வாழ்நாள் முழுவதும் உங்களால் ஜீரணிக்கமுடியாமல் உள்ளிருந்து தொந்தரவு தரக்கூடிய செய்திகளை மூளைக்குள் திணிப்பது அல்ல கல்வி,வாழ்க்கையை வளப்படுத்துகின்ற, மனிதனை உருவாக்குகின்ற, குணத்தை மேம்படுத்துகின்ற, கருத்துக்களை ஜீரணம் செய்யத்தக்க கல்வியே நாம் வேண்டுவது. செய்திகளைச் சேகரிப்பதுதான் கல்வி என்றால், நூல் நிலையங்கள் அல்லவா மாபெரும் மகான்கள்!
சராசரி மக்களை அன்றாட வாழ்க்கைப் போராட்டத்திற்குத் தயார் செய்யாத கல்வி,ஒழுக்க வலிமையைத் தராத கல்வி,பிறர் நலம் நாடுகின்ர உணர்வைத் தராத கல்வி, சிங்கம்போன்ர தைரியத்தைக் கொடுக்காத கல்வி,அதைக் கல்வி என்றுசொல்ல முடியுமா?
சிறந்த குணத்தை உருவாக்குகின்ற, மன வலிமையை வளர்க்கின்ற, அறிவை விரியச் செய்கின்ற, ஒருவனைச் சொந்தக் கால்களில் நிற்கச்செய்கின்ற கல்வியே தேவை.
- சுவாமி விவேகானந்தர்
Saturday, July 11, 2015
எப்படி இருக்க வேண்டும் கல்வி...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment