Sunday, June 28, 2015

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொது வருங்கால வைப்புநிதி (ஜிபிஎப்) வருடாந்திர கணக்கு அறிக்கை ஆன்லைனில் வழங்கப்பட உள்ளது. இந்த கணக்கு அறிக்கையை ஜூலை முதல் வாரத்தில் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொது வருங்கால வைப்புநிதி (ஜிபிஎப்) வருடாந்திர கணக்கு அறிக்கை ஆன்லைனில் வழங்கப்பட உள்ளது. இந்த கணக்கு அறிக்கையை ஜூலை முதல் வாரத்தில் ஆன்லைனில் பதிவிறக்கம்
செய்துகொள்ளலாம். இதுதொடர்பாக மாநில முதன்மை கணக்காயர் அலுவல கம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:- தமிழக அரசு ஊழியர்களின் 2014-15-ம் நிதி ஆண்டுக்கான பொது வருங்கால வைப்புநிதி (ஜிபிஎப்) வருடாந்திர கணக்கு அறிக்கை (அக்கவுண்ட் சிலிப்) மாநில முதன்மை கணக்காயரின் நிர்வாக இணையதளத்தில் (www.agae.tn.nic.in) ஜூலை முதல் வாரத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. ஜிபிஎப் கணக்கு இருப்பை அறிந்துகொள்வதைப் போன்று சந்தாதாரர்கள் மேற்கண்ட இணையதளத்தில் இருந்து தங்களின் 2014-15 வருடாந்திர கணக்கு அறிக்கையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் சந்தாதாரர்கள் தங்கள் செல்போன் எண்ணை இந்த இணையதளத்தில் பதிவுசெய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். தகவல் பெற.. இந்த ஆண்டுமுதல் வரு டாந்திர கணக்கு அறிக்கை சீட்டு மாநில முதன்மை கணக்கா யர் அலுவலகத்தில் இருந்து விநியோகிக்கப்பட மாட்டாது. கணக்கு அறிக்கையில் கொடுக் கப்பட்டுள்ள விவரங்களில் ஏதேனும் மாறுபாடுகள் இருந் தாலோ அல்லது விடுபட்ட சந்தா தொகை அல்லது விடுபட்ட கடன்தொகை ஆகியவற்றுக்கு விவரங்கள் இருந்தால் தொலை பேசியிலோ, மின்னஞ்சலிலோ, தபால் மூலமாகவோ தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்துகொள் ளலாம். தொலைபேசி எண்: 044-24314477 (ஐவிஆர்எஸ் மூலம்), 24342812. மின்னஞ்சல்: aggpf@tn.nic.in முகவரி: துணை மாநில கணக்காயர் (நிதி-1), தமிழ்நாடு முதன்மை கணக்காயர் அலு வலகம் (கணக்கு மற்றும் பணி வரவு), 361, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 600 018. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

பள்ளிகளில் யோகா கற்றுக்கொடுக்க உடற்கல்வி ஆசிரியர்களுக்கு உத்தரவு

யோகா பயிற்சிகளை அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதற்கு, யோகா பயிற்சியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.கடந்த, 2014ம் ஆண்டு யோகா பயிற்சி கட்டாயமாக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பள்ளிகளில் முறையாக பின்பற்றப்படவில்லை. தற்போது, முன்பு வெளியிட்ட அரசாணையின் படி, தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், யோகா பயிற்சியை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மதிய உணவு இடைவேளைக்கு, 30 நிமிடங்கள் முன்பு யோகா பயிற்சியை தினமும் மேற்கொள்ளவேண்டும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 10 நிமிடம் யோகா; 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை, 15 நிமிடம் யோகா, பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு, 15 நிமிடங்கள் யோகா மற்றும் ஐந்து நிமிடங்கள் தியானம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 

இப்பயிற்சிகளை, உடற்கல்வி ஆசிரியர்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. யோகா பயிற்சியில் நிபுணத்துவம் பெற்றவர்கள் தவிர்த்து, பிறரால் இப்பயிற்சியை வழங்க இயலாது. யோகா பயிற்சிகளின் போது, பல்வேறு விதிமுறைகளை பின்பற்றவேண்டும். அறிவியல் பாடத்தை கையாளும் ஆசிரியர் கணித பாடத்தை கற்பித்தல் எப்படி இருக்குமோ, அதுபோலவே உடற்கல்வி ஆசிரியர் யோகா பயிற்சி அளிப்பது என பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

மத்திய அரசு யோகாவை பிரத்யேக பாடத்திட்டமாக அறிவித்துள்ளது. பாடபுத்தகங்கள் அச்சிடும் பணிகள் தற்போது நடந்துவருகிறது. தொடர்ந்து, யோகா ஆசிரியர்களும் நியமிக்கப்படவுள்ளனர். ஆனால், மாநில அரசு பெயரளவில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. யோகா நிபுணர் பழனிசாமி கூறுகையில்,''யோகா என்பது பயிற்சியாளர்களால் மட்டுமே கற்பிக்க இயலும். அனுபவம் இல்லாமல், ஒரு நாள் இரண்டு நாள் பயிற்சிகளை மேற்கொண்டோ, யோகா வரைபடங்களை பார்த்தோ கற்பிப்பதில் முழுமையான பலன்களை பெற இயலாது. 84 லட்சம் ஆசனங்கள் உள்ளன. 

அதில், 10ஐ முறையாக கற்பதற்கே உடல் தன்மை பொறுத்து, மூன்று அல்லது ஐந்து மாதங்கள் தேவைப்படும். அப்படியிருக்க, ஒரு அனுபவம் இல்லாத ஆசிரியர்கள் கற்பிப்பதில் முழுமையான பலன் இருக்காது. நல்ல திட்டங்களை பெயரளவில் அல்லாமல், மாணவர்களின் நலன் கருதி செயல்படுத்தவேண்டும்,'' என்றார். பயிற்சியாளர்களுக்கு கிராக்கி! மத்திய அரசு யோகாவை ஒரு பாடமாக அறிமுகப்படுத்தி, மதிப்பெண்களும் மதிப்பீடு செய்யப்பட்டு முழுமையான பாடபுத்தகங்கள் தயாரிப்பு பணி நடந்துவருகிறது. மாநில அரசுகள் கட்டாய பாடத்திட்டமாக அமல்படுத்த அந்தந்த மாநில அரசுகளிடம் முடிவுகள் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்கட்டமாக சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் யோகா பயிற்சியாளர்கள் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Friday, June 26, 2015

இடைநிற்றல் உதவித்தொகைக்கு 'ஜீரோ பேலன்ஸ்' வங்கிக்கணக்கு

காரைக்குடி:2015--16-ம் கல்வி ஆண்டிற்கான 10, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விபரங்களை 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்து, 'ஜீரோ பேலன்ஸில் அவர்கள் வங்கி கணக்கு துவக்க பள்ளி கல்வி துறை உத்தரவிட்டு உள்ளது.

             அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர், மேல்நிலை பள்ளிகளில் 10, பிளஸ் 2-வில் பயிலும் மாணவர்கள், “இடை நிற்றலை நீக்கும்” பொருட்டு சிறப்பு ஊக்க தொகை வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு வரை மாணவர்களின் விபரங்கள், வங்கி கணக்கு எண், ஆகியவை கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பப்பட்டது. இதில் மாணவர்களின் விபரங்கள், வங்கி கணக்கு எண்களில் பிழைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் கால தாமதமும் ஏற்பட்டு வந்தது.பிழைகள் மற்றும் கால தாமதத்தை களைய, சிறப்பு ஊக்கத்தொகை பெறும் மாணவர்களின் விபரங்களை, dse.ssasoft.in என்ற இணையதளத்தில், பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள 'யூசர் ஐ.டி., பாஸ்வேர்டு' மூலம், நேரடியாக 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பணிகளை வரும் ஜூலை 3-ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும், எனவும் கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டுகளில், மாணவர்கள் வங்கி கணக்கு ஆரம்பிக்கும்போது, கணக்கு துவங்க சம்பந்தப்பட்ட வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட, குறைந்த பட்ச தொகை கேட்கப்பட்டது. அதுமட்டுமன்றி, ஆறு மாதத்துக்கு மேல், எவ்வித பரிவர்த்தனையும் இல்லாமல் இருந்தால், வங்கிகள் அக்கணக்குகளை முடக்கி வைத்தன. 

இதனால், மாணவர்களுக்கு அனுப்பப்படும் தொகை சென்று சேருவதில் சிக்கல் இருந்தது. இதை களைய, அவர்களுக்கு 'ஜீரோ பேலன்ஸில்' வங்கி கணக்கு துவக்கி, வங்கிகளால் அக்கணக்குகள் முடக்கப்படாதவாறு, நடவடிக்கை எடுக்குமாறு, பள்ளி கல்வித்துறை உத்தர

விட்டுள்ளது, என்றார்.

அதிகாலையில் தண்ணீர் பருகினால் பல வியாதிக

    தினமும் காலையில் தூக்கத்தில் இருந்துஎழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர்அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகிவருகிறது. இங்கு தரப்பட்டிருக்கும் கீழ்வரும்விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால்தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக்குணப்படுத்த முடியும் என்ற விஞ்ஞானமுறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.

    இம் முறையை நம் முன்னோர்கள் பல நூறுஆண்டுகளுக்கு முன்பாக பின்பற்றிவந்துள்ளார்கள். அவர்கள் தண்ணீருக்குப்பதிலாக பழந்தண்ணீரை (சோற்றுப் பானைக்குள்எஞ்சிய சோற்றிக்குள் விட்டு வைத்த நீர்)குடித்துவிட்டு தோட்டத்திற்கோ, வேறுதொழில்களுக்ககோ செல்வார்கள். அதனால்அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.ஆனால் தற்பொழுது நாகரீக உலகில்அவையெல்லாம் அநாகரிகமாககணிக்கப்பெற்று கட்டிலில் தேனீர் (Bed tea)அருந்தும் வழக்கம் முன்னெடுக்கப் பெற்றுநாம்மெல்லாம் நோயாளிகளாகி வருகின்றோம்.

நாம் நித்திரையில் இருக்கும்போது வாய்மூலம்உடலினுள் புகும் நோய் கிருமிகளைஅழிப்பதற்காக வாயினுள் பல நோய் எதிப்புசுரப்புகள் சுரப்பதாகவும், அவை நாம் நித்திரைவிட்டெழுந்ததும் வாய் கழுவாது நீர் பருக்கும்போது உடலினுள் சென்று பல நோய்களைகுணப்படுத்தும் மருந்தாக மாறுகின்றன எனவும்அறிய முடிகின்றது. வாய் கழுவாது காலையில்நீர் குடிப்பவர்கள் கட்டாயம் நித்திரைக்குச்செல்லும்போது பல் துலக்கி வாயை சுத்தமாகவைத்திருத்தல் அவசியமாகின்றது.

Must Visit & Like our page : fb.com/OurErode

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பழையகடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீனகால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம்மூலம் 100% வெற்றிகாரமாக குணப்படுத்தமுடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம்நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

தலை வலி , உடல் வலி, இதய நோய்கள்,ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்டநோய் , வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸிஎனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமானஉடல் பருமன், ஆஸ்துமா, காச நோய்,மூளைக்காய்ச்சல், சிறு நீரகம் மற்றும் சிறு நீர்வியாதிகள் , வாந்தி, பேதி, வாய்வுக்கோளாறுகள்,

மூல வியாதி, சலரோகம் அல்லது சர்க்கரைவியாதி, சகலவிதமான கண் நோய்கள்,கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமானமாதவிடாய் கோளாறுகள், காது, மூக்குத்,தொண்டை கோளாறுகள் போன்றவற்றுக்குஇந்த நீர் மருத்துவம் 100% பயனளிக்கின்றதுஎன இம் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மருத்துவ முறை

1. காலையில் துயில் நீங்கி நீங்கள் எழுந்ததும் ,பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர்(கிளாஸ் ) தண்ணீர் அருந்துங்கள்.

2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம்எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.

3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையானஉங்கள் உணவை உட்கொள்ளலாம்.

4. காலை உணவின் பின் 15 நிமிஷங்களுக்கும்,மதிய போசனம் இராப் போசனத்தின் போதும் 2மணி நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ளவேண்டாம். (After 15 minutes of breakfast, or lunch and dinner do not eat or drink anything for 2 hours)

5. முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்தமுடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம்கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.

மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும்நோயாளிகள் தமது பிணி நீங்கிசுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமானவாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்குஎத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்றவேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம்.

இந்த வழியில் பின்பற்றினால் இந்நோய்கள்முற்றிலும் குணமாகும் வாய்ப்பு அல்லதுமேலும் கடுமையாகாது மட்டுப் படுத்தும் வலுஉண்டாகும் என்று ஜப்பானிய மருத்துவர்கள்கூறுகின்றனர்.

உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்

வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள்

சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி - 30நாட்கள்

மலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) - 10 நாட்கள்

புற்றுநோய் - 180 நாட்கள்

காச நோய் - 90 நாட்கள்.

ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்துதினமும் இம் முறையினைப் பின்பற்றவேண்டும்.

பக்க விளைவுகள் எதுவுமில்லாதமருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாகஉட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டி வரும். ஆனாலும் இந்த முறையைநமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப்பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றேசொல்ல வேண்டும்.

நீர் அருந்தி ஆரோக்கியமாகவும்சுறுசுறுப்பாகவும் இருங்கள். "நீரின்றிஅமையாது உலகு" என வள்ளுவப்பெருந்தகைசொன்னதுக்கு இதுவும் ஒரு காரணமாகஅமையலாம்.

தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர் சங்கத்தின் செய்தி குறிப்பு : 25.06.2015

பணிநிரவல் கலந்தாய்வு குறித்து செய்தி.

      அனைவருக்கும் கல்வி இயக்ககம், சென்னை- 6 மாநில திட்ட இயக்குநர்(SPD) அவர்களின் செயல் முறைகள் PRO.RC.NO 175/PTI/A15/2015 தேதி6/15 மேற்கண்ட செயல்முறையில் கூறியுள்ள தகவல்கள்.  

        அனைத்து பகுதிநேர ஆசிரியர்களின் பணிநிரவல் என்பது 6 ம் வகுப்புமுதல் 8 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில்தகுதி வாய்ந்த பள்ளி, தகுதி இன்மை பள்ளி என்று அதற்கான படிவத்தில்பூர்த்தி செய்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தின் மூலம்26.06.2015 முதல் 08.07.2015 வரை ஒதுக்கீடூ செய்த தேதியில் சென்னை,மாநில திட்ட அலுவலகத்தில் (Workshop) நடைபெற உள்ளது. ஆனால்மேற்கண்ட தேதியில் பணி நிரவல் கலந்தாய்வு நடைபெறுகிறது என்றுதவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என்று தெரிய வருகிறது. ஆனால் பணிநிரவல் நடைபெறும் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம்அதற்கு முறையாக அறிவிப்பு செய்து நடைபெற உள்ளது என்று தெரிவித்துக்கொள்கின்றோம். தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர் சங்கம்.

CPS:பங்களிப்பு ஓய்வூதிய நிதியில் இருந்து 25 சதவீத தொகையை திரும்ப பெறலாம் தமிழகத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்

புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் தங்களின் பங்களிப்புஓய்வூதிய நிதியில் இருந்து 25 சதவீத தொகையை திரும்பப் பெறலாம் என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. 

 

        இதன் மூலம் தமிழகத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.மத்திய அரசுப் பணியில் கடந்த 1.1.2004-க்கு பிறகு சேர்ந்த அனைத்துஊழியர்களும் (முப்படையினர் தவிர) புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள். இந்த திட்டம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (Contributory Pension Scheme-CPF) என்று அழைக்கப் படுகிறது. தமிழகத்தில் 1.4.2003-க்குப் பின்னர் அரசு பணியில் சேர்ந்த ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி, அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம், தர ஊதியம் (கிரேடு பே), இவற்றுக்கான அகவிலைப்படி ஆகிய கூட்டுத்தொகையில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். இதற்குச் சமமான தொகையை அரசு தன் பங்காக செலுத்தும்.

இதற்கென ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் பிரத்யேக சிபிஎஃப் எண் கொடுக்கப்பட்டு அந்த கணக்கில் இந்த தொகை வரவு வைக்கப்படும். சிபிஎப் கணக்கில் உள்ள தொகைக்கு ஆண்டுக்கு 8.7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இவ்வாறு ஊழியரின் கணக்கில் சேரும் தொகை, அவர் ஓய்வுபெறும்போது 60 சதவீதம் திருப்பிக் கொடுக்கப்படும். எஞ்சிய 40 சதவீத தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு ஓய்வூதியமாக வழங்கப்படும். தமிழகத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தைப் பொறுத்தவரையில், ஊழியர்கள் தங்களின் பொது வருங்கால வைப்புநிதியில் (ஜிபிஎப்) இருந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை அரசு கடன்பெறலாம். கடனை திருப்பி செலுத்திய பிறகு மீண்டும் கடன் பெறமுடியும். மேலும் 15 ஆண்டு பணி முடிவடைந்ததும் ஜிபிஎப் நிதியில் இறுதித்தொகையின் ஒரு பகுதியை திரும்ப எடுத்துக்கொள்ளலாம். ஆனால், புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஜிபிஎப் போன்று கடன்பெறும் வசதியோ, பணத்தை திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதியோ இல்லாமல் இருந்துவந்தது. 

இந்த நிலையில், புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்கள் 10 ஆண்டுகள் பணியைமுடித்திருந்தால் அவர்கள் சிபிஎப் கணக்கில் தாங்கள் செலுத்திய தொகையில் இருந்து 25 சதவீதத்தை திரும்ப எடுத்துக்கொள்ளலாம் என்று புதிய ஓய்வூதிய திட்டத்தை கவனித்து வரும் அமைப்பான ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. எனினும், இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப் பட்டுள்ளன. அதன்படி, சந்தாதா ரர்கள், தங்கள் பணிக் காலத்தில் 3 முறை சிபிஎப் தொகையை திரும்ப எடுத்துக்கொள்ளலாம். பிள்ளைகளின் படிப்பு செலவு, திருமண செலவு, வீடு அல்லதுஅடுக்குமாடிக் குடியிருப்பு வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கு, மருத்துவ செலவினங்களுக்கு (புற்றுநோய், சீறுநீரக குறைபாடு, இதய நோய் போன்றவை) இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு முறைக்கும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும். 

இருப்பினும், மருத்துவ செலவினத்துக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள் ளது. இந்த அறிவிப்பின் மூலம் தமிழ்நாட்டில் 2 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள். எனினும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் சிபிஎப் திட்டத்துக்கு வரவேற்பு இல்லை. இதுகுறித்து திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறும்போது, “2003-க்கு முன்பு அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்களைப் போல சிபிஎப் திட்டத்திலும் 6 மாதங்களுக்கு ஒருமுறை கடன்பெறவும், 15 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் இறுதித் தொகையில் ஒரு பகுதியை திரும்ப எடுத்துக்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” என்றார்.

ஹெல்மெட் வாங்கப் போறீங்களா?- சரியாக தேர்ந்தெடுக்க சில யோசனைகள்

இருசக்கர வாகனங்களை ஓட்டுவோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்கிற உத்தரவு வருகிற 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.ஆனால், எத்தகைய ஹெல்மெட் வாங்க வேண்டும் என்பதில் பலருக்கு குழப்பம் இருக்கிறது.

இது குறித்து அரசு மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது, "தலைக்கு கூடுதல் பாதுகாப்பு தருவதற்குத் தான் ஹெல்மெட். அதை உணர்ந்து தயாரிக்கப்பட்ட ஹெல்மெட்டை, தங்களது தலையின் அளவுக்குப் பொருத்தமாக உள்ளதா? என்பதை அறிந்து வாங்குவது தான் நல்லது.பெரிதாக இருந்தால், திடீரென இறங்கி கண்களை மறைக்கும் ஆபத்து உண்டு. அவ்வாறு இறங்கிவிடக்கூடாது என்று சமப்படுத்திக் கொண்டே வாகனம் ஓட்டினால், சீக்கிரமே கழுத்துவலி வந்துவிடும்.

விபத்து நேரத்தில் தனியே கழன்று ஓடிவிடும் ஆபத்தும் உண்டு" என்றார்.வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் தனியார் நிறுவன மேலாளர் பரமேஸ்வரனிடம் கேட்டபோது கூறியது:பெரும்பாலானவர்கள் ஒரு விலையைச் சொல்லி அதற்குள் ஒரு ஹெல்மெட் தாங்க என்றுதான் கேட்கிறார்கள். சிலர் நல்லதா ஒண்ணு குடுங்க என்கிறார்கள். அது உங்கள்உயிரைப் பாதுகாக்காது என்று எல்லோரிடமும் சொல்ல முடிவதில்லை.உடையாமல் உறுதியாக இருப்பது மட்டும் தான் நல்ல ஹெல்மெட் என்று பொத்தாம் பொதுவாக முடிவெடுக்க முடியாது. மோதினால் அந்த பாதிப்பை குறைக்கும் வகையில்உரிய தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்டவை தான் பலன் தரும். எனவே, முடிந்தளவுக்கு நீண்டகாலமாக தயாரிப்பைத் தொடரும் நிறுவனங்களின் ஹெல்மெட்டைதேர்வு செய்வது நல்லது.

ஒரிஜினல் நிறுவனத்தின் பெயரைப் போன்றே போலியான பெயருடனும், போலியான ஐஎஸ்ஐ முத்திரையுடனும் ஹெல்மெட்கள் விற்பனையாகின்றன.விலை எவ்வளவு என்பதை மட்டுமே பிரதானமாக யோசிக்காமல், தங்கள் தலைக்கு அது பொருந்துகிறதா? என்று பார்த்து வாங்க வேண்டும். அதாவது தலையோடு தொடர்பில்லாத அளவுக்குப் பெரிதாக இருப்பதையோ, மிகக் கஷ்டப்பட்டு தலைக்குள்நுழைக்க வேண்டி இருப்பதையோ தேர்வு செய்யக் கூடாது.

ஹெல்மெட்டின் முன்பகுதி கண் புருவத்துக்கு ஒரு அங்குலம் (அதாவது இரண்டு விரல் கனம்) மேலே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கண் களை மறைக்கிற பிளா ஸ்டிக் கண்ணாடியானது, தெளிவாகப் பார்க்கும் வகையிலும், தேவைப்படும்போது மடக்கி விட்டால் நிற்பதாகவும் இருக்க வேண்டும். காவல் துறையினரை ஏமாற்றுகிறோம் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது என்றார்.

7.5 லட்சம் பிளஸ் 1, பிளஸ் 2 பாடப் புத்தகங்கள் புதிதாக அச்சடிக்க உத்தரவு: 'கலைஞர்' பெயரை அழிக்க ரூ.3 கோடி வீண்

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான வரலாறு மற்றும் பொருளாதார பாடப் புத்தகங்களில் முன்னாள் முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சரின் பெயர்கள் இருந்ததால் அந்த புத்தகங்களுக்கு பதில் 7.5 லட்சம் புதிய புத்தகங்களை அச்சடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2004-2005 கல்வி யாண்டில் திருத்தப்பட்டு அறிமுகப் படுத்தப்பட்ட மேல்நிலைப் பள்ளி பாடப் புத்தகங்கள் 2007-ல் சீரமைக்கப்பட்டன. அந்த ஆண்டு புதிய பாடத் திட்டம் அமலுக்கு வந்தது. பேராசிரியர் மு.நாகநாதன் தலைமையிலான பாடநூல் மேம்பாட்டுக் குழு புதிய பாடத் திட்டங்களை வகுத்தது.அதன் அடிப்படையில் புதிய பாடப் புத்தகங்கள் அச்சடிக் கப்பட்டன.

இதில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வரலாறு, பொருளாதாரம் பாடப் புத்தகங்களின் முகவுரை மற்றும் முன்னுரையில் ‘கல்வி வளர்ச்சியில் என்றும் தனிக்கவனம் செலுத்தும் மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் உடனடியாக பாடப் புத்தகங்களை சீரமைப்பதற்கு மாநிலத் திட்டக்குழுத் தலைவர் அவர்கள் தலைமையில் ஒரு வல்லுநர் குழுவை அமைத்தார்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.மேலும், ‘இம்முயற்சிக்கு உறுதுணையாக இருந்து ஊக்குவித்த தமிழக முதல்வர் கலைஞர், மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு ஆகியோருக்கு எங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொள் கிறோம்’ என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது. கடந்த 2012-ம் ஆண்டு இந்தப் புத்தகங்களின் மறு பதிப்பு அச்சுக்கு வந்தது. அப்போதும் அதே முகவுரை மற்றும் முன்னுரை தொடர்ந்தது. கடந்த ஆண்டுகளிலும் இதே புத்தகங்கள் தான் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.இந்நிலையில் இந்த ஆண்டு புத்தகங்கள் மீண்டும் மறு அச்சு செய்யப்பட்டு மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.அப்போது தான், புத்தகங்களின் முன்னுரை மற்றும் முகவுரையில் முன்னாள் முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வி அமைச்சரின் பெயர்கள் இடம் பெற்றிருப்பது குறித்து கல்வித் துறைக்கு தகவல் சென்றது.

உடனடியாக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு வரலாறு, பொரு ளாதாரம் ஆகிய பாடங்களில் ஆங்கிலம், தமிழ் ஆகிய இருமொழி புத்தகங்களும் விநியோகிப்பது நிறுத்தப்பட்டது. ஏற்கெனவே வாங்கிய மாணவர் களிடம் இருந்தும் புத்தகங்கள் திரும்ப பெறப்பட்டன.இதுகுறித்து ‘தி இந்து’விடம் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: பிளஸ் 1மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொருளாதாரம், வரலாறு புத்தகங்களை அச்சடிப் பதற்காக சென்னை, சிவகாசி, திருநெல்வேலி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 40 அச்சகங்களுக்கு கடந்த ஜூன் 19-ம் தேதி ஆர்டர் அளிக்கப்பட்டுள்ளது. 24, 25 ஆகிய தேதிகளுக்குள் அவர்கள் புத்தகங்களை அச்சடித்து தர வேண்டும். ஆனால், இதுவரை (ஜூன் 25-ம் தேதி மதியம் வரை) புத்தகங்கள் வந்து சேரவில்லை.பிளஸ் 1 வகுப்பு புத்தகங் களுக்கு 109 டன் பேப்பர் தேவைப் படுகிறது. ஒரு டன் பேப்பருக்கு தமிழ்நாடு பாடநூல் கழகம் ரூ.50 ஆயிரம் செலுத்துகிறது. தவிர, அச்சுக் கூலியாக ரூ. 4 லட்சம். 12-ம் வகுப்பு புத்தகங்களுக்கு 125 டன் பேப்பர் தேவைப்படுகிறது.

இதற்கும் ஒரு டன் பேப்பருக்கு ரூ.50 ஆயிரம் செலுத்துகிறது பாடநூல் கழகம். அச்சுக்கூலி ரூ. 9 லட்சம். இந்த வகையில் மொத்தம் ரூ. 1 கோடியே 30 லட்சம் செலவாகிறது. ஏற்கெனவே அச்சடிக்கப்பட்ட புத்தகங்களை அழிக்கும் வகையில் இதே அளவில் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் சுமார் ரூ.3 கோடியை அதிகாரிகள் வீண் செய்கின்றனர்.ஒருவேளை அதிகாரி களுக்கு அரசியல் நிர்பந்தம் இருந்திருந்தால் அந்த புத்தகங் களை வாங்கி இரு பக்கங்களை மட்டும் கிழித்திருக்கலாம். இப்போது புதியதாக அச்சடிக்க வீண் செலவு செய்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.