Sunday, December 24, 2023

14 ஆவது கள்ளக்குறிச்சி ஒன்றிய வட்டாரத் தேர்தல் முடிவுகள் 2023

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 14 ஆவது தேர்தல் கள்ளக்குறிச்சி ஒன்றிய வட்டாரத்தில் 18.12.2023 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் கீழ்வருமாறு



Monday, May 31, 2021

TNPTF - கள்ளக்குறிச்சி வட்டார இணையவழி கருத்தரங்கு மற்றும் பொதுக்குழு கூட்டம்.

நாள்  : 02.06.2021 

கிழமை: புதன்

நேரம்    : 2.30 PM


TNPTF கள்ளக்குறிச்சி is inviting you to a scheduled Zoom meeting.

Topic: கள்ளக்குறிச்சி வட்டார பொதுக்குழு கூட்டம்.

Time: Jun 2, 2021 02:29 PM Mumbai, Kolkata, New Delhi


Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/5889881957?pwd=NVc5cEl6U1UvK0U2ZFhUTUR1eU90dz09

Meeting ID: 588 988 1957

Passcode: tnptf2021





Saturday, December 17, 2016

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!


நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார். ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது? அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம். கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்: கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்... "காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே.-" காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும். "ஆரோக்ய வாழ்வுக்கு நாட்டு வைத்தியம் அவசியம்" "இதை அனைவருக்கும் பகிர்வோம்" "ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்" தகவல் சித்த மருத்துவம்

குளிர்சாதனப்பெட்டி

🌺🌺🌺🌺🌺🌺🌺

குளிர்சாதனப்பெட்டி (Refrigerator) என்பது இன்று எல்லா இல்லங்களிலும் அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. ஆனால், பலருக்கும் தெரியாது அதில் பொதிந்துள்ள ஆபத்துகள் பற்றி!

குளிர்சாதனப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதன் நோக்கம் தொடங்கி, அதன் பயன்பாடு திசைதிரும்பியதால் அதிகரித்துள்ள உடல்நலப் பிரச்னைகள், ஃப்ரிட்ஜுக்கான மாற்றுவழி வரை விரிவாக

குளிர்சாதனப்பெட்டி… எதற்காக?

“மருந்தையும், சமைக்காத உணவையும் குளிர்படுத்தி பாதுகாத்து நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட மின்சாதனமே, இயந்திர தொழில்நுட்ப வரலாற்றில் முக்கியக் கண்டுபிடிப்பான குளிர்சாதனப்பெட்டி. உணவுப் பொருட்கள் அதிகமாகக் கிடைக்கும் காலங்களில் அவற்றைப் பாதுகாத்து, குறிப்பிட்ட அந்த உணவுக்கு தட்டுப்பாடு வரும் காலத்தில் பயன்படுத்துவது, உணவுகளை உற்பத்தி இடங்களில் இருந்து வேறு இடங்களுக்கு பாதிப்படையாமல் எடுத்துச் செல்வது, மருந்துகளைப் பாதுகாக்கப் பயன்படுத்துவது, பால், காய்கறி போன்ற சமைக்காத உணவுகளைப் பாதுகாத்துப் பயன்படுத்துவது… இதெல்லாம்தான் குளிர்சாதனப்பெட்டி கண்டுபிடிப்பின் நோக்கங்கள்.

இன்றோ, சமைத்த உணவுகளையும் ஃப்ரிட்ஜுக்குள் வைப்பது, பல வகையான உணவுப் பொருட்களையும் வைக்கும்போது சரியாக மூடாமலும், சரிவர பிரித்து வைக்காமலும் ஸ்டோர் செய்வது, போன வாரம் வாங்கிய காளான் முதல், மிகுந்துபோன குழம்பு வரை அடைத்து வைப்பது என… ஒவ்வொரு வீட்டிலும் குளிர்சாதனப்பெட்டி, கண்ணுக்குப் புலப்படாத விஷப்பெட்டியாகத்தான் நின்றுகொண்டிருக்கிறது!

குளிர்சாதனப்பெட்டி அவசியமா?

குளிர்சாதனப்பெட்டி அவசியம் இல்லை என்பதுதான் உண்மை. நம் முன்னோர் குளிர்சாதனப் பெட்டியை அறியவில்லை; அவர்களின் ஆரோக்கியத்துக்கும் குறைவில்லை. அவர்களிடம் இருந்த சுறுசுறுப்போ, நேரமோ நமக்கில்லை என்பதால், நம் சோம்பேறித்தனத்துக்கு சாமரம் வீசும் ஃப்ரிட்ஜை சார்ந்து வாழப் பழகிவிட்டோம். முழுக்க முழுக்க, மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களுக்காக கண்டிபிடிக்கப்பட்ட இந்த சாதனம், அவர்களின் சீதோஷ்ணம், வேலை, சூழலுக்குப் பொருந்தும். ஆனால், எல்லாவற்றிலும் ‘வெஸ்டர்னைஸடு’ ஆகும் நமக்கு, ஃப்ரிட்ஜும் விதிவிலக்கல்லாமல் போய்விட்டது. இதனால், அடிக்கடி காய்கறி வாங்க வேண்டிய வேலையும், மூன்றுவேளை சமைக்கும் வேலையும் குறையும் என்பதே பலரின் நினைப்பு. கொஞ்சம் மெனக்கெட்டால், இந்த சார்பை விலக்கலாம். இல்லையென்றால், அதில் பொதிந்துள்ள ஆபத்துகள் நம் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் குறைக்கும்.
செய்ய வேண்டிய விஷயங்கள்!

பெரியவர்கள், குழந்தைகள் உள்ள வீடுகளில் வயிற்றுவலி, பேதியில் இருந்து, ஒபிஸிட்டி எனப்படும் உடற்பருமன் வரை ஃப்ரிட்ஜ் உணவுகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் பல. ‘இவ்வளவு பாதிப்புகளா?! ஆனாலும், ஃப்ரிட்ஜ் இல்லாமல் இருக்க முடியாதே?’ என்பவர்களுக்கு… 10 கட்டளைகள்… இதோ!

1. 5 டிகிரி செல்சியஸ் முதல் 60 டிகிரி செல்சியஸ் வரையிலான டெம்பரேச்சரில் பாக்டீரியாக்கள் மிக வேகமாக வளரக்கூடும் என்பதால், -15 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் குளிர்சாதனப்பெட்டியின் டெம்பரேச்சரை செட் செய்ய வேண்டியது மிக முக்கியம். முடிந்தவரை 4 டிகிரி செல்சியஸ் அளவில் எப்போதும் வைத்துப் பயன்படுத்துவது நல்லது.

2.  மின்சாரம் தடைபட்டால் இரண்டு மணி நேரம் மட்டுமே குளிர்சாதனப் பெட்டியில் உள்ள உணவு கெடாமல் இருக்கும். அதற்குப் பின்னும் மின்சாரம் இல்லையெனில், உடனடியாக ஃப்ரிட்ஜில் உள்ள உணவுகளை வெளியே எடுத்து, சூடுபடுத்தி சாப்பிட்டுவிட வேண்டும். வெயில் காலத்தில், ஒரு மணி நேரத்துக்கு மேல் மின்சாரம் இல்லாமல் இருந்தாலே, உணவுகளை வெளியே எடுத்துப் பயன்படுத்திவிட வேண்டும்.

3. காய்கறி, பழங்கள், கீரைகள், உணவுகள், அசைவ உணவுகள் இப்படி அனைத்தையும் சரிவரப் பிரித்து ஸ்டோர் செய்ய வேண்டும். அதாவது, ஃப்ரீஸரில் அசைவ உணவுகள், டிரேயில் பால் பாக்கெட்டுகள், டோர்களில் கூல்டிரிங்ஸ், கீழ் டப்பாவில் காய்கறிகள், பழங்கள் போன்ற சமைக்காத உணவுகள், நடுத்தட்டில் மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்கள், மேல்தட்டில் சமைத்த உணவு… இப்படி ஒவ்வொன்றையும் அதற்கான இடத்தில் வைக்க வேண்டும். ஒவ்வொன்றையும் முறையாக இறுக்கமாகப் பேக் செய்து/ மூடி வைக்க வேண்டியது மிக அவசியம். ஒரு பொருளுக்கும் இன்னொரு பொருளுக்கும் இடையில் இடைவெளி இருக்க வேண்டியது மிக முக்கியம்.

செய்யக் கூடாத விஷயங்கள்!

4. என்னதான் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டாலும், உணவில் மாற்றம் நிகழத்தான் செய்யும். உதாரணமாக, பிரெட் உள்ளிட்ட மைதா சார்ந்த பொருட்களில் உருவாகும் பூஞ்சை, மற்ற உணவுப் பொருட்களையும் பாதிக்கும் என்பதால் நீண்ட நாட்களுக்கு எந்தப் பொருளையும் ஸ்டோர் செய்ய வேண்டாம்.

5. ஆட்டுக்கறி, கோழிக்கறி, வடித்த சாதம் போன்றவற்றில் பாக்டீரியா வளர்ச்சி அதிகமாக இருக்கும், அது மற்ற உணவுகளுக்கும் எளிதில் பரவக்கூடும் என்பதால் இவற்றை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்வதைத் தவிர்க்கவும்.

6. அதிக சூடான உணவுப் பொருட்களை ஒருபோதும் குளிர்சாதனப்பெட்டிக்குள் வைக்கக்கூடாது. அது அதிக மின்சாரம் செலவாக வழிவகுப்பதுடன், அந்த வெப்பம் ஃப்ரிட்ஜின் மொத்த டெம்பரேச்சரையும் தொந்தரவு செய்து, உணவுப் பொருட்களை பாதிக்கும்.

7. பொதுவாக, குறைந்த டெம்பரேச்சரில் இருந்து அதிக டெம்பரேச்சருக்கு உள்ளாகும்போது, அந்தப் பொருட்களில் பாக்டீரியாவின் வளர்ச்சி அதிகரிக்கும். எனவே, குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுக்கும் காய்கறிகள், உணவுகளை அவற்றிலிருக்கும் குளிர் தன்மை குறைந்ததும் சமைத்தோ, சூடுபடுத்தியோ பயன்படுத்தாவிட்டால் ஆபத்து.

8. சமைத்த உணவுகளை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்வது பரிந்துரைக்கத்தக்கதல்ல. காரணம், அதில் நுண்கிருமிகள், பாக்டீரியாக்கள் உருவாகி பாழாவதோடு, மற்ற உணவுப் பொருட்களையும் பாதிக்கும். இதில் சிலர் சமைத்து, உள்ளே வைத்து, வெளியே எடுத்து சூடுபடுத்தி, மீண்டும் உள்ளே வைத்து என்று பயன்படுத்தினால் அது உணவாக இருக்காது, விஷமாகிவிடும்.

9. கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள், நுண்சத்து குறைபாடு உள்ளவர்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.

10. குளிர்சாதனப்பெட்டியில் வைக்கும் உணவுகளில் புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து போன்றவற்றில் பெரிதாக மாற்றம் ஏற்படாது என்றாலும், சுவை, விட்டமின் சத்து குறைவதுடன், போனஸாக பாக்டீரியா, பூஞ்சைத் தொற்று கிடைக்கும். எனவே, எச்சரிக்கை தேவை!

ஃபிரிட்ஜ்… உணவுப் பொருட்களை ஃப்ரெஷ்ஷாக எடுத்து சாப்பிடத்தானே அன்றி, அழுகும் நிலைக்கு முன்வரை வைத்திருந்து சாப்பிட அல்ல என்பதை நினைவில் கொள்க!’’

கருப்புப் பணம்


கறுப்புப் பண களஞ்சியமாக, தமிழகம் விளங் குவதை உணர்த்தும் விதமாக, தமிழகத்தில், எட்டு மாதங்களில், 2,262 கோடி ரூபாய் அள விற்கு, பதுக்கல் சொத்துக்கள் கணக்கில் கொண்டு வரப்பட்டு உள்ளன. இந்த ஆண்டில், கறுப்புப் பண பதுக்கலில், நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. ரூ.63 ஆயிரம் கோடி : கறுப்புப் பண பதுக்கலை வெளியே கொண்டு வருவதற்காக,மத்திய அரசு, பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்காக, கறுப்புப் பணத்தை தாமாக முன்வந்து தெரி விக்கும் திட்டம், செயலுக்கு வந்தது. அதன் மூலமாக, நாடு முழுவதும், 63 ஆயிரம் கோடி ரூபாய், கணக்கில் காட்டாத கறுப்புப் பணம் வெளியே வந்தது. அதில், தமிழகத்தில், கணக்கில் காட்டப்படாத, 2,700 கோடி ரூபாய் கறுப்புப் பணம் கணக்கில் வந்தது. இந்நிலையில், நவ., 8ல், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியானது; அதைத் தொடர்ந்து நடந்த சோதனைகளிலும், தமிழ கத்தில் நிறைய சிக்கின. இதில், கட்டுக்கட்டாக, 2,000 ரூபாய் புதிய நோட்டுகள் சிக்கியது தான், வருமான வரித்துறையை அதிர்ச்சி அடையச் செய்தது. இதையடுத்து, வர்த்தக வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியில், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையில் இறங்கி உள்ளனர்.இதற்கிடையில், இந்த நிதியாண் டில், வருமான வரி சோத னைகள் மூலமாக, கணக்கில் கொண்டு வரப் பட்ட கறுப்புப் பணத்தில், நாட்டிலேயே முதலிடத்தை, தமிழகம் பிடித்துள்ள தகவல்தெரியவந்துள்ளது. இது குறித்து, வருமான வரித்துறை வட்டாரம் கூறியதாவது: நாட்டில், 18 வருமான வரி இயக்கு னரகங்கள் உள்ளன. அதில், தமிழகம் - புதுச்சேரி இயக்குனரகத்தில் தான், கறுப்புப் பணம் மற்றும் தங்க நகைகள் அதிக அளவில் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. மணல் கான்ட்ராக்டர், சேகர் ரெட்டி தொடர்பான சோதனையில், 132 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும், 50 கோடி ரூபாய் மதிப்புள்ள, 177 கிலோ தங்கம் சிக்கியது. கறுப்பு பணம் : வருமான வரித்துறை வரலாற்றில், ஒரு தனி நபரிடம் நடத்திய சோதனையில், இவ்வளவு பெரிய தொகை, இதுவரை சிக்கியதில்லை. அது மட்டு மின்றி, இந்த நிதியாண்டில், நாடு முழுவதும் நடந் துள்ள வருமான வரி சோதனையில், தமிழகம் - புதுவை பிராந்தியத்தில் தான் கறுப்புப் பணம், அதிக அளவில் கணக்கில் வந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில்,2016 ஏப்ரல், 1 முதல், 68 சோதனை கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில், 307 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும், 84 கோடி ரூபாய் மதிப்புடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த சோதனைகளில் சிக்கிய ஆவணங்கள் வாயி லாக, சொத்துக்களும் கணக்கில் கொண்டு வரப் பட்டன. அந்த வகையில், எட்டு மாதங்களில், இதுவரை, 2,262 கோடி ரூபாய்க்கும் அதிக மான கறுப்புப் பணத்தை கணக்கில் கொண்டு வந்துள்ளோம். இந்தியாவில் உள்ள, 18 இயக் குனரகங்களில், வேறு எங்கும் இந்த அள விற்கு கறுப்புப் பணம், கணக்குக்கு கொண்டு வரப்படவில்லை. இந்த, 2,262 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு, இனி, அவர்கள் வரி செலுத் தியாக வேண்டும்.இவ்வாறு வருமான வரி வட்டாரம் கூறியது. முதல் மூன்று இடமும் நமக்கே! : இந்த ஆண்டில் இதுவரை நடந்த பறிமுதல் களில், சேகர் ரெட்டிக்கு தான் முதலிடம். தமிழகம் - புதுச்சேரியில் செயல்படும் கல்வி நிறுவனங்களில் சிக்கிய, 83 கோடி ரூபாய் தான், இரண்டாம் இடத்தில் உள்ளது. முன் னாள் தி.மு.க., அமைச்சர், ஜெகத்ரட்சகன் வீட் டில் நடந்த சோதனையில், 27 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும், 23 கோடி ரூபாய் தங்கம் பறிமுல் செய்யப்பட்டது, மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

10 ஆம்வகுப்பு தேர்வு


HSC PRIVATE MARCH 2017 EXAM NOTIFICATION | மார்ச் 2017 மேல்நிலைப் பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்-லைனில் 19.12.2016 (திங்கட் கிழமை) முதல் 24.12.2016 (சனிக் கிழமை) மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வரும29ம் தேதி முதல் Atm அனைத்தும் இயங்கும் -Rbi


ரூபாய் நோட்டு தட்டுப்பாடு வரும் திங்கள்கிழமை முதல் தீரும் என சென்னை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் மிஷின்களில் வைப்பதற்கு செய்யவேண்டிய பணிகள் நிறைவடைந்துவிட்டன எனவே அன்றிலிருந்து அனைத்து ஏடிஎம்களும் முழு அளவில் இயங்கும் என்றும், ₹500 நோட்டுகள் தாரளமாக புழக்கத்திற்கு வரும் என்றும் தெரிவித்துள்ளனர்.