Friday, January 31, 2014

பிப்., 6ல் அரசு ஊழியர்ஆர்ப்பாட்டம்: பொதுச்செயலாளர் தகவல்:

"தொகுப்பூதிய
பணியாளர்களுக்கு காலமுறை
ஊதியம் மற்றும் வரையறுக்கப்பட்ட
ஓய்வூதியம் வழங்க வேண்டும்
என, இரண்டு அம்ச
கோரிக்கைகளை நிறைவேற்ற
வலியுறுத்தி, பிப்.6ல், மாவட்ட
தலைநகரங்களில் ஊர்வலம் மற்றும்
ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளதாக,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க
மாநில பொதுச் செயலாளர் இரா.
பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
சத்துணவு ஊழியர்கள்,
அங்கன்வாடி பணியாளர்கள்,
ஊராட்சி செயலாளர்கள், வருவாய்
கிராம உதவியாளர்கள் , 27
ஆண்டுகளாக தொகுப்பூதிய
அடிப்படையில்
பணிபுரிந்து வருகின்றனர்.
அதேபோல், மக்கள் நலப்
பணியாளர்களுக்கு மீண்டும்
பணிவழங்க வேண்டும், கம்ப்யூட்டர்
இயக்குனர்கள்,
வேலை வாய்ப்பு அலுவலகத்தில்
பணிபுரியும்
"டைப்பிஸ்ட்"களுக்கு காலமுறை
ஊதியம் மற்றும் வரையறுக்கப்பட்ட
ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி,
பிப். 6ல், மாநில அளவில்
அனைத்து மாவட்ட
தலைநகரங்களிலும் ஊர்வலம்
மற்றும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
அதன் பிறகும்
அரசு செவி சாய்க்கவில்லையெனில்
, பிப். 16ல், சென்னையில்
நடக்கவுள்ள மாநில
செயற்குழு கூட்டத்தில்,
அடுத்தக்கட்ட
நடவடிக்கை குறித்து முடிவு
செய்யப்படும் என்றார்.

எஸ்சி, எஸ்டிமாணவர்களுக்கான உயர்கல்வி உதவித்தொகை உயர்வு:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின
மாணவர்களுக்கான உயர்
கல்வி உதவித்தொகை திட்ட
நிதி ஒதுக்கீடு இந்த ஆண்டு ரூ.936
கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக
ஆளுநர் உரையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேரவையில்
ஆளுநர் கே.ரோசய்யா ஆற்றிய
உரை:
2013-14-ஆம் ஆண்டு வரவு-
செலவுத் திட்டத்தில் ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியின
மாணவர்களுக்கு உயர்கல்வி
உதவித்தொகை திட்டத்தின் கீழ்
ரூ.396
கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிதி ஒதுக்கீடு ரூ.936
கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
உயர்கல்வி உதவித்தொகை
திட்டத்தின் பயனை தனியார்
கல்லூரிகளில் பயிலும்
ஆதிதிராவிடர் மற்றும்
மாணவர்களுக்கும் விரிவுப்படுத்திய
அரசின் முடிவு, கல்விப்
புரட்சியை ஏற்படுத்தியதோடு, இந்த
மாணவர்களையும்
உயர்கல்வி நீரோட்டத்திற்குள்
கொண்டுவந்துள்ளது.
சமுதாயத்தில் மிகவும்
பின்தங்கியுள்ள பிரிவுகளைச் சேர்ந்த
லட்சக்கணக்கான
ஏழை மாணவர்களுக்கு புதியதொரு
வாய்ப்பை வழங்கியிருக்கும் அரசின்
முடிவை வரவேற்கிறேன்.
இது தவிர, இந்த மாணவர்களுக்கான
தங்குமிட வசதிகளை மேம்படுத்தி,
அவர்கள் கல்வி பயில்வதற்கு நல்ல
சூழலை ஏற்படுத்திட
நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதும்
மன நிறைவை அளிக்கிறது.

ஆசிரியர்களின்பணிப்பதிவேடுகள்ஆன்லைனில்பதிவேற்றம

தொடக்கக் கல்வித் துறையில்
கல்வி மேலாண்மைத் தகவல்
முறையின் (EMIS) ஓர் அங்கமான
ஆசிரியர் தன்விவரங்களை (Teachers
Profile) ஆன்லைனில்
பதிவேற்றுவதற்காக மாவட்டக்
கருத்தாளர்களுக்கான பயிற்சிப்
பட்டறை நேற்று (28.01.14)
சென்னையில் நடைபெற்றது.
இதில் மாவட்டத்திற்கு இருவர் வீதம்
கலந்து கொண்டனர்.ஏற்கனவே
ஆஃப்லைனில் பதிவு செய்த
விவரங்களும் பள்ளிகளுக்கான DISE
விவரங்களும்
அரசு இணையத்தளத்தில்
பதிவேற்றப்பட்டுள்ளது. அதில்
ஆசிரியர்களின் தற்போதைய
அடிப்படை விவரங்கள் அனைத்தும்
அந்தந்த ஒன்றியங்களில்
ஆன்லைனில் பதிவிடஅறிவுரைகள்
வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, பணிப்பதிவேட்டிலுள்ள
அனைத்துப் பதிவுகளும்
பதிவிடப்படவுள்ளன. முதற்கட்டமாக
அடிப்படை விவரங்களையும்
புகைப்படத்தையும் தரவேற்றும்
பணி பிப்ரவரிமுதல் வாரத்தில்
தொடங்கப்பட
உள்ளது.ஏற்கனவே பள்ளிகள் குறித்த
DISE விவரங்கள்
பதிவேற்றப்பட்டுள்ளன.
அதில் e-ServiceRegister என்னும்
பக்கத்தில் ஆசிரியர்களின்
அடிப்படை விவரங்களான பெயர்
பிறந்த தேதி, பணியில் சேர்ந்த தேதி,
மொழி, இனம், பதவி உயர்வு,
சம்பளம், வீட்டு முகவரி, இரத்த
வகை, அங்க மச்ச அடையாளங்கள்,
புகைப்படம், மெயில் முகவரி,
செல்பேசி எண், இருசக்கர நாற்சக்கர
ஓட்டுநர் உரிம எண், PAN
கார்டு எண், போன்றவை தற்போது
பதியப்படுகின்றன.
பணிப்பதிவேட்டில் பதியும்
அனைத்து விவரங்களும் விடுப்பு,
சரண்டர் போன்ற விவரங்களும் TPF,
CPS, SPF, HF,
பணிக்கொடை போன்றவற்றுக்கான
வாரிசு நியமனம், ஆதார் எண்
போன்றவையும் அடுத்த கட்டப்
பணியின் போது பதிவேற்றப்பட
உள்ளன.சம்பளக் கமிஷன் ஊதிய
நிர்ணயம், ஓய்வுக் காலப் பயன்கள்,
மாநிலக் கணக்காயருக்குக்கருத்துரு
அனுப்புதல், ஓய்வூதிய நிர்ணயம்,
பதவி உயர்வு, மாவட்ட மாறுதல்,
முன்னுரிமைப் பட்டியல்,
வாரிசு நியமனம் போன்ற
அனைத்தையும் எளிதில் தெளிவாக
முடிக்க e-ServiceRegister
உதவிகரமாக இருக்கும் என்பதால்
இம்முறையை மகிழ்ச்சியுடன்
வரவேற்கலாம். மேலும்
அலுவலகத்தில்
பணிப்பதிவேடு சிதிலமடைந்தாலோ,
வெள்ளம், தீ,
இடிபாடு போன்றவற்றால்
பாழடைந்தாலோ காணாமல்
போய்விட்டாலோ இனி கவலைப்படத்
தேவையில்லை.

பள்ளிக்கல்வி - ஆசிரியர் தகுதித் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் நியமனம் குறித்த தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவு

பான்கார்டு:பழையநடைமுறையை தொடரமுடிவு

பான் கார்டுக்காக
விண்ணப்பிப்பவர்களிடம் பழைய
நடைமுறையையேதொடர
நிதியமைச்சகம்
உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த
சில நாட்களுக்கு முன்பு வரையில்
பான் கார்டு விண்ணப்பிப்பவர்கள்
விண்ணப்ப பாரத்துடன்
அதற்கானதொகை மற்றும்
சான்றிதழ்களின் நகலை மட்டும்
காட்டினால் போதுமானதாக
இருந்தது.
ஆனால்தற்போது குறிப்பிட்ட
கட்டணம் நிர்ணயம்
செய்யப்பட்டு அதனுடன் ஒரிஜினல்
சான்றிதழ்களையும் அனுப்பி வைக்க
உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பல்வேறு தரப்பில் எழுந்த
கண்டனத்திற்கு பி்னனர் இந்த புதிய
உத்தரவை நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளதாகவும் , பழைய
முறையையே நடைமுறைப்
படுத்தப்படும் எனவும்
நிதியமைச்சகம்
உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஓ.பி.சி., பிரிவினர்பட்டியலில் மேலும் 60ஜாதிகள் சேர்க்க முடிவு -dinamalar

புதுடில்லி: இதர
பிற்படுத்தப்பட்டோர் எனப்படும்,
ஓ.பி.சி., பிரிவினர் பட்டியலில்,
மேலும், 60 ஜாதிகளை சேர்க்க, மத்திய
அரசு முடிவு செய்துள்ளது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், இட
ஒதுக்கீடு கொள்கை
பின்பற்றப்படுகிறது. இதர
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்,
2,343 ஜாதிகள், துணை ஜாதிகள்
இடம்பெற்றுள்ளன.
இந்த ஜாதிகளை சேர்ந்த
மாணவர்களுக்கு, கல்வி பயிலும்
போதும், வேலையில் சேரும் போதும்,
குறிப்பிட்ட சதவீதம் இட
ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால்,
நாடு முழுவதும் உள்ள இந்த
பிரிவினரை திருப்திபடுத்தும்
விதத்தில், மேலும், 60 ஜாதிகளுக்கு,
ஓ.பி.சி., அந்தஸ்து வழங்க, மத்திய
அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிஷன்
பரிந்துரையை அடுத்து, பிரதமர்
தலைமையில் நேற்று கூடிய, மத்திய
அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான
ஒப்புதல் நேற்று வழங்கப்பட்டது.

அரசு ஊழியர்களுக்குஅகவிலைப்படி உயர்வதுஎப்படி?

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி,
ஜூலையில் மத்திய
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி
உயர்வுவழங்கப்படும்.
இதையொட்டி மாநில அரசும்
தனது ஊழியர்களுக்கு
அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும்.
கடைசியாக கடந்த 2013
ஜூலை முதல் 80 சதவீதமாக இருந்த
அகவிலைப்படியை 10 சதவீதம்
அதிகரித்து தற்போது 90 சதவீதமாக
இரு அரசு ஊழியர்களும்
பெற்று வருகின்றனர். இனி 2014
ஜனவரி மாத அடிப்படையில் அகவிலைப்
படியை அறிவிக்க வேண்டும்.
இதன்படி இம்மாத இறுதியில்,
நுகர்வோர் விலைக்குறியீட்டு எண்
அடிப்படையில், மத்திய அரசு 10
அல்லது 11 சதவீத
அகவிலைப்படியை அறிவிக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தொகையை ஜனவரி முதல்நிலுவையாக
வைத்து வழங்கும்.
இதையடுத்து மாநில அரசும்
அகவிலைப்படி உயர்வை மார்ச்சில்
அறிவித்து, ஏப்ரலில் 3 மாத
நிலுவையுடன் வழங்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது .
அகவிலைப்படி கணக்கீடு எப்படி:
ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன்
அரசு அறிவிக்கும்
அகவிலைப்படி கணிசமான தொகையாக
கிடைக்கிறது.
இதை நிர்ணயிப்பதற்கென
ஒரு பார்முலா உள்ளது.
அதனடிப்படையில் கணக்கிட்டு 6
மாதங்களுக்கு ஒருமுறை அடிப்படை
சம்பளம் வழங்குகின்றனர். கடந்த 12
மாதத்தில், தேசிய அளவிலான
நுகர்வோர் விலைப்புள்ளியின்
சராசரியை கணக்கிட்டு, அதில்
115.76 என்ற நிர்ணயிக்கப்பட்ட
ஒரு எண்ணை கழிக்கின்றனர். அதில்
கிடைக்கும் எண்ணை 100
ஆல்பெருக்குவர். அத்தொகையை மீண்டும்
115.76ஆல் வகுப்பர். இதையே,
அகவிலை படியாக கணக்கிடுகின்றனர்.
இதுவே அகவிலைப்படி கணக்கிடும்
முறை.
Month All India
Index
% of
increase
Nov-08 148 21.44
Dec-08 147 22.38
Jan-09 148 23.39
Feb-09 148 24.32
Mar-
09 148 25.12
Apr-09 150 25.98
May-
09 151 26.84
Jun-09 153 27.78
July-09 160 29
Aug-
09 162 30.23
Sep-09 163 31.45
Oct-09 165 32.67
Nov-09 168 34.11
Dec-09 169 35.7
Jan-10 172 37.43
Feb-10 170 39.01
Mar-
10 170 40.59
Apr-10 170 42.03
May-
10 172 43.54
Jun-10 174 45.06
July-10 178 46.35
Aug-
10 178 47.50
Sep-10 179 48.66
Oct-10 181 49.81
Nov-10 182 50.81
Dec-10 185 51.97
Jan-11 188 53.12
Feb-11 185 54.20
Mar-
11 185 55.28
Apr-11 186 56.43
May-
11 187 57.51
Jun-11 189 58.59
Jul-11 193 59.67
Aug-
11 194 60.82
Sep-11 197 62.12
Oct-11 198 63.34
Nov-11 199 64.56
Dec-11 197 65.43
Jan-12 198 66.15
Feb-12 199 67.16
Mar-
12 201 68.31
Apr-12 205 69.68
May-
12 206 71.04
Jun-12 208 72.41
Jul-12 212 73.78
Aug-
12 214 75.22
Sep-12 215 76.51
Oct-12 217 77.88
Nov-12 218 79.25
Dec-12 219 80.83
Jan-13 221 82.49
Feb-13 223 84.22
Mar-
13 224 85.87
Apr-13 226 87.38
May-
13 228 88.97
Jun-13 231 90.62
Jul-13 235 92.28
Aug-
13 237 93.94
Sep-13 238 95.59
Oct-13 241 97.32
Nov-13 243 99.12

இந்தியக் கல்வித் திட்டத்தின் மீது யுனெஸ்கோ கடும் விமர்சனம்.

இந்தியாவில்
பின்பற்றப்பட்டு வரும் கல்வித்திட்டம்
பற்றிய கூர்மையான
விமர்சனத்தை யுனெஸ்கோ
முன்வைத்துள்ளது.யுனெஸ்கோ தரப்பில்
கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியக் கல்வித் திட்டம்
நடைமுறையிலிருந்து
மாறுபட்டதாகவும்,
குழந்தைகளுக்கு சவாலானதாகவும்
இருக்கிறது. வியட்நாம் நாட்டின்
கல்வித் திட்டம், அடிப்படைத்
திறன்களில் கவனம்
செலுத்துவதாகவும், குழந்தைகளால்
எளிதாக கற்றுக்கொள்ளக்
கூடியதாகவும் இருக்கிறது. ஆனால்,
இந்தியாவில்
நிலைமை அதற்கு எதிராக
இருக்கிறது.ஆரம்பக்
கல்வியை மேற்கொள்ளும் குழந்தைகள்,
அடிப்படை கணிதம் மற்றும்
கல்வியறிவைப் பெறுவது முக்கியம்.
இதன்மூலம், பின்வரும் நிலைகளில்
தங்களுக்கு கற்பிக்கப்படுவதை, அந்தக்
குழந்தைகளால் எளிதாகப்
புரிந்துகொள்ள
முடியும்.உலகிலேயே, வயதுவந்த
கல்வியறிவுப் பெறாத நபர்கள்,
இந்தியாவில்தான் அதிகமாக உள்ளனர்.
குறைந்தபட்சம் 4 ஆண்டுகளை, பள்ளியில்
செலவழித்து வெளிவருபவர்களில் 90%
பேர் கல்வியறிவற்றவர்களாகவும்,
குறைந்தபட்சம் 5 முதல் 6
ஆண்டுகளை பள்ளியில்
செலவழித்து வெளிவருபவர்களில் 30%
பேர் கல்வியறிவற்றவர்களாகவும்
இருக்கிறார்கள்.இந்த சூழலில், பெண்
குழந்தைகளின்
நிலை எவ்வாறு இருக்கும்
என்பதை சொல்லத் தேவையில்லை.
இந்தியா மற்றும் பாகிஸ்தானில்,
மிகவும் எளிமையான கணித
அறிவுக்கூட இல்லாமல், ஏழை மாணவிகள்
இருக்கிறார்கள்.
உத்திரப் பிரதேசம் மற்றும்
மத்தியப் பிரதேசத்தில், ஐந்தில்
ஒரு ஏழை மாணவிக்கு மட்டுமே,
அடிப்படை கணித
அறிவு இருக்கிறது.கேரளா போன்ற
மாநிலத்தில், ஒரு மாணவருக்கு,
கல்விக்கு செலவழிக்கப்படும்
தொகை ரூ.42,470 என்ற
அளவிற்கு உள்ளது. ஆனால், பீகார்
போன்ற மாநிலங்களில் அந்த
தொகை வெறும் ரூ.6,200 மட்டுமே.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Wednesday, January 29, 2014

அண்ணா பல்கலைக்கழகம், என்ஜினீயரிங் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் MBA, MCA, M.E./M.Tech./M.Arch./ M.Plan முதலிய படிப்புகளில் சேர்வதற்கு ‘டான்செட்’ என்ற நுழைவுத்தேர்வை எழுத இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.கடைசி தேதி : 18.02.2014

அண்ணா பல்கலைக்கழகம், என்ஜினீயரிங்
கல்லூரிகள், கலை அறிவியல்
கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ.,
எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளாண்
முதலிய படிப்புகளில்
சேர்வதற்கு 'டான்செட்' என்ற
நுழைவுத்தேர்வை எழுதவேண்டும். இந்த
தேர்வை அண்ணாபல்கலைக்கழகம் மார்ச்
மாதம் 22–ந்தேதி நடத்துகிறது.
அதில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்
அடிப்படையில் தான் மாணவர்
சேர்க்கை நடைபெறும்.
டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க
அண்ணாபல்கலைக்கழகம்
அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள்
www.annauniv.edu/tancet2014 என்ற
இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
அதாவது தங்களின்
பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பத்துடன், செயலாளர், டான்செட்,
அண்ணாபல்கலைக்கழகம், சென்னை என்ற
முகவரிக்கு டிமாண்ட் டிராப்ட்
எடுத்து, புகைப்படத்துடன்
சான்றிதழ்களையும்
இணைத்து பிப்ரவரி 20–ந்தேதிக்குள்
அனுப்பவேண்டும்.
சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள
மேலாண்மைத்துறை மற்றும்
கணினி அறிவியல் துறைகளில்
எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ.
படிப்பில் சேரவும் இந்த டான்செட்
தேர்வை எழுதவேண்டும்.
இந்த தகவலை சென்னை பல்கலைக்கழகம்
அறிவித்துள்ளது.

இளம்தலைமையாசிரியர்களுக்குதலைமை பண்பு பயிற்சி

இளம்
தலைமையாசிரியர்களுக்கு,
மூன்று நாட்கள், தலைமைப்
பண்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அரசு பள்ளிகளின் தரம் உயர்த்த,
இந்தியா -
இங்கிலாந்து கூட்டு திட்டத்தின் படி,
தலைமைப் பண்பு பயிற்சி,
செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்திற்கு, குஜராத் மற்றும்
தமிழகம் ஆகிய
மாநிலங்கள்,தேர்வு செய்யப்பட்டு,
அரசு பள்ளிகளை மேம்படுத்த,
பயிற்சிகள்
அளிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில்,
இரண்டாவது கட்டமாக, இளம்
தலைமையாசிரியர்களுக்கு, தலைமைப்
பண்பு பயிற்சி, பிப்ரவரி, 3ம்
தேதியில் இருந்து, 8ம் தேதிக்குள்,
மூன்று நாட்கள், அந்தந்த
மாவட்டங்களில், நடத்த
உத்தரவிடப்பட்டுள்ளது.இதில், உயர்
தொழில்நுட்ப முறையில்,
பள்ளி நிர்வாகம், ஆசிரியர் - மாணவர்
உறவு, மாணவர்களின்
திறனை வெளிப்படுத்துதல் உள்ளிட்ட,
பல்வேறு பயிற்சிகள்
வழங்கப்படுகின்றன.

Tuesday, January 28, 2014

'ஆப்சென்ட்' ஆன டி.இ.டி.,தேர்வர்கள்சான்றிதழ்சரி பார்க்க இன்றே கடைச

'கடந்த, 2012 - 13ம்
ஆண்டுகளில் நடந்த ஆசிரியர் தகுதித்
தேர்வு (டி.இ.டி.,) சான்றிதழ்
சரிபார்ப்பில் பங்கேற்காத தேர்வர்கள்,
கடைசி வாய்ப்பாக, இன்று நடக்கும்
முகாம்களில் பங்கேற்கலாம்' என,
ஆசிரியர் தேர்வு வாரியம்
(டி.ஆர்.பி.,) அறிவித்து உள்ளது.
வாரியத்தின்
அறிவிப்பு:கடந்த ஆண்டு, ஆக., மாதம்
நடந்த டி.இ.டி., தேர்வில்,
தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கடந்த,
20ம் தேதி முதல், 27ம் தேதி வரை,
சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.
இதில் பங்கேற்காதவர்கள்,
இன்று நடக்கும் சான்றிதழ்
சரிபார்ப்பில் பங்கேற்கலாம். 2012ல்
நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில்
பங்கேற்காத தேர்வர்களும், இதில்
பங்கேற்கலாம்; இதுவே,
கடைசி வாய்ப்பு.இவ்வாறு,
டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள்குறைக்கப்பட்ட ஊதியம்ஜனவரி மாத சம்பளத்தில்பிடிக்கக் கூடாது :கருவூலங்களுக்குநிதித்துறை அவசரஉத்தரவு

ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையின்
படி அமல்படுத்தப்பட்ட ஊதிய
விகிதங்களில் முரண்பாடுகள் உள்ளதாக
அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள்
குற்றம்
சாட்டின.முரண்பாடுகளை களைய
தமிழக அரசு 3 நபர்
குழுவை அமைத்தது. இந்த குழுக்களின்
பரிந்துரைகள் கடந்த ஜூலை மாதம் 52
அரசு ஆணைகளாக வெளியிடப்பட்டன.
இதில் வேளாண்மை பொறியியல்
துறை, வேளாண்மை துறை, தோட்டக்
கலைத் துறை, மீன்வளத்துறை, வருவாய்
துறை, போலீஸ் துறை,
நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட 22
துறைகளைச் சேர்ந்த 52
பதவிகளுக்கான அடிப்படை ஊதியம், தர
ஊதியத்தில் மாற்றம் செய்து தமிழக
நிதித்துறை உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில்
பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள்
தரப்பில் மூன்று ரிட் மனுக்கள்
தாக்கல் செய்யப்பட்டன.
ஏற்கெனவே நிர்ணயித்து வழங்கப்பட்ட
அடிப்படை ஊதியத்தை அரசு ஆணையின்
அடிப்படையில் திடீரென குறைக்கக்
கூடாது என அந்த மனுவில்
கூறப்பட்டது. இது தொடர்பாக
நிதித்துறை செயலாளர் சண்முகம்
வெளியிட்ட உத்தரவில்
கூறியிருப்பதாவது: ஐகோர்ட்டில்
நடந்து வரும் இந்த வழக்கின்
இறுதி விசாரணை வரும் 30ம்
தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை நிலுவையில்
உள்ளதால் அரசு ஊழியர் களுக
¢கு ஜனவரி மாத ஊதியத்தில்
பிடித்தம் செய்யப்படாது என அட்வகேட்
ஜெனரல் தெரிவித்துள்ளார்.
வழக்கு நிலுவையில் உள்ளதால்
அடிப்படை ஊதியம்
குறைத்து உத்தரவிடப்பட்ட
ஊழியர்களுக்கு ஜனவரி மாத
ஊதியத்தில் பிடித்தம் செய்யக்
கூடாது. ஏற்கனவே வழங்கப்பட்ட
ஊதியத்தையே ஜனவரி மாதத்திற்கும்
வழங்க வேண்டும் என அந்தந்த
துறைகளின் சம்பள
கணக்கு அலுவலர்கள், மாவட்ட
கருவூலம், சார் நிலை கருவூலங்களில்
அலுவலர்கள் கேட்டுக்
கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
எக்ஸ்ட்ரா தகவல்
தமிழகத்தில் 6வது ஊதியக்
குழு பரிந்துரைகள் கடந்த 2009ம்
ஆண்டு ஜூன் மாதம்
அமல்படுத்தப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்குபுத்தகத்துக்கு பதில்டேப்லட் கல்வி முறை:பிரிட்டிஷ் கவுன்சில்,டிசிசி நிறுவனம்ஏற்பாடு.

பிரிட்டிஷ் கவுன்சில்
மற்றும் தனியார் நிறுவனம்
இணைந்து பள்ளி மாணவர்களுக்கான
'டேப்லட் கல்விமுறையை'
அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரிட்டிஷ் கவுன்சில்
மற்றும் டிசிசி நிறுவனம்
(தி கரிக்குலம் கம்பெனி)
இணைந்து பள்ளி மாணவர்களுக்கு,
புத்தகத்திற்கு பதில் 'டேப்லட்டில்
கல்வி கற்கும் முறையை'
அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து விளக்கும்
நிகழ்ச்சி சென்னை பிரிட்டிஷ்
கவுன்சிலில் நேற்று நடைபெற்றது.
இதில், பிரிட்டிஷ் கவுன்சில்
தென்னிந்திய இயக்குனர் பால் செல்லர்ஸ்,
இணை இயக்குனர் நிருபா பெர்னான்டஸ்,
டிசிசி நிறுவன நிறுவனர் மற்றும்
தலைமை செயல் அதிகாரி உஜ்வல் சிங்,
இணை நிறுவனர் ஜனகா புஷ்பானந்தம்,
ஸ்ரீ பாலவித்யாலயா பள்ளி தாளாளர்
சந்தானலெட்சுமி உள்பட பலர்
கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில்
பிரிட்டிஷ் கவுன்சில் தென்னிந்திய
இயக்குனர் பால் செல்லர்ஸ் பேசுகையில்,
" ஆங்கில கல்வி வளர்ச்சியில்
பிரிட்டிஷ் கவுன்சில் அதிக கவனம்
செலுத்தி வருகிறது.
அந்த வகையில்,
டிடிசி நிறுவனத்துடன்
இணைந்து பள்ளி மாணவர்களின் ஆங்கில
அறிவை வளர்க்கவும், புத்தக
சுமையை குறைக்கவும் இந்த
டேப்லட்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில், ஆங்கிலம், அறிவியல், சமூக
அறிவியல், கணக்குபோன்ற
பாடங்களை படிக்க முடியும்.
சென்னையில் முதல் முறையாக
பெரம்பூரில் உள்ள ஸ்ரீ
சாரதா வித்யாலயா பள்ளியில் இந்த
டேப்லட்
கல்வி முறை தொடங்கப்பட்டுள்ளது"
என்றார்.டிசிசி நிறுவனத்தின்
நிறுவனர் மற்றும் தலைமை செயல்
அதிகாரி உஜ்வல் சிங் பேசுகையில், "
மாணவர்களின்
சுமையை குறைப்பதற்கும்,
கல்வியை எளிதாக்கவும் இந்த டேப்லட்
கல்விமுறையை
அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த
டேப்லட்டின் விலை ரூ.7 ஆயிரம் முதல்
ரூ.10 ஆயிரம் வரை. பள்ளியில்
மாணவர்களுக்கு டேப்லட்டும்,
ஆசிரியருக்கு மடிக்கணிணியும்
வழங்கப்படும். மடிக்கணிணி மூலம்
ஆசிரியர் மாணவர்களின்
டேப்லட்டை கட்டுப்படுத்தலாம்.
பள்ளியில் இணைய
இணைப்பு வழங்கப்படும். அதில்
பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்
அனுமதிக்கும் இணைய
தளங்களையே பார்க்க முடியும்.
அதே வேளையில்
வீட்டிலும் ஆப்-லைன் மூலமாக
பாடங்களை படிக்கலாம்.
சென்னையை சேர்ந்த 50 பள்ளிகள் அடுத்த
ஆண்டு முதல் தங்கள் பள்ளிகளில் இந்த
டேப்லட் கல்விமுறையை அமல்படுத்த
எங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்"
என்றார். நிகழ்ச்சியின் இறுதியில்,
டேப்லட்டை பயன்படுத்துவது எப்படி
என்பது குறித்து ஸ்ரீ
சாரதா வித்யாலயா பள்ளி மாணவர்கள்
மற்றும் ஆசிரியை ப்ரீத்தி ஆகியோர்
செயல்முறை விளக்கம் அளித்தனர்.

புதிய 'பான்கார்டு' பெறஇனி ரூ.105 கட்டணம

வருமான
வரித்துறை வழங்கும், 'பான்கார்டு'
பெறுவதற்கு, இனி, 105 ரூபாய்
செலுத்த
வேண்டும்.பான்கார்டு பெறுவதற்கான
நடைமுறைகளை, வருமான
வரித்துறை சில கட்டுப்
பாடுகளை கொண்டு வந்துள்ளது.
ஒருவரே, பல பான்
கார்டுகளை பெற்று மோசடியில்
ஈடுபடுவதாக,
குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து,
பான்கார்டுக்கு விண்ணப்பிக்கும்
போது, ஒவ்வொரு விண்ணப்பதாரரும்,
தங்கள் அடையாளத்தை நிரூபிக்கும்
சான்றிதழின் நகல், முகவரி, பிறந்த
தேதிக்கான சான்றிதழ்களின்
நகல்களை இணைக்க வேண்டும்.பின்,
விண்ணப்பத்தை பான்கார்டுக்கான
விண்ணப்ப மையங்களில், அளிக்கும்போது,
அசல்
சான்றிதழ்களை சரிபார்ப்புக்கு காட்ட
வேண்டும்.
சரிபார்ப்புக்கு பின், அசல்
சான்றிதழ்கள் விண்ணப்பத்தாரிடம்
திரும்ப அளிக்கப்படும். இது,
பிப்ரவரி, 3ம் தேதி முதல்
அமலுக்கு வருவதாக, வருமான
வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர்
கூறினார்.அத்துடன்,
புது பான்கார்டு வாங்குவதற்காக,
வருமான வரித்துறை வசூலிக்கும்
கட்டணம், வரிகள் உட்பட, 105 ரூபாய்
ஆக உயர்கிறது. இப்போதுள்ள கட்டணம்,
94 ரூபாய்; 11 ரூபாய் உயர்கிறது.

TET

தேசிய ஆணையம்
வலியுறுத்தல் ஆசிரியர்
தகுதி தேர்வில் இட
ஒதுக்கீடு வழங்காத
அதிகாரி மீது
நடவடிக்கை
ஆசிரியர் தகுதி தேர்வில் இட
ஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண்
தளர்வு வழங்க மறுத்த அதிகாரிகள்
மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று தேசிய ஆதிதிராவிடர்
ஆணையம் தெரிவித்துள்ளது.
'ஆசிரியர் தகுதி தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்களில் இட
ஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண்
தளர்வு வழங்க வேண்டும்'
என்று தமிழகத்தை சேர்ந்த பொதுக்
கல்விக்கான மாநில மேடை என்ற
அமைப்பினர் தேசிய ஆதி திராவிடர்
ஆணையத்திடம் புகார்
தெரிவித்து இருந்தனர். அந்த
புகாரை பரிசீலித்த தேசிய
ஆணையம்,
பள்ளி கல்வி துறை முதன்மை
செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய
தலைவர் ஆகியோருக்கு கடந்த 23ம்
தேதி கடிதம் அனுப்பியது.
அதில் கூறியிருப்பதாவது:
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு
ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண்
தளர்வு வழங்க உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால், அரசு எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இடஒதுக்கீட்டு கொள்கையை
நடைமுறைப்படுத்த தவறிய
அதிகாரிகள்
மீது வன்கொடுமை தடுப்பு
சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க
வேண்டும். என்ன
நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது
பற்றி உடனடியாக தேசிய
ஆதி திராவிடர் ஆணைய
சென்னை மண்டல
அலுவலகத்துக்கு தெரிவிக்க
வேண்டும். தவறினால் இந்த புகார்
குறித்த விவரத்தை டெல்லியில்
உள்ள தலைமை அலுவலகத்துக்கு
தெரிவிக்கப்படும். இவ்வாறு அந்த
கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம்
சான்று சரிபார்ப்பின்போது தேர்ச்சி
பெற்றவர்கள் சமர்ப்பித்த பட்ட
படிப்பு, பி.எட் படிப்புக்கான
சான்றுகளை மட்டுமே
சரிபார்க்காமல்,
பணி நியமனத்துக்கு தேவையான
வெயிட்டேஜ்
கணக்கிட்டு தரவரிசை தயார்
செய்யும் பணியையும்
இணைத்தே செய்கிறது.
இது விதிகளை மீறும் தவறான
நடவடிக்கை. ஆனால் சிபிஎஸ்இ
கல்வி வாரியம் தகுதி தேர்வுக்குரிய
சான்றுகளை மட்டுமே சரி பார்க்கும்
பணியை முறையாக
செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Sunday, January 5, 2014

தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் ரூ.2 லட்சம் வரை மருத்துவ உதவி கிடைக்கும் வகையில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடங்கும் வகையில் முறையாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. 

 

தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் ரூ.2 லட்சம் வரை மருத்துவ உதவி கிடைக்கும் வகையில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடங்கும் வகையில் முறையாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
 
தமிழக சட்டசபையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அரசு ஊழியர்களுக்கு இருப்பது போன்று, ஓய்வூதியதாரர்களுக்கும் புதிய காப்பீட்டு திட்டம் தொடங்கப்படுவதாக அறிவித்தார். தமிழகத்தில் 2013–ம் ஆண்டு ஜனவரி 1–ந் தேதி நிலவரப்படி 7 லட்சத்து 350 பேர் ஓய்வூதியர்களாக இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களுக்கு சரியான நேரத்தில் ஓய்வூதியப்பலன்களை அளிப்பதற்காக ரூ.16 ஆயிரத்து 514 கோடியே 34 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அரசு அலுவலர்களுக்கு உள்ளது போலவே ஓய்வூதியதாரர்களின் மருத்துவ செலவினங்களை ஈடுசெய்ய தனி புதிய காப்பீட்டு திட்டத்தை தொடங்க அரசு திட்டமிட்டிருந்தது.
 
             மேலும் ஓய்வூதியதாரர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் உதவி ரூ.35 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்கிறது. புதிய காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்களுக்கும், அவருடை மனைவிக்கும் சேர்ந்து ரூ.2 லட்சம் வரை மருத்துவ உதவி     இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலம் கிடைக்கும்.
தம்பதிகள் இருவரும் ஓய்வூதியதாரர்களாக இருந்தால் மாத சந்தா ஒரு ஆண்டுக்கு மட்டுமே பெறப்படும். காப்பீட்டு திட்டம் குறித்து ஓய்வூதியதாரர்கள், தாங்களாகவே காப்பீட்டு நிறுவனங்களுக்கு சென்று தங்களுக்கு பிடித்த திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.
இதற்கான அரசாணையை நிதித்துறை செயலாளர் கே.சண்முகம் உத்தரவிட்டு உள்ளார்.

15 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமனம்

15 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் விழாவை, முதல்வர் தலைமையில், விரைவில் பிரமாண்டமாக நடத்த, கல்வித்துறை முடிவு

லோக்சபா தேர்தலை மனதில் கொண்டு, பள்ளி கல்வித்துறையில், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் விழாவை, முதல்வர் தலைமையில், விரைவில் பிரமாண்டமாக நடத்த, கல்வித்துறை, அதிரடி முடிவு செய்துள்ளது.குறைவான எண்ணிக்கையிலான பணி நியமனம், அமைதியாக, கலந்தாய்வு மூலம் நடத்தப்படுகிறது. ஆனால், அதிக எண்ணிக்கையிலான பணி நியமனம் என்றால், முதல்வர் பங்கேற்கும் வகையில், பிரமாண்டமாக விழா நடத்தப்படுகிறது.

பணி நியமன உத்தரவு:கடந்த, 2012, டிசம்பரில், 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு வழங்கும் விழா, சென்னை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், விமரிசையாக நடந்தது. இதில், முதல்வர் பங்கேற்று, பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.அதன்பின், மீண்டும் பெரிய அளவிலான பணி நியமனம், விரைவில் நடக்க உள்ளது. அரசு மேல்நிலை பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு மூலம், 12 ஆயிரம், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியரும், தேர்வு செய்யப்பட உள்ளனர். விரைவில், 15 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதால், இந்நிகழ்ச்சியை, சாதாரண முறையில் நடத்தாமல், முதல்வர் தலைமையில், 2012ஐ போல், பிரமாண்டமாக நடத்த, கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.லோக்சபா தேர்தலை மனதில்கொண்டு, புதிய ஆசிரியர் நியமனத்தை, விரைந்து நடத்த,தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டால், தேர்தல் விதிமுறைகள், அமலுக்கு வந்துவிடும்.அதன்பின், பணி நியமன உத்தரவு வழங்கும் விழாவை நடத்த முடியாத நிலை ஏற்படலாம். பிப்ரவரி முதல் வாரத்தில், தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம். எனவே, அதற்கு முன்னதாக, ஆசிரியர் நியமன விழாவை நடத்தி முடிக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
வழக்கு:
ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாகவும், முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பாகவும், சென்னை, உயர்நீதிமன்றத்தில், வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளை, விரைந்து முடித்து, இறுதி தேர்வு பட்டியலை வெளியிடவும், ஏற் பாடுகள் நடந்து வருகின்றன.டி.இ.டி., தேர்வு முடிவு வெளியான நிலையில், இன்னும், சான்றிதழ் சரி பார்ப்பு நடக்கவில்லை. அதேபோல், முதுகலைதமிழ் பாடத்திற்கு மட்டும், இறுதி தேர்வு பட்டியல், வெளியானது. மற்ற பாடங்களுக்கு, வழக்கு காரணமாக, இறுதி பட்டியல் வெளியாகவில்லை.இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரம் கூறுகையில், 'அனைத்து வழக்குகளும், ஒன்றாக விசாரிக்கப்படுவதால், விரைவில், தீர்ப்பு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. முடிவு வந்துவிட்டால், ஒரே வாரத்தில், டி.இ.டி., தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி, அடுத்த ஒரு வாரத்தில், இறுதி தேர்வு பட்டியலை வெளியிட்டு விடுவோம்' என, தெரிவித்தன
thanks- dinamalar

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ்; முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு




தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே போனஸ் என்றிருந்ததை மாற்றி, முதன் முதலில் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பொங்கல் திருநாளன்று கருணைத் தொகை வழங்கும் முறையை அறிமுகப்படுத்திய பெருமை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரையே சாரும்.
எனது தலைமையிலான அரசும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பணித் தன்மையையும், வேலைப் பளுவினையும் கருத்தில் கொண்டு, அவர்களைப் பாதுகாக்கும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும், பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது.
அந்த வகையில், பொங்கல் பண்டிகையை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் சிறப்பாக கொண்டாட ஏதுவாக, அவர்களுக்கு போனஸ் மற்றும் சிறப்பு போனஸ் வழங்க நான் உத்தர விட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன்படி,
1) 2012-2013 ஆம் நிதி ஆண்டிற்கு, `சி' மற்றும் `டி' பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3,000 ரூபாய் என்ற உச்சவரம் பிற்கு உட்பட்டு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையான மிகை ஊதியம் வழங்கப்படும்.
2) `ஏ' மற்றும் `பி' பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், 2012-2013 ஆம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப் பட்ட ஊதியம் பெறும் முழு நேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள்; தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள்; சிறப்புக் கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள்; ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள்; கிராம உதவியாளர்கள்; ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் சிறப்பு காலமுறை ஊதிய விகிதத்தில் பணிபுரிந்து வரும் பஞ்சாயத்து உதவியாளர்கள்; ஒப்பந்தப் பணியாளர்கள்; ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள்; தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஒரு பகுதி தினக் கூலிகளாக பணியாற்றி பின்னர் நிரந்தரப் பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு 1,000 ரூபாய் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
3) உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள்; பல்கலைக்கழக மானியக் குழு, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகிய வற்றின் கீழ் சம்பள விகிதம் பெறுபவர்கள்; அனைத் திந்தியப் பணி விதிமுறை களின் கீழ் சம்பளம் பெறுபவர்கள் ஆகியோருக்கும் இந்த மிகை, சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
4) ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறு பவர்கள், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் (தலையாரி மற்றும் கர்ணம்) ஆகியோருக்கு 500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும்.
இதன் மூலம், தமிழர் பண்பாட்டு விழாவான பொங்கல் திருநாளை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மகிழ்ச்சி பொங்க கொண்டாட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு 308 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
அனைவருக்கும் எனது பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்! இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.