ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின
மாணவர்களுக்கான உயர்
கல்வி உதவித்தொகை திட்ட
நிதி ஒதுக்கீடு இந்த ஆண்டு ரூ.936
கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக
ஆளுநர் உரையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேரவையில்
ஆளுநர் கே.ரோசய்யா ஆற்றிய
உரை:
2013-14-ஆம் ஆண்டு வரவு-
செலவுத் திட்டத்தில் ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியின
மாணவர்களுக்கு உயர்கல்வி
உதவித்தொகை திட்டத்தின் கீழ்
ரூ.396
கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிதி ஒதுக்கீடு ரூ.936
கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
உயர்கல்வி உதவித்தொகை
திட்டத்தின் பயனை தனியார்
கல்லூரிகளில் பயிலும்
ஆதிதிராவிடர் மற்றும்
மாணவர்களுக்கும் விரிவுப்படுத்திய
அரசின் முடிவு, கல்விப்
புரட்சியை ஏற்படுத்தியதோடு, இந்த
மாணவர்களையும்
உயர்கல்வி நீரோட்டத்திற்குள்
கொண்டுவந்துள்ளது.
சமுதாயத்தில் மிகவும்
பின்தங்கியுள்ள பிரிவுகளைச் சேர்ந்த
லட்சக்கணக்கான
ஏழை மாணவர்களுக்கு புதியதொரு
வாய்ப்பை வழங்கியிருக்கும் அரசின்
முடிவை வரவேற்கிறேன்.
இது தவிர, இந்த மாணவர்களுக்கான
தங்குமிட வசதிகளை மேம்படுத்தி,
அவர்கள் கல்வி பயில்வதற்கு நல்ல
சூழலை ஏற்படுத்திட
நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதும்
மன நிறைவை அளிக்கிறது.
No comments:
Post a Comment