Saturday, July 11, 2015

டாஸ்மாக்

இன்றையை கண்ணேட்டம்
(டாஸ்மாக்)
தமிழ்நாட்டுல,
4042நூலகங்கள் இருக்கு,6824 டாஸ்மாக் இருக்கு, நான் படிக்கவா?குடிக்கவா?
10 ஊருக்கு 1 பள்ளிக்கூடம்!
1 ஊருக்கு 10 டாஸ்மாக் கடையா?
காய்ச்சி விற்றால் கள்ள்சாராயம்!
அரசே விற்றால் நல்ல சாராயமா..!
இந்த வருஷம் இவ்வளவு பெட்ரோல் விக்கனும்னு தீர்மானம் போட்டால் அது அரபு நாடு.
இந்த வருஷம் இவ்வளவு வாகனங்கள் விக்கனும்னு தீர்மானம் போட்டால் அது ஜப்பான் நாடு.
இந்த வருஷம் இவ்வளவு சாராயம் விக்கனும்னு தீர்மானம் அதுதமிழ் நாடு...
குடிச்சா அரசாங்கத்துக்கு வருமானம்..
போதைல வண்டி ஒட்டுனா போலீஸ்க்கு வருமானம்..
அடிபட்டா ஆஸ்ப்த்திரிக்கு வருமானம்..
குடிக்கிற உங்களுக்கு அவமானம் மட்டுமே..!
காலியான சாராய பாட்டில் சொல்கிறது..
இன்றுஉன்னால் நான் காலி
நாளை என்னால் நீ காலி...!
மதுநாட்டுக்கு வீட்டுக்குகேடு, புகைபிடித்தல் உடல்நலத்திற்கு கேடு என்றுமக்களின்மீதுஅன்பை பொழியும் அரசுஅவற்றை விற்கவும் செய்யும் அதை நீதிமன்றம்தட்டி கேட்காது.
குடிமக்கள் நன்கு குடித்துவிட்டு வண்டிகளை ஓட்டுவதாலும் வண்டிகளுக்கு குறுக்கே வந்து விழுவதாலும் விபத்துகள் நடக்கின்றன. குடித்தவர்களால் அவர்களுடன் வாழ்பவர்கள் படும்கஷ்டங்கள் சங்கடங்கள் சொல்லி மாளாது. இதை நீதிமன்றம்தட்டி கேட்காது.
ஹெல்மட் அணிவதால் மட்டுமே மக்கள் கஷ்டபடுவதுபோல் நீதிமன்றம்இதை மட்டும் கட்டாயப்படுத்தும்.
மக்கள் மீதுஅககறை காட்டும் நீதிமன்றமே உன்னால் டாஸ்க் மார்கை மூட ஆனையிட முடியுமா?

No comments:

Post a Comment