
போட்டிக்கு போனாலும்
பரிசுகளை ஒட்டுமொத்தமாக
அள்ளிக்கொண்டு வந்துவிடுகிறார்களாம்.
இதனால் இப்போது, இவர்களை மற்ற பள்ளிகள்
போட்டிக்கு அழைப்பதற்கே தயங்குகின்றனவ
். இப்படிப் பொறாமைப்படும்
அளவுக்கு சக்தி தமிழ்
பள்ளிக்கூடத்தை உருவாக்கிய
பெருமை காமராஜ்-
காமாட்சி தம்பதிக்கே சேரும்.
இன்று நேற்றல்ல.. கடந்த 19 வருடங்களாக
சக்தி தமிழ் பள்ளிக் கூடத்தில் தமிழால்
படிக்க வைக்கிறார்கள்- அதுவும் எவ்வித
கட்டணமும் இல்லாமல்.
இது எப்படி சாத்தியமானது?
“எங்கப்பா வெங்கடாசலம், சுதந்திர
போராட்ட தியாகி. இந்த தேசத்தின் மீதும்
குடிசைவாழ் மக்கள் மீதும் எனக்கும்
அக்கறை வந்ததற்கு அதுதான்
காரணமா இருக்கணும். நாங்களும் ஏழைக்
குடும்பம்தான்.
அப்பாவுக்கு பெருசா வருமானம் இல்லை.
சாயப்பட்டறையில் பங்குதாரர். பத்தாம்
வகுப்பு வரை படிச்சுட்டு, அப்பாவோட
சாயப்பட்டறையிலே
யே பகுதிநேரமா வேலை செஞ்சுக்கிட்டே
2 படிச்சேன். வேலையில கிடைச்ச
வருமானத்தை வைச்சு என்
செலவுகளை சமாளிச்சிக்கிட்டேன்.
ஆனாலும், பளஸ் 2-க்கு மேல படிக்க எங்க
குடும்ப வறுமை அனுமதிக்கல. அதனால,
படிப்புக்கு டாட்டா காட்டிட்டு கேமரா
வாடகைக்கு கேமராவை எடுத்து விழாக்க
படம் எடுத்துக் குடுத்தேன். அதுலயும்
ரொம்பநாள் நீடிக்கமுடியல. நானும்
நண்பர்களும் சேர்ந்து டியூஷன் சென்டர்
ஆரம்பிச்சோம். குறைவான கட்டணத்துல
பிள்ளைங்களுக்கு பாடம்
போதிச்சுக்கிட்டே தபாலில் முதுகலைப்
பட்டம் வரைக்கும் வந்துட்டேன்.
நண்பர்கள் சிலபேரு டியூஷன்
சென்டரை விட்டு கழண்டுட்டதால
தொடர்ந்து சென்டரை நடத்த முடியல.
அதனால, இங்கே இருக்கிற தனியார்
மெட்ரிக் பள்ளிக்கூடத்துல
ஆசிரியரா வேலைக்குச் சேர்ந்துட்டேன்.
நான் இந்த சக்தி தமிழ்
பள்ளிக்கூடத்தை ஆரம்பிக்கிறதுக்கு அங்க
கிடைச்ச அனுபவம்தான் மூலதனம்.
பிள்ளைங்கள பெத்தவங்க தங்களோட
புள்ளைங்களும் இங்கிலீஷ் மீடியத்துலதான்
படிக்கணும்னு நினைக்கிறாங்களே தவிர,
எந்தப் பள்ளியில
சேர்த்தா நல்லபடியா அறிவை வளர்த்துக்க
்கன்னு நினைக்கிறதில்ல.
ஆங்கிலம்கிறது ஒரு மொழிதான்.
நம்மாளுங்க அதுதான்
வாழ்க்கைன்னு நினைக்கிறாங்க. அதனால,
சொத்துக்களை அடமானம்
வைச்சாவது பிள்ளைங்கள ஆங்கில வழிப்
பள்ளியில கொண்டாந்து தள்ளுறாங்க.
பெத்தவங்களோட கட்டாயத்தால அந்தப்
பள்ளிகள்ல சேர்ந்துட்டு குழந்தைகள்
படுற கஷ்டத்தை கண்ணால பார்த்தேன்.
அதனாலதான் தமிழ்வழிப்
பள்ளியை தொடங்குற
எண்ணத்துக்கே வந்தேன்.
யாரா இருந்தாலும் தாய்மொழியில தான்
சிறப்பா சிந்திக்க முடியும். அரிய
கண்டுபிடிப்புகளை உருவாக்க
முடியும். இதைச்
சொன்னா கிறுக்கன்னு கிண்டல்
பேசுவாங்க. இருந்தாலும்
பரவாயில்லைன்னு அசட்டுத் துணிச்சலோட
இந்தப் பள்ளிக்கூடத்தை தொடங்குனேன். 45
சென்ட் இடத்தை குத்தகைக்கு எடுத்து,
சாதாரண கூரைக் கட்டிடத்துல
தொடங்குனேன். ’காசு, பணம் கட்டவேண்டாம்;
இலவசமாவே தமிழ்வழிக் கல்வி சொல்லித்
தர்றோம்’னு நாங்க சொன்னதை நம்பி, முதல்
வருசம் மூணு பிள் ளைங்கள
கொண்டாந்து சேர்த்தாங்க. இப்ப எங்க
பள்ளிக்கூடத்துல 120 பிள்ளைங்க
தமிழில் படிக்கிறாங்க’’
தனது சாதனையை சொல்லிமுடித்தார்
காமராஜ்
மற்ற பள்ளிகளைப் போல இங்கே சாதி, மதம்
கேட்பதில்லை. பில் போட வசதியாக
அப்பாவின் வருமானத்தைக் கேட்பதில்லை.
படிப்போடு சேர்த்து, தமிழர் பண்பாடு,
மொழி, கலாச்சாரம் இவற்றையும்
குழந்தைகளுக்கு பக்குவமாய்
புகட்டுகிறார்கள். இப்போது இந்தப்
பள்ளியில் ஐந்தாம்
வகுப்பு வரை மட்டுமே இருந்தாலும்
தனித் தேர்வர்களாக பரீட்சை எழுதும்
எட்டு மற்றும் பத்தாம்
வகுப்பு மாணவர்களுக்கும் இங்கே பாடம்
நடத்துகிறார்கள்.
இதில்லாமல், ஆதரவற்ற மாணவ, மாணவியர்
25
பேரை இங்கே தங்கவைத்து அறிவை வளர்க்கு
அசத்தலான காரியத்தையும் செய்கிறார்
இந்த நவீன கர்மவீரர். மாற்றுத் திறன்
குழந்தைகளுக்கான
சிறப்பு வகுப்புகளையும்
இங்கே பார்க்கமுடிகிறத
ு புளிமூட்டை கணக்காய் அடைத்துத்
திணித்து வைக்காமல், வகுப்புக்கு 15
பேர் மட்டுமே இங்கே அனுமதிக்கப்படுவ
து இயல்பில் இல்லாத சிறப்பு.
“பிள்ளைங்கட்ட ஃபீஸ் எதுவும்
வாங்குறதில்லை. நண்பர்கள்,
நன்கொடையாளர்கள் குடுக்குற
நிதியை வைச்சுத்தான் பள்ளிக்கூடம்
நடக்குது. இங்கிருக்கிற
ஆசிரியர்களுக்கு, கம்மி சம்பளம்தான்.
ஆனாலும், அர்ப்பணிப்பு உணர்வோட
பணிக்கு வர்றாங்க. அவங்களோட
குழந்தைகளையும் எங்க பள்ளிக்கூடத்துல
ேயே படிக்க வைச்சிருக்காங்க.
இங்கிருக்கிற ஒரு ஆசிரியர் சம்பளம்
வாங்காமலேயே பணி செய்கிறார். எங்க
மகள் கணினி காந்தியும் இங்கேதான்
படிக்கிறா’’ என்கிறார் பள்ளியின்
தலைமை ஆசிரியரும் காமராஜின்
மனைவியுமான எம்.ஃபில்., பி.எட்.,
படித்த காமாட்சி
தொடர்ந்து பேசிய காமராஜ், “கும்பகோணம்
பள்ளி தீ விபத்துக்கு அப்புறம்,
கூரைக்கட்டிடத்துல பள்ளியை நடத்த
முடியல. ஒருவருஷம் பக்கத்துல
வாடகை கட்டிடத்துல நடத்திக்கிட்டே,
பழைய
ஓடுகளை நன்கொடையா கேட்டு வாங்கி கூர
கட்டிடமா மாத்திட்டோம். எங்க
பள்ளிக்கூடம் சிறப்பா செயல்படுறத
பாத்துட்டு, பள்ளிக்கல்வித்
துறையிலிருந்து,
விலையில்லா பாடப்புத்தகங்கள
ை வழங்கிட்டு வர்றாங்க. இன்னும்
ஒரே ஒரு காரியம்
செய்யவேண்டி இருக்கு. இங்க வர்ற
குழந்தைகளுக்கு சத்துணவு குடுக்கணும்
அரசாங்கத்துலருந்து அதை மட்டும்
செஞ்சு குடுத்தாங்கன்னா
கோடி புண்ணியமா போகும்’’
என்று கைகூப்பினார்.
சக்தி தமிழ்ப் பள்ளி குழந்தைகளுடன்
காமராஜ் - காமாட்சி தம்பதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment