Sunday, January 5, 2014

தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் ரூ.2 லட்சம் வரை மருத்துவ உதவி கிடைக்கும் வகையில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடங்கும் வகையில் முறையாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. 

 

தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் ரூ.2 லட்சம் வரை மருத்துவ உதவி கிடைக்கும் வகையில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடங்கும் வகையில் முறையாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
 
தமிழக சட்டசபையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அரசு ஊழியர்களுக்கு இருப்பது போன்று, ஓய்வூதியதாரர்களுக்கும் புதிய காப்பீட்டு திட்டம் தொடங்கப்படுவதாக அறிவித்தார். தமிழகத்தில் 2013–ம் ஆண்டு ஜனவரி 1–ந் தேதி நிலவரப்படி 7 லட்சத்து 350 பேர் ஓய்வூதியர்களாக இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களுக்கு சரியான நேரத்தில் ஓய்வூதியப்பலன்களை அளிப்பதற்காக ரூ.16 ஆயிரத்து 514 கோடியே 34 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அரசு அலுவலர்களுக்கு உள்ளது போலவே ஓய்வூதியதாரர்களின் மருத்துவ செலவினங்களை ஈடுசெய்ய தனி புதிய காப்பீட்டு திட்டத்தை தொடங்க அரசு திட்டமிட்டிருந்தது.
 
             மேலும் ஓய்வூதியதாரர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் உதவி ரூ.35 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்கிறது. புதிய காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்களுக்கும், அவருடை மனைவிக்கும் சேர்ந்து ரூ.2 லட்சம் வரை மருத்துவ உதவி     இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலம் கிடைக்கும்.
தம்பதிகள் இருவரும் ஓய்வூதியதாரர்களாக இருந்தால் மாத சந்தா ஒரு ஆண்டுக்கு மட்டுமே பெறப்படும். காப்பீட்டு திட்டம் குறித்து ஓய்வூதியதாரர்கள், தாங்களாகவே காப்பீட்டு நிறுவனங்களுக்கு சென்று தங்களுக்கு பிடித்த திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.
இதற்கான அரசாணையை நிதித்துறை செயலாளர் கே.சண்முகம் உத்தரவிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment