Saturday, December 17, 2016

தனியார் கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர், பணத் தட்டுப்பாடு காரணமாக, 'செமஸ்டர்' கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். தனியார் கலை, அறிவியல் மற்றும் இன்ஜி., கல்லுாரிகளில், ஒவ்வொரு செமஸ்டரிலும், தனியாக கல்விக் கட்டணம், தேர்வு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த ஆண்டில், இரண்டாவது செமஸ்டருக்கான கட்டணம், டிச., 1 முதல் வசூலிக்கப்படுகிறது. இதில் பெரும்பாலான கல்லுாரிகள், டிச., 15க்குள் கட்டணம் செலுத்த, காலக்கெடு விதித்துள்ளன. 40 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டியுள்ளதால், மாணவ, மாணவியர் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாட்டில், இந்த தொகையை, வங்கிகளில் எடுக்க முடியாமல், பெற்றோர் தவிக்கின்றனர்; கல்லுாரிகளில் காசோலைகள் வாங்கவும் மறுக்கின்றனர். இதை கண்டு கொள்ளாத கல்லுாரி நிர்வாகங்கள், கட்டணம் செலுத்தாத மாணவ, மாணவியரை, கல்லுாரியை விட்டு வெளியே அனுப்புவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே, கல்லுாரி கல்வி இயக்குனர், தொழில்நுட்பக் கல்லுாரி இயக்குனர் ஆகியோர் தலையிட்டு, மாணவ, மாணவியருக்கு, ஜன., வரை அவகாசம் வழங்க உத்தரவிட வேண்டும் என, மாணவ, மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment