மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புடன் கூடிய புதிய 100 ரூபாய் தாள்களை ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது.
வரிசை எண்ணின் கடைசி 6 இலக்கங்களின் அளவுகளும் ஏறுமுகமாக இருக்கும் வகையில் புதிய தாள்கள் இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மொத்தமுள்ள 9 எழுத்துருக்கள் கொண்ட வரிசை எண்ணில் முதல் 3 எழுத்துருக்களும்ஒரே அளவில் இருக்கும் என்றும் இதற்கடுத்த 6 இலக்கங்களும் ஏறுமுகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முறையால் கள்ள நோட்டுக்களில் இருந்து நல்ல தாள்களை எளிதில் பிரித்தறிய முடியும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. புதிய 100 ரூபாய் தாள்கள் புழக்கத்தில் வந்தாலும் பழைய தாள்களும் தொடர்ந்து செல்லும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இதே முறை 500 மற்றும் ஆயிரம் ரூபாய் தாள்களிலும் பின்னர் கொண்டு வரப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment