Sunday, July 5, 2015

போலி மருந்து பற்றி புகார் செய்வது எப்படி? மருந்து கடைகளில்'ஸ்டிக்கர்' ஒட்ட முடிவு

  :''போலி மருந்துகள் குறித்து, புகார் செய்வது எப்படி என்பது பற்றி, அனைத்து மருந்து கடைகளிலும், 'ஸ்டிக்கர்' ஒட்டப்படும்,'' என, மத்திய மருந்து உற்பத்திதுறை செயலர் சுப்புராஜ் தெரிவித்தார்.சென்னையில் துவங்கிய இரண்டு நாள், 

 

               இந்திய மருந்து உற்பத்தியாளர் சங்க வர்த்தக கண்காட்சியைத் துவக்கி வைத்து, அவர் பேசியதாவது: இந்தியாவில் உற்பத்தியாகும், 2 லட்சம் கோடி ரூபாய் மருந்துகளில், 50 சதவீதம், 200 நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன; குறைந்த விலை தயாரிப்பே இதற்குக் காரணம். குறைவான நேரத்தில், அதிக மருந்து தயாரிக்கிறோம்; ஆனால், உரியதரத்தில் இல்லை.மருத்துவ உபகரணங்கள் தவிர, மருந்து மூலக்கூறுகளைப் பெருமளவு இறக்குமதி செய்கிறோம்; உள்நாட்டில் கிடைத்தால், குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைக்கும்.
ஓராண்டில், பல உயிர் காக்கும் அத்தியாவசிய மருந்துகளின் விலை குறைந்துள்ளது. காசநோய், பால்வினை நோய் தடுப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடு உள்ளது. உணவு உற்பத்தி, மருந்து உற்பத்தியில் சமரசம் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதால், போலி மருந்துகள், 0.003 சதவீதமே உள்ளன.போலி மருந்துகள் குறித்து, தேசிய மருந்து ஆணைய இணையத்தில், 'பார்மா ஜன் சமாதான்' என்ற பகுதியில் புகார் செய்யலாம். எவ்வாறு புகார் செய்வது என்பது குறித்து, நாடு முழுவதும் உள்ள, ஏழு லட்சம் மருந்து கடைகளிலும், 'ஸ்டிக்கர்' ஒட்டப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment