Tuesday, September 3, 2013

TET விடைகள் தொடர்பாக 1800 பேர் ஆட்சேபம்

ஆசிரியர் தகுதித் தேர்வு: 

முக்கிய விடைகள் தொடர்பாக 1800 பேர் ஆட்சேபம்


ஆசிரியர் தகுதித் தேர்வின் முக்கிய விடைகள் தொடர்பாக திங்கள்கிழமை (செப்.2) வரை 1800 பேர் ஆட்சேபம் தெரிவித்து மனு அளித்துள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த மாதம் 17,18-ஆம் தேதிகளில் மாநிலம் முழுவதும் நடைபெற்றது. சுமார் 6.5 லட்சம் பேர் இந்தத் தேர்வினை எழுதினர். தற்போது விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் கேட்பட்ட வினாக்களுக்கான முக்கிய விடைகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. விடைகள் குறித்த ஆட்சபனைகளை ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியத்துக்கு தெரிவிக்க திங்கள்கிழமை (செப்.2) வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.


அதன்படி, 1800 பேர் விடைகள் குறித்த ஆட்சபனை மனுக்களை தேர்வு வாரியத்தில் அளித்துள்ளனர். தமிழ் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளின் விடைகள் தொடர்பாக அதிக எண்ணிக்கையிலான ஆட்சேபனை மனுக்கள் வந்துள்ளதாக தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட நிபுணர் குழுவுக்கு ஆட்சேபனைகள் அனுப்பப்பட்டு, அது குறித்து பரிசீலிக்கப்படும் என்று ஆசிரியர் தகுதித் தேர்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நன்றி : தினமணி

No comments:

Post a Comment