மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உயர்வு ஜூலை மாதம் முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சம்பள உயர்வு தொடர்பாகவும் அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு காரணமாக 50 லட்சம் அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது.
இதுகுறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 10 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது. இது, ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். தொழிற்சாலை ஊழியர்களுக்கான, இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண், அடிப்படையில் அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது.இதன்படி, ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட தொழிலாளர்களுக்கான சில்லரை பணவீக்க அடிப்படையில், மத்திய நிதி அமைச்சகம் திட்ட முன் வடிவை தயாரித்து, இம்மாதம் அனுப்புகிறது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததும், முறையான அறிவிப்பு வெளியாகும்.இரட்டை இலக்க அகவிலைப்படி உயர்வு, மூன்று ஆண்டுக்கு பின் இப்போதுதான் அறிவிக்கப்படுகிறது. இதற்கு முன், 2010ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.
கடந்த, ஜனவரி முதல் அமலுக்கு வந்த, 8 சதவீத அகவிலைப்படி உயர்வால், 72 சதவீதத்தில், இருந்து, 80 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போது, 10 சதவீதமானால், 90 சதவீதத்தை எட்டும். இதனால், 50 லட்சம் அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவர். பண்டிகை காலம் துவங்க உள்ள நிலையில், இந்த அறிவிப்பிற்காக, அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.
No comments:
Post a Comment